Friday, March 8, 2019

Vishnu sahasranama 85 to 95 in tamil

Courtesy:Smt.Dr.Saraoja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்-12

86.ஸுரேச: -சோபனம் ராதி இதி ஸுர: நன்மையை தருபவன் .தேவர்கள் பல நன்மைகளை கொடுப்பதால் ஸுரர் எனப்படுபவர். இதற்கு எதிர்பதம் அசுரர்.கேடு விளைவிப்பவர் , பகவான் சுரர்களின் தலைவன் ஆதலால் ஸுரேசன் எனப்படுகிறார் . அவருடைய அருளினால்தான் தேவர்களுக்கு நன்மை செய்யும் தகுதி ஏற்படுகிறது.

87. சரணம் – எல்லோருக்கும் அடைக்கலமாக இருப்பவர்.

88. சர்ம-சர்ம என்றால் சுகம், மகிழ்ச்சி. ஆனந்தமான ஆனந்தத்தின் இருப்பிடமாக இருப்பதால் சர்ம எனப்படுகிறார். ஆனந்தச்வரூபன்.

89.விச்வரேதா: -ரேதஸ் என்றால் ஜீவ அணு . விச்வச்ய ரேதா பிரபஞ்சத்தின் காரணம்.யோனி என்றால் கர்பப்பை . ரேதஸ் என்பது அதில் நுழைந்து ஜீவனை உண்டுபண்ணுவது. பகவான் ரேதஸ் மட்டுமின்றி ஜகத்யோநியாகவும் இருக்கிறான் ' மமயோனி:மஹத் ப்ரம்ம தஸ்மின்கர்பம் ததாம்யஹம்..' (ப.கீ. 14..3 ) இங்கு ப்ரம்ம என்ற சொல் மூலப்ரக்ருதியைக் குறிக்கிறது. சாந்தோக்ய உபநிஷத்தில் 'தத் ஐக்ஷத பஹுஸ்யாம் பிரஜாயேய' பிரம்மம் தான் பலவாக ஆக சங்கல்பித்தது . என்ற வாக்கியம் காண்கிறோம். இதுவே பிரகிருதி எனப்படும். இதனுள் புகந்து அதற்கு உயிர் கொடுப்பதுதான் ஸ்ருஷ்டிதத்வம். ப்ரம்ம அல்லது மஹத் என்றுசொல்லப்படும் பிரகருதி யோனி பிரபஞ்சத்தின் கர்பப்பை என்று சொல்லப்படுகிறது. அதனுள் புகுந்து அதற்கு உயிர் கொடுப்பதையே கர்ப்பம் தருகிறேன் என்று கீதையில் சொல்கிறான் பகவான்.அதனால் விச்வரேதா: என்னும் நாமம்.

90. ப்ரஜாபவ: -பிரஜா: தஸ்மாத் உத்பவந்தி இதி ப்ரஜாபவ: - எல்லாஉயிர்களும் அவரிடம் இருந்து உண்டாகின்றன. இது முந்தைய நாமத்தின் தொடர்ச்சியாகும்.

91. அஹ:-1.ந ஜஹாதி இதி அஹ:-எவரையும் கைவிடுவதில்லை என்பதனால் அஹ: எனப்படுகிறான்.
2. அவித்யாயா: அவபோதஹேது: - அறியாமையிலிருந்து விழித்து எழக் காரணமாக உள்ளவன்.ஞானத்தின் காரணம். ஞானச்வரூபன்
.3.அஹ என்றால் பகல். பகல் போல் பிரகாசிப்பவன். ஞான சூரியன். தேஷாம் ஆதித்யவத் ஞானம் பிரகாசயதி தத்பரம்.' (ப.கீ..5.16) அக்ஞானம் அகன்றபின் ஞானம் சூரியனைப்போல் பிரகாசிக்கிறது.

92. ஸம்வத்ஸர:- ஸம்வத்ஸரம் என்றால் வருஷம். இங்கு வருஷம் முதலிய கால நிர்ணயங்களுக்கு ஆதாரமானவன் என்று பொருள்
. 
ஸம்வஸந்தி அஸ்மின் க்ரஹநக்ஷத்ரருதுதேவதா: இதி ஸம்வத்ஸர: க்ரஹங்கள் நக்ஷத்திரங்கள் இவைகளின் சஞ்சாரம் இறைவனாலேயே இயக்கப்படுகிறது அதனால் ஸம்வத்ஸர; எனப்ப்டுகிறான்.

ப்ரபுத்தேஷு சமுத்தரணாய ஸம்வஸதி, ஞானிகளின் உள்ளே அவர்களை சம்சாரத்தினின்று விடுவிப்பதற்காக வசிக்கிறான். அதனாலும் ஸம்வத்ஸர்: எனப்படுகிறான்

93. வ்யால:-லா என்றால் எடுத்துக்கொள்வது. விசேஷேண லாதி இதி வ்யால: . அதாவது பக்தர்களை தன்னுடையவராக ஏற்று தனதாக்கிக் கொள்பவன்.

வ்யால என்றால் பாம்பு, மதம் கொண்ட யானை என்றும் பொருள். பகவானுக்கு இவை எப்படிப் பொருந்தும் என்றால் ஒரு சர்ப்பத்தைப்போல்,பக்தர்களை சுற்றிக்கொண்டு தன்னிடம் இழுத்து வருபவன். ஒரு மத யானையைப்போல் அவர்கல் தன்னை அடைய இடையூறாக இருக்கும் எதையும் சாய்ப்பவன்.

94. ப்ரத்யய:- ப்ரதீயதே அஸ்மின் இதி ப்ரத்யய: -நம் ஆன்மா பகவானிடம் ஒப்படைக்கப்படுவதால் ப்ரத்யய: எனப்படுகிறான்.

ப்ரதீதி: ப்ரக்ஞா. த்த்ரூபத்வாத் ப்ரத்யய: ப்ரதீதி என்றால் ஞானம் பகவான் ஞானச்வரூபனாக இருப்பதால் ப்ரத்யய: எனப்படுகிறான்.

95.சர்வதர்சன: எங்கும் கண்களை உடையவர். எல்லாவற்றையும் அறிந்தவர் .' சர்வத: பாணி பாதம் தத் சர்வதோ அக்ஷி சிரோமுகம்,' (ப. கீ. 13.13) எங்கும் கைகள் கால்கள் தலை கண்கள் , முகம். சர்வவ்யாபியான பிரம்மத்தை குறிக்கும் சொற்கள். 'சஹஸ்ரசீர்ஷாபுருஷ: சஹஸ்ராக்ஷ: சஹஸ்ரபாத் ,'புருஷ ஸூக்தம். . அகில உலகமும் அவன் உருவமே என்ற அர்த்தத்தில் ஆயிரம் தலைகள் கண்கள் பாதங்கள் இவை சொல்லப்படுகின்றன. சர்வம் பிரம்ம மயம் என்பதே இதன் பொருள்.


No comments:

Post a Comment