Friday, February 15, 2019

Aparadha stotram

ஸ்ரீ அபராத சோதணா.
(விக்ரஹ ஆராதனை போது அபராதங்களுக்காக மன்னிப்பு வேண்டுதல்)
******************************

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் 
பக்தி ஹீனம் ஜனார்தனா
யத் பூஜிதம் மயா தேவ 
பரிபூர்ணம் தத் அஸ்து மே

ஓ கடவுளே ! ஓ ஜனார்தனரே!  நான் முறையான பக்தி இல்லாமல், முறையான மந்திரங்கள் இல்லாமல், முறையான விதிமுறைகளை அனுஷ்டிக்காமல் செய்யும் சிறிய பூஜையையும் ஏற்று அதனை முழுமை அடையச் செய்வீராக

யத் தத்தம் பக்தி மாத்ரேன 
பத்ரம் புஷ்பம் பலம் ஜலம்
ஆவேதிதம் நிவேத்யான் து 
தத் க்ருஹானானு கம்பயா

நான் பக்தியோடு எதை அர்பணித்தாலும் – இலையோ, பூவோ, நீரோ, பழமோ - தையை கூர்ந்து அதை தங்கள் காரணமற்ற கருணையால் ஏற்று கொள்ள வேண்டும்.

விதி ஹீனம் மந்த்ர ஹீனம் 
யத் கின்சிட் உபபாதிதம்
க்ரியா மந்த்ர விஹீனம் வா 
தத் சர்வம் க்ஷந்தும் அர்ஹஸி

முறையான மந்திரங்கள் இல்லாமலும் முறையான விதிமுறைகளை பின்பற்றாமலும் நான் உங்களை வணங்கி இருந்தால் தையை கூர்ந்து தாங்கள் என்னை மன்னித்தருள வேண்டும்.

அஞ்ஞானாத் அதவா ஞானாத்
அசுபம் யன் மயா க்ருதம்
க்ஷ்ந்தும் அர்ஹஸி தத் சர்வம்
 தாஸ்ஏனைவ க்ரிஹான மம்

ஸ்திதி சேவா கதிர் யாத்ரா
 ஸ்ம்ரிதிஷ் சிந்த ஸ்துதிர் வச
பூயாத் சர்வாத்மனா விஷ்ணோ 
மைதீயம் த்வயி சேஸ்திதம்

நான் எனது அறியாமையினாலோ அல்லது தெரியாமலோ ஏதேனும் அமங்கலமான செயல்களை செய்திருந்தால் தயை கூர்ந்து அதை மன்னித்து என்னை தங்களின் தாழ்ந்த சேவகனாக ஏற்றுக்கொள்வீராக. நான் எப்பொழுதும் உங்கள் சேவையில் ஈடுபடவேண்டும்; நான் எப்பொழுதும் புனித யாத்திரை மேற்கொள்ளவேண்டும்; நான் எப்பொழுதும் உங்களை பற்றிய நினைவிலேயே இருக்க வேண்டும்;என்னுடைய வார்த்தைகள் எப்பொழுதும் உங்களை புகழ வேண்டும். ஓ பகவான் விஷ்ணுவே ! என்னுடைய மனம், உடல், எண்ணங்கள், செயல்கள் அனைத்தும் உங்களுக்காக ஈடுபடுத்த வேண்டுகிறேன்.

அபராத சஹஸ்ராணி
க்ரியந்தி ஹர்நிஷம் மயா 
தாசோ ஹம் இதி மாம் மத்வா 
க்ஷ்மஸ்வ மதுசூதனா

அல்லும் பகலும் நான் ஆயிரக்கணக்கான அபராதங்களை செய்கிறேன். ஓ மதுசூதனரே! தங்கள் என்னை தங்களுடைய தாழ்ந்த சேவகனாக ஏற்று என்னை மன்னித்தருள்வீராக.

ப்ரதிஞா தவ கோவிந்த 
ந மே பக்தஹ் ப்ரணாஷ்யதி
இதி சம்ஸ்ம்ரித்ய சம்ஸ்ம்ரித்ய 
பிராணான் சம்தாரயாமி அஹம்

ஓ கோவிந்தரே! "என்னுடைய பக்தனுக்கு என்றும் அழிவில்லை" என்று தாங்கள் வாக்களித்துளீர்கள். இதை நான் மீண்டும் மீண்டும் நினைத்து என்னுடைய பிராணனை தக்கவைத்துள்ளேன்.

No comments:

Post a Comment