Friday, October 13, 2017

Kadayam vilvavana nathar temple

உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு.கருப்பசாமி.*
இப்பதிவு நீளம் கருதி, இன்றும் நாளையும் வ(ள)ரும்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹*பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*🌹
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
             *(26-வது நாள்.)*
இப்பதிவும் நீளம் கருதி நேற்றும் இன்றும் தொடர்ந்து வ(ள)ர்கிறது.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌷 *அருள்தரும் நித்யகல்யாணி அம்மன் உடனுறை அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோயில்.*🌷
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
         *கடையம்.*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*இறைவன்:*அருள்மிகு வில்வவனநாதசுவாமி.

*இறைவி:* அருள்தரும் நித்யகல்யாணி அம்மன்.

*தீர்த்தம்:* 
ராமநதி தீர்த்தம்.

*தல விருட்சம்:*  வில்வம்.

*ஆகமம்:* காமிக ஆகமம்.

*தல அருமை:*
முன்னொரு காலத்தில் பிரும்ம தேவர், பரமேசுவரனை நோக்கித் தவமிருக்கத் தொடங்கினார்.

அவருக்குக் காட்சி தந்த பரமேசுவரன் ஒரு வில்வக் காயைப் (வில்வபழம்) கொடுத்து விட்டு மறைந்தருளிப் போனார்.

வில்வக் காயைப் பெற்றுக் கொண்ட பிரும்மதேவர், அவ்வில்வக் காயை மூன்றாகப் பிளவுபடும் செய்தார்.

ஒரு பிளவை *கைலாய* மலையிலும், மற்றொரு பிளவை *மகாமேரு* மலையிலும், மூன்றாவதான பிளவை *த்வாதசாந்த* வனத்திலும் நட்டிவித்தார்.

பின்பு தேவர்களிடத்தில் வந்து,  இவ்வில்வம்  தளிர்ந்து வளர நன்கு நீர் பாய்ச்சி வளருங்கள் என கட்டளைப் பணித்தார்.

தளிர்க்க விதையிடப்பட்ட மூன்று வில்வங்களில், இரண்டு இடங்களைக் காட்டிலும், ஒரு இடமான *த்வாதசாந்த* வனத்தில் ஊன்றப்பட்ட வில்வம் மட்டும்  செழித்து வளர்ந்தோங்கி உயர்ந்தன.

இதனால்தான் இவ்வனத்திற்கு வில்வவனம் என்று பெயர். அதோடு இங்கு கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் பெருமானார் ஈசனை வில்வவனேசுவரர் என்றும் பெயர்.

*மற்றொரு நிகழ்வு:*
முன்பொரு காலத்தில் தேவர்களுக்கும், சும்பன் நிசும்பன் என்ற அசுரர்களுக்கும் போர் நடந்தது.

இப்போரில் தேவர்கள் தோல்வியைச் சந்தித்தனர். இதனால் அசுரர்களுக்குப் பயந்த தேவர்கள் இமயமலைச் சாருக்கு ஓடினார்கள்.

அந்த இமயமலைச்சாரலில் உமாதேவியை நினைந்து நினைந்து குதித்தார்கள்.

அப்போது, உமாதேவியின் சரீரத்திலிருந்து, *கெளசிகீ* என்னும் திவ்யநாமத்துடன் பராசக்தி அவதாரத்துடன் வெளித் தோன்றினாள்.

சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்களையும் கொன்றாள். இதனால் அசுரர்களிடமிருந்து தேவர்கள் காக்கப்பட்டனர்.

கெளசிகீ தேவி உமாதேவியின் சரீரத்திலிருந்து கிளம்பிய பிறகு, உமாதேவியின் தேகஉடல் கருநிறமடைந்தது.

தற்செயலாக உமாதேவியான பார்வதிதேவியும், பரமேசுவரரும் வில்வவனத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

இமயமலை சாரலிலிருந்த பிரதம கணங்கள் பார்வதிதேவியின் தாமச குணமான காணிக்கைகளைச் செலுத்த ஆரம்பித்தார்கள்.

அப்போது பரமேசுவரன் *ச்யாமளா, ச்யாமளா* என்று கெளசிகீயை பரிகாசம் செய்ய ஆரம்பித்தார்.

இந்த பரிகாசத்தைக் கண்டு, தேவி கோபங் கொண்டாள். அதோடு நந்தி தேவரை மும் அழைத்து, நான் திரும்ப வரும் வரைக்கும் வேறெந்தப் பெண்ணையும் உள்ளே விடாதே!" என கட்டளையிட்டாள்.

நந்திகேசுவரரும் தேவியின் கட்டளைக்கு மதிப்பளித்து, கையில் பிரம்புடன் காவலிருக்க முனைந்து விட்டார்.

இதன்பிறகு, அத்திரி முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றாள் தேவி.

அங்கிருந்த அனுசுயையின் வார்த்தைகளின்படி, வில்வவனேசுவரரை நோக்கித் தவம் இருந்தாள்.

தவத்தின் முடிவில் ஈசுவரனருளால், *ச்யாமள* நிறம் நீங்கி, முன்னைவிட பொன்னிற மேனியைப் பெற்றாள்.

