ௐ 228 / 1008
ஶ்ரீசங்கராபுரத்துக் கோயில்
"தெய்வத்தின் குரல்"
(615) 21.02.2018
அளவறிந்து செயற்படுக ! - 3
_________________________
பலவித வரவு-செலவுகளில் கணக்கு
_________________________
அபரிக்ரஹம்
_________________________
வரவு - செலவு என்பது பணம் ஒன்றில் மட்டுமில்லை.
எல்லாவற்றிலும் உண்டு.
நாம் வார்த்தையை அதிகம் விட்டால் எதிராளியிடம் வாங்கிக் கட்டிக்கொள்கிறோமே இதுகூட
வரவு -- செலவுதான்.
நாம் வாயால் விட்டது செலவு;
வாங்கிக் கட்டிக்கொண்டது வரவு !
நாம் அனவரதமும், தூங்கும்போது கூடப் பண்ணுகிற காரியம் என்ன?
மூச்சு விடுவது.
அதுகூட வரவு செலவுதான் !
காற்றை உள்ளே வாங்கிக்கொண்டு வெளியே விடுவது வரவும் செலவுந்தான் !
அதில் கூடக் கணக்கு வேண்டுமென்றுதான் ப்ராணாயாமம், மந்த்ர ஜபம், ஸோஹம் த்யானமென்று பல யோகங்களை வைத்திருப்பது.
புசுக், புசுக்கென்று வேகமாக ச்வாஸித்தால் ஆயுசும் குறையும்;
ஆத்மா சுத்தப்பட்டு சாந்த நிலைக்கு வருவதற்கான நாடி சமனமும் ஏற்படாது.
அதனால் மூச்சுக்கூடக் கணக்காக விடணும் என்று வைத்திருக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு 21,600 ச்வாஸமே விடணும் என்று கணக்கு.
அதாவது ஒரு ச்வாஸத்துக்கு நாலு செகண்ட் ஆகவேண்டும்.
நாம் அவசரமாகக் காரியம் செய்யும் போதும்,
கோபதாபத்திலும், காமம் முதலான உணர்ச்சி வேகங்களிலும்,
புஸ் புஸ்ஸென்று ஒரு ஸெகண்ட், இரண்டு ஸெகண்டிலேயே ஒரு ச்வாஸம் முடிந்துவிடும்.
அதற்காகத்தான், ஈடுகட்ட இன்னொரு எக்ஸ்ட்ரீமில் ரொம்ப நேரம் தீர்க்கமாக மூச்சையிழுத்து அடக்கி வைத்து,
நிதானமாக விட்டுப் பிராணயாமம் பண்ணச் சொல்லியிருப்பது.
ஆக இந்த சரீரத்துக்கான ஆயுஸ், சரீரத்துக்குள்ளே இருக்கிற ஆத்மாவின் நிறைந்த ஸமநிலையான ஸமாதி நிலை இரண்டுமே மூச்சு ஒரு கணக்காயிருப்பதில்தான் அடங்கி யிருக்கிறதென்று தெரிகிறது.
வெளியில் காட்டுகிற அக்கவுன்ட்ஸில் ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு ஸரிகட்டினதாகக் காட்டி விடலாம்.
ஆனால் "நமக்கு நாமே accountable-ஆக இருக்க வேண்டும்" என்கிறார்களே,
அதில் எந்த தகிடுதத்தமும் செய்து ஜயிக்க முடியாது !
நாம் செய்கிற அத்தனையையும் கர்ம ஸாக்ஷியாக ஒருத்தன் பார்த்துக் கொண்டிருக்கிறான் !
அவனை ஏமாற்றவே முடியாது!
பண்ணிய பாபத்துக் கெல்லாம் ஈடாக எதிர்த் தட்டில் புண்ய கர்மங்களை ஏற்றியாக வேண்டும்.
அந்தக் கணக்கு புஸ்தகம் அவன் கையில் இருக்கிறது.
நாம் நல்லது செய்வதில் கணக்கு வழக்கில்லாமலிருந்தால்தான் அவன் பாலன்ஸ்--ஷீட்டை ஸரி செய்ய முடியும்.
இப்படிக் கணக்கு வழக்கு இல்லாமல் புண்யம் பண்ணுவதற்கு மனநெறி முதலில் ஏற்பட வேண்டும்.
அது ஏற்படுவதற்கு நம்முடைய பேச்சு, எண்ணம், நமக்கென்று பண்ணிக்கொள்ளும் காரியம், சொந்த செலவு, சாப்பாடு, ட்ரெஸ் எல்லாவற்றிலும் கணக்காயிருந்தால்தான் முடியும்.
ஶ்ரீமஹாபெரியவா
3 / 7 பக்கம் 713
No comments:
Post a Comment