Thursday, October 12, 2017

Pujyasri Mettur Swamigal 4th Year Aradhana - 2017


Namaskarams to All

 

Poojya Sri Mettur Swamigal 3rd year Guru Aradhana is being held on 18 October 2017, Diwali Day, Tamil Aipasi 2nd, Wednesday, Chaturdasi Thithi at Govindapuram. 


The Aradhana will take place at Dwadasi Bikshavanda Kattalai Building at Agraharam, Govindapuram.


Mahanyasa Rudra Jabam and Abhishekam will be performed at the Samathi situated at Kanchi Mahaswami Tapovanam at Govindapuram as per details of Aradha Patrika enclosed herewith.


Sri Mettur Swamigal received Sanyasa from the divine hands of Kanchi Mahaperiyava. Poojya swamigal stayed at Kanchi mutt for some time after Mahaperiyaval's samadhi and proceeded on foot and toured parts of Bharath and came back and settled at Orrikai.  Swamigal guided and inspired the construction of Manimandapam at Orikkai. Swamigal then proceeded to Govindapuram and on his instruction Sri Renganna Goud of Bangalore constructed the Sri Mahaswami Thapovanam at Govindapuram. Swamigal was instrumental for the conduct of 'ANNABISHEKAM' at Gangaikondachozhapuram.

 

Swamigal attained the lotus feet of Mahaperiyava on Deepavali Day in 2013 at Govindapuram.  Swamigal's Brindavanam is situated at the very place where the Brindavanam for Mahaswamigal Thapovanam is situated just opposite to the famous Panduranga Temple at Govindapuram.

 

Those wish to do Kainkaryam for this Aradhana can contact Sri Srinivasan / transfer their contributions as per details given below :

 

Sri Srinivasan,  Mobile 9486599400,  D-22, Kaveri Nagar, Mayiladuthurai – 609003.

 

Account Name : N Srinivasan

SB Account Number : 005001000176627

IFSC Code : CIUB0000005

Bank & Branch : City Union Bank, Mayiladuthurai Branch

 

A brief note about Sri Swamigal in Tamil is enclosed below for the benefit of all.

 


Humble Pranams

 

 

Anand Vasudevan

 

 

'மேட்டூர் ஸ்வாமிகள்' என்று அழைக்கப்பட்ட மிகப் புனிதமானவர்.

 

இவருடைய பூர்வாஸ்ரமப் பெயர் "இராஜகோபாலன்" என்பதாகும்.  இரசாயனப் பொறியியல் பட்டதாரியான இவர் சிறிது காலம் 'மேட்டூர் கெமிகல்ஸ்' கம்பெனியில் பொறியாளராகப் பணியாற்றியவர்.  சிறுவயதிலேயே மிகுந்த ஞானமும், பக்குவமும் ஏற்பட்டுவிட்ட இவருக்கு, காஞ்சி மஹா ஸ்வாமிகளிடம் தீவிரமான பக்தி ஏற்பட்டது. 

 

சாக்ஷாத் பரமேஸ்வரனின் மறு அவதாரமே ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி மஹா ஸ்வாமிகள் என்ற பேருண்மையை மிகச்சுலபமாக உணர்ந்து கொண்டுவிட்ட இவர், ஒருநாள் தன் அலுவலக வேலையை திடீரென ராஜிநாமா செய்து விட்டு, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்ய வந்து சேர்ந்து விட்டார்.   ஒருசில வருடங்கள் மட்டுமே, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு கைங்கர்யம் செய்யும் பாக்யம் கிடைத்த இவரைதன் பால்ய வயதினிலேயே ஸ்ரீ ஸ்ரீ மகாபெரியவாளிடமே துறவறம் கிடைக்க பெற்ற பாக்யசாலி ஆனார். அன்று முதல் இவர் மேட்டூர் ஸ்வாமிகள் என்றே பலராலும் அழைக்கப்பட்டு வந்தார்.  

 

வேத சாஸ்திரங்கள் அனைத்தும் கற்று அதன்படியே வாழ்ந்து காட்டியவர். மஹாஸ்வாமிகள் குறித்தும், அவர்களது சிந்தனைகள் குறித்தும் பல்வேறு தகவல்களை வெளியுலகுக்குக் கொண்டுவந்த பெருமைக்குரியவர்.  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா மேற்கொண்டு வந்த சந்நியாஸ சம்ப்ரதாய நடைமுறைகள் அனைத்தையும் முழுமையாகத் தானும் கடைபிடித்து வந்தார். 
வாகனங்களில் செல்வதை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டு, பாத யாத்திரையாகவே பாரத தேசம் முழுவதும் உள்ள  கோயில்களுக்கும், மடங்களுக்கும் சென்று வந்துள்ளார். 


மக்களிடையே சமுதாய வளர்ச்சி, பசுமை மற்றும் இயற்கை நேசம், பசு வளர்ப்பு ஆகியவற்றில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தினார்.  அனைத்துக் காரியங்களும் இறைவன் சித்தப்படி, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அருளால் நடக்கின்றன என்று சொல்லிவந்தார்.  

 

 ஞான வைராக்யங்கள் கொண்ட இவர் தன்னை வெளியுலகுக்கு அதிகம் தெரியப்படுத்திக் கொண்டது கிடையாது.  தன்னை போட்டோ எடுப்பதைக்கூட தவிர்க்கும்படி பக்தர்களிடம் கேட்டுக்கொள்வார்.  இவருடைய புகைப்படங்களோ, இவரைப்பற்றிய செய்திகளோ எங்கும் எதிலும் அதிகமாக வெளிவந்ததும் கிடையாது. அவர் இவற்றையெல்லாம் அடியோடு வெறுப்பவராகவே இருந்து வந்தார்.

 

துறவியானபின்பு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுடனேயே சிலகாலம், தங்கி இருந்த இவர், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஸித்தியான பிறகு, கும்பகோணம் அருகில் உள்ள கோவிந்தபுரம் என்ற ஊரில்  ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் தபோவனத்தில் (தற்போது மிகப்பெரியதாகவும் மிகப்பிரபலமாகவும் அமைந்துள்ள ஸ்ரீ பாண்டுரங்கன் கோயிலின் பிரதான நுழைவாயிலுக்கு நேர் எதிர்புறம் அமைந்துள்ளது இந்தத் தபோவனம்) ஓர்  குடிலில் ஆஸ்ரமம் அமைத்துக்கொண்டு தங்கியிருந்து, அங்கு வரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். 

 

திவ்ய க்ஷேத்ரமான கோவிந்தபுரத்தில் [தனது 74வது வயதில்] ஸித்தியடைந்து, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் திருவடிகளை அடைந்துள்ள இந்த மஹானுக்கு, அங்கேயே ஓர் ப்ருந்தாவன அதிஷ்டானம் அமைத்துள்ளார்கள். 

 

கோவிந்தபுரத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைப்பவர்கள் இந்த மஹானின் ப்ருந்தாவன அதிஷ்டானத்தை 12 பிரதக்ஷணங்கள் செய்து, நான்கு நமஸ்காரங்கள் செய்து விட்டு வரவும்.  இவ்வாறு எளிய வாழ்க்கை வாழ்ந்த, மஹாஞானிகளான மஹான்களின் ஆசியாலும், அனுக்ரஹத்தாலும் நம் அனைவரின் வாழ்விலும் சுபமங்கல நிகழ்ச்சிகள் ஏற்படும் என்பது ஸத்தியம்.


No comments:

Post a Comment