Monday, October 29, 2018

Narasimha in sleeping pose

நரசிம்மர் சயனக் கோலம்...

பள்ளிகொண்ட கோலத்தில் அரங்கனை தரிசித்துள்ளோம். ஹிரண்யனை சம்ஹாரம் செய்த நரசிம்மமூர்த்தியும் களைத்துப் போய் சயன கோலத்தில் காட்சி அளிப்பதை திருவதிகை (பண்ருட்டி அருகில்) சரநாராயண திருத்தலத்தில் தரிசிக்கலாம். ஸ்ரீ நரசிம்மர் சயனக் கோலக் காட்சியை இக் கோயிலில் மட்டுமே காணலாம்.

திருமாலின் திவ்வியத்திருத்தலங்களில் இக்கோயிலில் தான் சயன நரசிம்மர் சயன திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார். இது ஒர் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும். மேலும் தாயாரும் உடன் எழுந்தருளியிருப்பதால் இது போக சயனம் ஆகும். இந்த சயன நரசிம்மர், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்து விட்டு, அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார்.
எழுநூறு ஆண்டுகளுக்கு முன் வேதாந்த தேசிகர் திருவஹீந்திரபுரம் செல்லும் போது இந்த சயன நரசிம்மரை வழிபட்டதாக கூறப்படுகிறது இந்த சயன நரசிம்மருக்கு ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
## ஜெயஸ்ரீ நரசிம்மா ##

No comments:

Post a Comment