கூர்மாவதாரம் (A little long . Please read patiently)
कूर्मावतारः
धीः स्थिता ब्रह्मणि कूर्म इति
अमृतलब्धिरेव ज्ञानोद्धरणं |
हालाहलं नाम अघस्समूहं
यदा कृतं यदि भगवदर्पणं
தீ: ஸ்திதா பிரம்மணி கூர்ம இதி அம்ருதலப்திரேவ ஞானோத்தரணம்
ஹாலாஹலம் நாம அகஸ்ஸமூஹம் யதா க்ருதம் யதி பகவதர்ப்பணம்
கூர்மம் என்பது பிரம்மத்தில் நிலை பெற்ற புத்தியைக் குறிக்கும். பிரம்மஞானம் அமிர்தம். ஹாலாஹலம் பாபசமூஹம். இதை பகவதர்ப்பணம் செய்ய அமிர்தம் வெளி வருகிறது. அதுதான் அமரத்வமாகிற பிறப்பிறப்பற்ற நிலை.
கூர்மம் கீதையில் சொல்லியுள்ள ஸ்திதப்ரக்ஞனின் நிலை.
"யதா சம்ஹரதே சாயம் கூர்மாங்கானி இவ ஸர்வச:" (ப.கீ. 2.58)
ஆமை ஓட்டுக்குள் தன்னை இழுத்துக்கொள்வதைப்போல எவன் இந்த்ரியங்களை விஷயங்களில் இருந்து இழுத்துக் கொள்கிறானோ என்று பொருள்.
மந்தர மலை பிரம்மஞானத்தை அடையவேண்டும் என்ற புத்தி.
பாற்கடல் மேலே தெளிவாகவும் உள்ளே கலங்கியும் உள்ள அறிவைக் குறிக்கிறது.
வாசுகி சர்ப்பங்களின் அரசன். சர்ப்பங்கள் ஆசைகளைக் குறிக்கின்றன. எல்லா ஆசைகளுக்கும் ராஜா வாக உள்ளது பிரம்மஜிக்ஞாஸா பிரம்மத்தை அறிவது,.
வாசுகி என்ற அந்த ஆசை, அமரத்வத்தை அடையும் குறிக்கோள் அதாவது மந்தரமலையை சுற்றிக் கொண்டு, அறிவாகிய பாற்கடலை கடையும் போது ப்ரம்மஞானம் ஆகிய அம்ருதம் வெளிப்படும்.
ஆனால் முதலில் பாபம் என்ற ஹாலாஹல விஷம் பூர்வஜன்ம வாசனையினால் அடியில் தேங்கி உள்ளது. அதை முதலில் அழிக்க வேண்டும். பரம்பொருள் , சிவன் என்ற அழிக்கும் சக்தியால் அதை நீக்குகிறது. பிறகு பல பொருள்கள் வெளி வருகின்றன. அதாவது விஷய ஆசைகள் மயக்கப்பார்க்கின்றன. அதிலெல்லாம் ஏமாந்துவிடாமல் கடலைக் கடைந்தால் கடைசியில் வெளி வருவது அமிர்தம்.
ஆனால் இந்த அம்ருதத்தை அடைவதற்கு முன் எதிர்நோக்கும் ஒவ்வொரு தடைக்கல்லையும் நீக்க இறைவனின் அருள் வேண்டும். இதைக் கூறுவது நான் இயற்றிய கீழ்வரும் ஸ்லோகம்.
गरुडोपरि संवाह्य कूर्मवपुषा उद्वाह्य
आक्रम्य मन्दरगिरिं हस्तेन तदुपरि |
उद्धीप्य मन्थारं आविश्यनागेन्द्रं
विभज्य अमृतं हरिणा किं न कृतं
இதன் பொருள்,
கருடன் மேல் மந்தர மலையை ஏற்றி ஆமையின் உருவில் அதை சுமந்து மேலும் தன் கையினால் அதன் மேல் அழுத்திக்கொண்டு, அதைக் கடைபவர்களுக்கு சக்தியைக் கொடுத்து , வாசுகியின் களைப்பையும் தீர்த்து, அம்ருதத்தை பங்கிட்டு அளித்தான். அவன் என்னதான் செய்யவில்லை தேவர்களுக்கு?
இதன் மூலம் நாம் அவனை அடைய முயலும் ஒவ்வொரு அடியிலும் அவன் அருள் இன்றி இயலாது என்று தெரிகிறது.
யாமுனாசார்யர் வேடிக்கையாகச் சொல்லுகிறார் பகவான் இவ்வளவு கஷ்டப்பட்டது எதற்காக என்றால் அது லஷ்மியை அடையவே என்று. அதைப் படித்ததும் எனக்குத் தோன்றியது என்னவென்றால்
.
श्रीप्राप्त्यर्थं सर्वं यदि महदायासं
तदपि तद्करुणयैव न स्वार्थम् |
या करुणया करोति जगन्मङ्गलं
तां ह्रदि निवासयितुं खलु इदं कृतं ||
ஸ்ரீப்ராப்த்யர்தம் யதி மஹதாயாஸம்
ததபி தத்கருணயா ஏவ ந ஸ்வார்த்தம்
யா கருணா கரோதி ஜகன்மங்களம்
தாம் ஹரதி நிவாஸஇதும் கலு இதம் க்ருதம்
மகாலக்ஷ்மியை அடையவே இவ்வளவு சிரமம் மேற்கொண்டான் என்றால் அது சுயநலம் அல்ல. அவனுடைய கருணையே. உலகத்துக்கெல்லாம் கருணை காட்டி ஆட்கொள்ளும் தாயாரைத் தன் ஹ்ருதயத்தில் வைக்கவே இவ்வாறு செய்தான். ஏனென்றால் அவள் இருக்கும் ஹ்ருதயத்தில் கருணை தவிர வேறு எதுவும் இருக்க முடியாது அல்லவா?
கடைசியாக ஒரு விளக்கம். தேவர் அசுரர் என்பது நம் மனத்தில் உள்ள நல்ல எண்ணங்களும் கெட்ட எண்ணங்களுமே. இவைகளுக்குள் எப்போதும் யுத்தம் தான். இறைவன் அருளால் சுத்த ஞானம் ஆகிய அம்ருதத்தைப் பெற்றால் மட்டுமே நல்லெண்ணங்கள் வெற்றி பெறும்.
No comments:
Post a Comment