திரும்ப வில்வவனேசுவரரைத் தரிசிப்பதற்காக சென்றாள். அங்கே வாயிற்காவலில் காவல் செய்து கொண்டிருந்த நந்திகேசுவரர், தேவியை ஆள் அடையாளம் தெரியாததால், *"உள்ளே செல்ல அனுமதியில்லை"* எனச்சொல்லித் தடுத்து நின்றார்.

இதனால் கோபங்கொண்ட தேவி, கடுமையாக நந்திதேவரை கடிந்தாள். 

தேவியின் கடுமைகளை கேக்கப் பெறாத நந்திகேசுவரரும், கடுமை சொல்லேக்கு எதிர்பதமாய் தன் கையிலுள்ள பிரம்பினால் தேவியை அடித்து விட்டார்.

தேவி மேல் விழுந்த பிரம்படி, அதே சமயத்தில் உலகிலுள்ள அத்தனை ஜீவராசிகளின் மீதும் பிரம்படி பட்டது.

இந்நிகழ்வுகளைக் கண்ட நந்திகேசுவரரும், மற்றுமுள்ள பிரதம கணங்களும் ஆச்சரியத்தால் அதிர்ச்சியும் சேர்ந்து உண்டாகி நின்றனர்.

இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த வில்வவனநாதரும், இவர்கள் முன் தோன்றினார்.

நந்திகேசுவரரிடத்தில், தேவியின் சொரூபத்தையும்  மகிமையையும் விளக்கிக் கூறியருளினார்.

பின்பு தேவியை நோக்கி, *ஓ நித்ய கல்யாணியே!* என்றழைத்தார்.

நடந்தவைகளை ஊகித்த நந்திகேசுவரர், தேவியின் பாதகமலங்களில் விழுந்து வணங்கிப் போற்றி துதித்தார். அதோடு பிரம்படி கொடுத்தமைக்கு தன்னை மன்னிக்குமாறும் வேண்டி நின்றார்.

தேவியான நித்ய கல்யாணி யும் நந்திகேசுவரரின் பிரம்படிக் குற்றத்தை மன்னித்து அருள்புரிந்தாள்.

பின், வில்வவனநாதரும் நித்யகல்யாணி அம்மனின் திருக்கரங்களைப் 
பற்றிக்கொள்ள அண்டரும், முனிவரும் போற்றிப்புகழ அகமகிழ்ந்தனர்.

*சிறப்பு:*
இத்திருக்கோயிலில் சிற்றாறு உற்பத்தியாகும் *திருக்குற்றாலத்திற்கும்* தாமிரபரணி உற்பத்தியாகும் *பாண தீர்த்தத்திற்கும்* நடுவாக அகஸ்திய மாமுனிவர் சஞ்சரிக்கும் இடத்தினில் அமைந்திருப்பது மிக மிக சிறப்பாகும்.

பராசக்தியான நித்யகல்யாணியம்மன் *துர்க்கா, லட்சுமி, சரசுவதி* என மூன்று அவதாரத்திலும் திருவருள் புரிகின்ற தலம் இது.

*பூஜைகள்:*
திருவனந்தல் - காலை 7.00 மணிக்கும்,

விளா பூஜை - காலை 8.00 மணிக்கும்,

கால சந்தி - காலை 9.00 மணிக்கும்,

உச்சிக் காலம் - நண்பகல் 11.00 மணிக்கும்,

சாயரட்சை- மாலை 6.00 மணிக்கும்,

அர்த்தசாமம் - இரவு 8.00 மணிக்கும்.

*திருவிழா:*
சித்திரையில் அஸ்த நட்சத்திரத்தில் தேரோட்டம்.

ஆவனியில் மூல நட்சத்திரத்தில் திருக்கல்யாணம்.

கார்த்திகை தீபவிழா.

மார்கழித் திருவாதிரை.

மற்றும், வழக்கமான மாதாந்திர பிரதோசம்.

*இருப்பிடம்:*
அம்பாசமுத்திரம்-தென்காசி சாலையில், அம்பாசமுத்திரத்திலிருந்து இருபது கி.மி. தூரத்திலும், தென்காசியிலிருந்து பதினெட்டு கி.மி. தூரத்தில் அமைந்துள்ளது.

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசியில் இருந்து அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து வசதிகள் இருக்கிறது.

கீழக்கடையம் வரை இரயில் சேவையும் இருக்கிறது.

*அஞ்சல் முகவரி:* 
செயல் அலுவலர்,
அருள்தரும் நித்ய கல்யாணி அம்மன் உடனுறை அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோயில்,
கடையம் வட்டம்,
திருநெல்வேலி - 627 415

*தொடர்புக்கு:*
04634 241 484

நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களில் நாளைய அடுத்த பதிவு *அருள்மிகு காசி விசுவநாதசுவாமி திருக்கோயில்.தென்காசி* வள(ரு)ம்.

இத்துடன் இரு நாள் பதிவுகளான அருள்தரும் நித்ய கல்யாணி அம்மன் உடனுறை அருள்மிகு வில்வவனநாதர் சுவாமி திருக்கோயில் தொடர் மகிழ்ந்து நிறைந்தது.

          திருச்சிற்றம்பலம்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment