Friday, April 6, 2018

Shock gives freedom -Spiritual story

🌸சூஃபி ஞானி பகாதினைப் பார்க்க ஒருவர் வந்தார்...

🌸பலவித தத்துவங்களையும் பலவிதமான முறைகளையும்...

கற்றறிந்த அவர், ஞானத்தின் விளிம்பில் இருந்தார்...

🌸தன் சிக்கலைத் தீர்த்து...
வழிகாட்டும்படி, அவர் ஞானியை வேண்டினார்...

🌸ஞானி பகாதின் கூறினார்...

"நீ கற்ற ஆன்மீகக் கல்வியை எல்லாம் விட்டுவிட்டு...

இங்கிருந்து ஓடிவிடு!" என்றார்.

🌸அங்கிருந்த மற்றொரு பார்வையாளர் ஒருவர்...
ஞானியைக் கண்டித்தார்.

🌸"சரி, உனக்குச் சோதனை மூலம் நிரூபிக்கிறேன்" என்றார் ஞானி...

🌻அப்போது அந்த அறைக்குள்...
பறவையொன்று பறந்து வந்து, 

வெளியே செல்ல முடியாமல் அறைக்குள் அங்குமிங்கும் பறந்தது....

🌻"எப்படி வெளியேறுவது என்பது அதற்கு தெரியவில்லை..."

🌻ஞானி அமைதியாகக் காத்திருந்தார்...

பறவை, "கடைசியாக திறந்திருந்த ஜன்னல் அருகே
வந்து அமர்ந்தது..."

🌻ஞானி சட்டென... 
தன் கைகளைத் தட்டினார்...

அதிர்ச்சியில் பயந்த பறவை வெளியே பறந்து போனது...

🌸"பார்த்தீர்களா...

இந்த ஓசை அதற்கு அதிர்ச்சி
தந்திருக்கிறது...

வேண்டுமென்றே நான் தந்த அதிர்ச்சிதான்...

🌸அந்த அதிர்ச்சியின் மூலமே
அது விடுதலையடைந்தது...

"இப்போது என்ன சொல்கிறாய்?"

என்றார் ஞானி பகாதின்.

🌿ஓஷோ🌿

No comments:

Post a Comment