விஷ்ணுஸஹஸ்ரநாமம் - 19
166. வேத்ய: -வேதிதும் யோக்ய:. அறியவேண்டிய ஒரே உண்மையாக இருப்பவர்,
'ஏகவிக்ஞாநேன ஸர்வ விஞ்ஞானம்,' என்று உபநிஷதத்தில் கூறப்பட்ட, எது ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாக அர்த்தமோ அந்த ஞானம்தான் உண்மையான அறிவு. அதாவது வேத்யம்
. 'வேதை: ச ஸர்வை: அஹம் ஏவ வேத்ய:,'- ப.கீ. 15.15." வேதங்களால் அறியப்படுபவன் நானே" என்று சொல்கிறார்.
'கற்பாரிராமபிரானை அல்லால் மற்றுங்கற்பரோ,' திருவாய்மொழி 7.5.1
167. வைத்ய: - சாமான்ய அர்த்தத்தில் பார்த்தால் வைத்தியர் என்று பொருள். பேஷஜம், பிஷக் ( மருந்தும் வைத்தியனும் அவனே) என்ற அர்த்தம் உள்ள நாமாக்கள் பிறகு வருவதால் இதற்கு வேறு பொருள் கூற முடியுமா என்று பார்த்தால்,
வேத்யதே யயா ஸா வித்யா. எதனால் எல்லாம் அறியப்படுகிறதோ அது வித்யா. வித்யாயா: அயம் வைத்ய: . இதுதான் வித்யா: என்ற சொல்லின் பொருள். வித்யாஸ்வரூபன்.
168. ஸதாயோகீ-யோகம் என்ற சொல் யுஜ் என்ற வினைச்சொல்லில் இருந்து வந்தது. யுஜ் என்றால் சேர்தல். பகவான் எப்போதும் ஜீவர்களுடன் அவரவர் கர்மாவை சேர்க்கிறான் . பிறகு அவர்களை தன்னுடன் சேர்க்கிறான். இதை இடையறாது செய்வதால் ஸதாயோகீ எனக்கூறப்படுகிறான்.
169.வீரஹா-விருத்தஹனனாத் வீர: -கொடியவரை சம்ஹரிப்பவர். தன்னை அடைவதற்கு இடையூறாக இருப்பவைகளை எல்லாம் சம்ஹரிப்பவர். அதாவது நம் உள்மன எதிரிகளான காமக்ரோதாதிகள்.
170.மாதவ:-72 வது நாமம். இங்கு மறுபடி அதை சொல்லியிருப்பது வேறு அர்த்தத்தில்.
'மா வித்யா ச ஹரே: ப்ரோக்தா தஸ்யா: : ஈச: யதோ பவான். தஸ்மாத் மாதவ இதி நாமா அஸி.' மா என்றால் ஹரிவித்யா . அதற்கு அதிபன் ஆனபடியால் மாதவன் என்று சொல்லப்படுகிறான்.
மா என்பதற்கு அளவு என்றும் பொருள். மாத்வா ஜகத் தூனயதி இதி மாதவ: . அவன் உலகத்தை அளந்த பின் அதை செயல் பட வைக்கிறான்.
171.மது: - ஞானிகளுக்கும் பக்தர்களுக்கும் தேன் போன்றவன். மதுராதிபதேரகிலம் மதுரம்.
172. அதீந்த்ரிய: புலன்களுக்கெட்டாதவர். கீதையில் பகவான் சொல்வது, பிரம்மஞானம் 'புத்திக்ராஹ்யம் அதீந்த்ரியம்." (ப.கீ. 6.21) இந்த்ரியங்களால் அறிய முடியாதது, புத்தியினால் ஓரளவு அறியக்கூடியது.
'அசப்தம் , அஸ்பர்சம் , அரூபம், அவ்யயம், ததா அரசம், நித்யம் , அகந்தவத் ச யத் ,; ( கடோபநிஷத்.)
பிரம்மம் என்பது காதால் கேட்டோ, ஸ்பர்சம் மூலமோ , கண்ணால் பார்த்தோ, சுவைத்துப்பார்த்தோ, முகர்தல் மூலமோ அறியமுடியாதது. அது மாற்றமில்லாதது. நித்தியமானது.
173.மஹாமாய: -மஹதீ மாயா யஸ்ய ஸ: - மகத்தான மாயையை உடையவர். 'தைவி ஹ்யேஷா குணமயி மம மாயா துரத்யயா,' (ப.கீ. 7.14.)முக்குணங்களால் கொண்ட இந்த என்னுடைய மாயையானது கடக்க முடியாதது.
அடுத்த 6 நாமங்கள் பகவான் என்ற சொல்லில் அடங்கும் 6 குணங்களான ஐஸ்வர்யம், பலம்,ஞானம், வீர்யம், தேஜஸ், சக்தி இவை பற்றியவை.
No comments:
Post a Comment