Friday, March 29, 2019

Sri chakra


ஸ்ரீ சக்கரம்

ஸ்ரீ சக்கரம் அவளுடைய இல்லம். ஸ்ரீ சக்கரம் நான்கு மேல் நோக்கிய கோணங்கள், இவை சிவ சக்கரங்கள் எனப்படும், கீழ் நோக்கிய ஐந்து சக்கரங்கள் சக்தி சக்கரங்கள் எனப்படும். இந்த ஒன்பது முக்கோணங்களும் இடைவெட்டி மொத்தம் நாற்பத்தி நான்கு முக்கோணங்களை உண்டாக்கும். இது நடுவில் உள்ள பிந்து சக்கரத்தினையும் சேர்த்த பகுதியினையும் சேர்த்த எண்ணிக்கையாகும். ஒன்பது முக்கோணங்களில் எட்டினை மட்டும் கணக்கெடுத்தால் மிகுதி உள்ள ஒரு முக்கோணம் நிலையானதாக அசைவற்று இருக்கும். நிலைப்பண்பு என்பது சிவத்தினுடைய தன்மை, இயக்கம் என்பது சக்தியினுடைய தன்மை. இந்த சக்கரங்கள் சக்தியின் இயக்கத்தால் லலிதையின் இல்லமாக்கப் பட்டிருகின்றது. ஸ்ரீ சக்கரம் பிரபஞ்ச சக்கரம் எனவும் கூறப்படுகிறது. ஸ்ரீ சக்கரத்திற்கும் குண்டலினி பயணிக்கும் ஒன்பது சக்கரங்களினையும் ஒப்பிட முடியும். (ஆறு சக்கரங்கள் + சஹஸ்ராரம்+குல சஹஸ்ரம்+அகுல சஹஸ்ரம்). ஸ்ரீ சக்கரம் மனித உடலுடனும் ஒப்பிட முடியும். மேல் சக்கரங்கள் நாபிக்கு மேல் உள்ள பகுதிகளையும், கீழ் சக்கரங்கள் நாபிக்கு கீழ் உள்ள பகுதிகளையும் குறிப்பிடும். சக்தி கோணம் தோல், இரத்தம், மூளை, சதை, எலும்புகளையும் சிவ கோணங்கள் ஆன்மா பிராணன், தேஜஸ், விந்தினையும் குறிப்பிடுகிறது. சக்தி கோணம் பருப்பொருட்களையும் சிவ கோணங்கள் சூஷ்ம [பொருட்களையும் குறிப்பிடுகிறது. இந்த சூஷ்ம ஸ்தூல பொருட்கள் ஒருங்கிணையும் போது உயிர்ப்பு தோன்றுகிறது. ஐந்து சக்திக்கோணங்களும் ஆகாயம், வளி, அக்னி, நீர், மண் என்ற பஞ்ச பூதங்களை குறிப்பதாகவும், இவற்றின் வேற்றுமை கர்மேந்திரியங்கள் ஐந்தாகவும், ஞான இந்திரியங்க்களாகவும், தன்மாத்திரைகளாகவும்உருப்பெறுவதையும் குறிக்கும். சிவ கோணங்கள் நான்கும் அந்தக்கரணங்கள் எனப்படும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவற்றையும் குறிக்கும்.

பிந்து என்பது உள்ளே காணப்படும் கீழ் நோக்கிய உள்ளே காணக்க்படும் புள்ளியாகும். இந்த பிந்துவே உலக தோற்றத்திற் கெல்லாம் காரணமாக கருதப்படுகிறது. இது சிறிய விதை ஒன்று பெரிய மரத்தினை உண்டாக்குவதை உதாரணமாக கூற முடியும். இந்த பிந்துவைச் சூழ உள்ள பகுதி ஆனந்தத்தினை தருவது, இதனாலேயே சர்வானந்தமயச் சக்கரம் எனப்படுகிறது. இந்த ஆனந்ததிற்கு காரணம் சிவனும் சக்தியும் இந்த சக்கரத்தில் இணைந்து உன்னார்கள் (நாமம் 999). இந்த சக்கரம் பிந்துவாக சஹஸ்ராரத்தில் தியானிக்கப்படுகிறது. இங்கு சிவசக்தி ஐக்கியம் மட்டும் தியானிக்கப்படுவதில்லை, ஒருவருடைய இஷ்ட தேவதை, மற்றும் குருவினையும் சஹஸ்ராரத்தில் தியானிக்க முடியும். ஸ்ரீ சக்கரத்தினை வணங்கும் செயன்முறையினை நவாவரண பூஜை என்பார்கள். நவ என்றால் ஒன்பது, ஆவரணம் என்றால் சுற்றுக்கள் எனப்பொருள் படும். இந்த பிந்துவினை அடைய முதல் பல தேவதைகளை துதிக்க வேண்டும். முதல் ஆவரணத்தில் 28 தேவதைகள், இரண்டாவது ஆவரணத்தில் 16 தேவதைகள், மூன்றாவது ஆவரணத்தில் 08 தேவதைகள், நான்காவது ஆவரணத்தில் 14 தேவதைகள், ஐந்தாவது ஆவரணத்தில் 10 தேவதைகள், ஆறாவது ஆவரணத்தில் 10 தேவதைகள், ஏழாவது ஆவரணத்தில் 08 தேவதைகள், எட்டாவது ஆவரணத்தில் 15 தேவிகளும் 04 ஆயுதங்களும் ( நாமாக்கள் 08 -11 வரை), ஒன்பதாவது நடு முக்கோணத்தில் ஐந்து ஐந்து தேவதைகள் ஒவ்வொரு பக்கமாக பதினைந்து திதி நித்தியாக்களும் முக்கோணத்தின் சுற்றில் வணங்கப்படும். லலிதாம்பிகை பிந்து ஸ்தானத்தில் வணக்கப்படும். இந்த தேவதைகள் தவிர்ந்து குரு பரம்பரையினரும் இந்த முக்கோணத்தின் மேலே வணங்கப்படுவர். ஸ்ரீ சக்கரமும் மஹா மேருவும் ஒன்றே, மஹா என்றால் பெரிய என்றும்ம் மேரு என்றால் மலை என்றும் பொருள் படும். தேவி மகா மேருவின் உச்சியில் வசிக்கிறாள், ஸ்ரீ சக்கரத்தின் முப்பரிமாண வடிவமே ஸ்ரீ சக்கரம் எனப்படும். ஸ்ரீ சக்கரம் என்பது தட்டையான வடிவம், பிந்து புள்ளியாக குறிக்கப்படும், மஹாமேருவில் பிந்து உச்சியில் காணப்படும். நன்றி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி

No comments:

Post a Comment