Wednesday, November 22, 2017

Control of mind us the first step - Ramanar

: *வாழ்கையின் முதல் படி துறவு*

*பகவான் ரமணமகரிஷி*.
-------------------------------------------
ஒரு சமயம் பகவான் ரமணர் முன்னிலையில் 

துறவு வாழ்க்கையின் முதல்படி எது என்று 

பலரும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லி, 

அதுதான் சரி என்று சொல்லிக் கொண்டிருந்தனர். 

அப்போது பகவான், 

அவர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினார். 

நான் விருபாட்சா குகையில் தங்கி இருந்தபோது 

ஊருக்குள் சென்று பிட்சை எடுத்து வருவதே எங்களுக்கு உணவு! 

பெரும்பாலும் வெறும் அன்னம்தான் கிடைக்கும். 

அதுவும் எல்லோருக்கும் போதாது. 

எனவே நிறைய நீர் விட்டுக் கரைத்து, 

கஞ்சியாக ஆக்கி அனைவரும் பகிர்ந்து கொள்வோம்! 

அதில் சிறிது உப்புச் சேர்த்தால் சுவையாக இருக்குமே என்று தோன்றும். 

ஆனால், 

அதன் விருப்பத்தை ஒருபோதும் சட்டை செய்தது கிடையாது. 

ஏனென்றால் 

நாக்கு, கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையாது. 

இன்றைக்கு உப்பு வேண்டும் என்று கேட்டுக் கிடைத்துவிட்டால், 

நாளைக்கு பருப்பு, காய்கறி என்று கேட்கவைக்கும். 

இப்படியாகத்தான் ஆசை ஆரம்பிக்கும். 

பிறகு மனதை ஆட்டிவைக்கும், 

நமது தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் ஒரு முடிவே இல்லாமல் போய் விடும். 

அதனை உணர்ந்து ஆசைகளுக்கு உடனுக்குடன் முடிவு கட்டிவிட வேண்டும். 

அலைவதும் நிலையற்றதுமான இம்மனது எதன் வசம் திரிகிறதோ 

அதனிடமிருந்து மனதை மீட்டு ஆன்மாவின் கட்டிற்குள் கொண்டு வரவேண்டும். 

மனம் அடக்குதல் தான், 

துறவு வாழ்க்கைக்கு முதற்படி! என்றார்.
---------------------------------------------

No comments:

Post a Comment