Thursday, February 28, 2019

Rudraksha an aricle in tamil

 ருத்ராக்ஷம் 

ஒரு முக ருத்ராட்சம் பிரம்ம ஹத்தி செய்த பாபத்தை போக்கும் நெருப்பினால் ஏற்படும் பயத்தை தணிக்கும் ஜல பிரவாஹத்தை எதிர்த்துச் செல்லும் சக்தி வாய்ந்தது

இருமுகம் அர்த்தநாரீஸ்வரர் சொரூபம் மற்றும் தேவிபாரதியின் சொரூபமாகும் கூறப்பட்டுள்ளது

பசு மாட்டை அடிப்பது பசுவை துன்புறுத்துவது முதலான கோஹத்தி என்னும் மகா பாபம் இரண்டு முக ருத்ராட்சத்தை அணிவதால் விலகும்

மூன்று முகமுள்ள ருத்ராக்ஷம் மூன்று அக்னியின் சொரூபம்நாம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தையும் இது எரித்துவிடும் மேலும் கத்தி போன்ற ஆயுதங்களால் நமக்கு ஏற்படும் ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும்

பிரம்ம தேவரின் சொரூபமான நான்குமுக ருத்ராட்சம் வேதம் தெரிந்த அந்தணர்களுக்கு அறியாமல் செய்த இம்சையான நரஹத்தி எனும் பாபத்தைப் போக்கும்.

காலாக்னியின் சொரூபம் என ஐந்து முக ருத்ராட்சம் (அறியாமல் செய்த) மாற்றார் மனைவியிடம் தவறாக நடந்து கொள்ளுதல் என்னும் பரஸ்த்ரீகமன பாபத்தையும், சாப்பிடக் கூடாத இடங்களில் சாப்பிடக்கூடாத பொருளை சாப்பிடக்கூடாது வர்களுடன் சேர்ந்து சாப்பிட்டதால் ஏற்பட்ட பாவங்கள் போக்கிடும்.

சுப்பிரமணியரின் சொரூபமான ஆறு முக ருத்ராக்ஷத்தை தரிப்பவர்களுக்கு தன்னை அறியாமல் சிறுகுழந்தைகளுக்கு இம்சை செய்தாலும் கருச்சிதைவு போன்ற செயல்களினாலும் உண்டான  சிசுஹத்தி பாபங்கள் விலகும்.

ஏழு முகம் உள்ள ருத்ராட்சம் ஆதிசேஷன் என்னும் சர்ப்ப ராஜாவின் ஸ்வரூபம். அறியாமல் பிறரின் பொருளை, தங்கத்தை திருடுதல் ஏற்படும் சுவர்ண ஸ்டெஎம் என்னும் பாபங்களைப் போக்கும் சக்தி வாய்ந்தது.

எட்டு முகம் ருத்ராட்சம் ஸ்ரீ மஹாகணபதி ஸ்வரூபம் அனைத்து இடையூறுகளையும் போக்குவதுடன் பொய் சொல்வதால் ஏற்படும் பாபங்களைப் போக்கும்.

சிவசாயுஜ்யத்தை  அளிக்கும் 9 முக ருத்ராட்சம் காலபைரவரின் சொரூபம் . இது நரக பாதைகளிலிருந்து நம்மை காப்பாற்றும்.

பத்து முகமுள்ள ருத்ராட்சம் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் சொரூபம் கண்ணுக்குத் தெரியாமல் அவ்வப்போது ஏற்படும் பூத, பிரேத, பிசாசுகளின், உபாதைகளில் இருந்து நம்மை ரட்சிக்கும் சக்தி வாய்ந்தது.

ஸ்ரீ ருத்ரனின் சொரூபமான 11 முகமுள்ள ருத்ராட்சம் அணிந்து கொள்பவருக்கு ஜபம், தானம், யக்ஞம், முதலிய தர்மங்களை செய்த பலன் ஏற்படும்.

சூரியனின் ஸ்வரூபமான பன்னிரண்டு முக ருத்ராட்சம் அனைத்து வியாதிகளையும் நீக்கி உடல் ஆரோக்கியத்தை தரும் சக்தி வாய்ந்தது.

அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் சக்தி வாய்ந்த 13 முக ருத்ராட்சம் அணிந்து கொள்பவரின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை.

பதினான்கு முக ருத்ராட்சம் ஸ்ரீகண்ட பரமேச்வர ஸ்வரூபம். குடும்பத்தில் தகுந்த காலத்தில் நல்ல குழந்தைகள் ஏற்பட்டு வம்சம் தழைக்க செய்யும் சக்தி வாய்ந்தது இது.

ருத்ராட்சம் களிலேயே மேலும் சிறப்பு வாய்ந்தது இரட்டை ருத்ராக்ஷங்கள் அதில் ஒன்று பெரியதாகவும் மற்றொன்று கொஞ்சம் சிறியதாகவும் இருக்கும்.  அவைகளை கௌரிசங்கர் ருத்ராக்ஷம் எனப்படும்.

ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டு ஜபம் தபஸ் செய்தால்தான் பலன் என்பதில்லை அதை சிறிதுநேரம் அணிந்திருந்தாலே உடலில் ஒரு புது தெம்பு பிறக்கும் நம் உடலில் ஒரு புதிய சக்தி ஒன்று கலந்தது உணரமுடியும்.

ருத்ராட்சத்தைக் கழுத்தில் எப்போது போட்டுக்கொள்ளலாம்?

ருத்ராக்ஷத்தை எப்பொழுதும் போட்டு கொண்டிருப்பதால் மனவலிமையும் உடல் ஆரோக்கியத்தையும் தரும் மேலும் சில சித்திகளை பெற்று தரும் ஆனால் ருத்ராக்ஷத்தில் ஸ்ரீ ருத்ராம்சம் அடங்கியிருப்பதால் ஆசாரத்துடன் இருக்கும்போது அதை அணிந்து கொள்ள வேண்டும்.

பூஜை ஜபம் பாராயணம் போன்ற காலங்களில் மட்டும் அணிந்துகொண்டு விட்டு மற்ற நேரங்களில் ருத்ராக்ஷத்தை கழட்டி வைத்துவிடுவது நல்லது எப்போதும் ருத்ராக்ஷத்தை அணிந்து கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் ஒரே ஒரு ஐந்து அல்லது ஆறு முக ருத்ராட்சத்தை தங்கம் வெள்ளி அல்லது செப்புத் கம்பியில் கோர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ளலாம் அல்லதுருத்ராக்ஷத்தின் இரண்டு பக்கங்களில் தங்கம் வெள்ளி அல்லது தாமிரத்தால் குப்பி செய்து அரவணைத்து அதை நூலில் கோர்த்து கழுத்தில் எப்போதும் போட்டுக்கொள்ளலாம் இவ்வாறு தங்கம் வெள்ளி தாமிரம் சேர்ந்து போட்டுக்கொள்ளும் ருத்ராக்ஷம் எப்போதும் சுத்தமானது எப்போதும் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment