உ
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாற்றினார் அருள்வாய்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
💐 *சிவ தல தொடர்.68.* 💐
☘ *சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.* ☘
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
☘ *திருச்செளிச்சேரி.* ☘
(நேரில் சென்று தரிசித்ததைப் போல.....)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*சிவஸ்தலம் பெயர்:*
திருதெளிச்சேரி. (தற்போது கோயில்பத்து என்று வழங்கப்படுகிறது வழங்குகிறது)
*இறைவன்:* பார்வதீஸ்வரர்.
*இறைவி:*
சுயம்வர தபஸ்வினி, சக்திநாயகி.
*தல விருட்சம்:*
வில்வம், வன்னி.
*தீர்த்தம்:*
சூர்யபுஷ்கர்ணி, குகத் தீர்த்தம், தவத் தீர்த்தம்.
சோழநாட்டின் காவிரித் தென்கரையில் அமையப் பெற்றுள்ள 128 தலங்களுள், இத்தலம் ஐம்பதாவது தலமாகப் போற்றப் பெறுகின்றன.
*பெயர்க்காரணம்:*
இத்தல ஊரை தற்போது கோவில் பத்து என்று வழங்கப் படுகிறது.
இத்தலம் க்ருதயுகத்தில் பிரம்மவனம் என்றும், த்ரேதாயுகத்தில் சமீவனம் என்றும், துவாபர யுகத்தில் ஆனந்த வனம் என்றும், கலியுகத்தில் முக்தி வனம் என்றும் அழைக்கப்படுகிறது.
இறைவனே விதை தெளித்துச் சென்றதால் இத்தலம் திருத்தெளிச்சேரி ஆனது.
சம்பந்தர் திருநள்ளாறுக்கு சென்று இவ்வழியாகத் திரும்பும் சென்றார். இத்தலத்தை அவர் கவணிக்கவில்லை.
இதைத் தெரிந்து கொண்ட இத்தலத்து பிள்ளையார் சம்பந்தரை பத்துமுறை கூப்பிட்டு இங்குள்ள இறைவனை பாடும்படி கூறினார்.
பின் இந்தத்தலம் வந்து இறைவனைத் தொழுது பதிகம் பாடினார். பிள்ளையார் பத்துமுறை கூவியழைத்ததால் இத்தலம் கூவிப்பத்து. காலப்போக்கில் கோவில் பத்து என்று மாறிவிட்டது.
*இருப்பிடம்:**
இத்தலம் காரைக்கால் நகரின் ஒரு பகுதியாக இருக்கிறது. கோவில் உள்ள பகுதி கோயில்பத்து என்று வழங்குகிறது.
அருகில் உள்ள ரயில் நிலையம் காரைக்கால்.
*கோவில் அமைப்பு:*
முதலில் கோயில் முன்னால் இருக்கும் நுழைவாயிலுக்கு வந்து சேர்ந்தோம்.
அதனையடுத்து ஐந்து நிலைகள் கொண்ட மேற்கு நோக்கிய பெரிய ராஜகோபுரம் நம் கண்களுக்குக் காணக் கிடைக்கவும் *சிவ சிவ, சிவ சிவ,* என மொழிந்து கோபுரத்தரிசனத்தை வணங்கிக் கொண்டோம்.
இவ்வாலய கோபுரத்தை உற்று நோக்கினோம். சிற்பங்கள் நிறைந்து காணப்படுவது தெரிந்தது. சிறிது நேரம் கண்களை இடமிருந்து வலமாக வரும், மேலிருந்து கீழாகவும் சக்திப் பாங்குடன் ரசித்தோம்.
வாயில் உள் நுழைந்து செல்லவும் உள்ளே உள்ள முன் மண்டபத்தில் செப்புக் கவசமிட்ட கொடிமரத்தனருகில் வந்தோம். கொடிமரத்தின் முன் எண் புழுக்களும் பூமியில் பட வீழ்ந்து வணங்கியெழுந்தோம்.
கொடிமரத்தருகே, கொடிமர விநாயகர் அமர்ந்நிருந்தார். விடுவோமா? அப்படி காதை பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டு வணங்கிக் கொண்டோம்.
நாங்கள் தவறேதும் செய்யவில்லை. அவனிடம் தோப்புக்கரணமிடுவது நமது பாங்கு. அதனாலே சர்வமும் போல இப்போதும் வணங்கினோம்.
கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்கள் இருவர் வருகைப் பதிவேடைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவரிடம் நம் வருகையின் பதிவேட்டை கண்களால் பதிந்து விட்டு, அவரும் உள்புக உத்தரவு நல்க, ஈசனைத் காண உள் புகுந்தோம்.
இறைவனான பார்வதீஸ்வரர் கருவறையில் லிங்க உருவில் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளதைக் கண்டோம். மனமுருகி அனைவருடைய சுபீட்சத்துக்காக அவனிடம் வேண்டுதலை சொல்லிவிட்டு, அவனருள் பார்வையைப் பெற்றுக் கொண்டு வெளி வந்தோம்.
அம்பாள் கருவறை முகப்பு மண்டபத்தில் வாயிலில் இருபுறமும் இரு துவாரபாலகியர்கள் இருக்க நம் வரவினைத் தெரிவித்துக் கொண்டு சுயம்வர தபஸ்வினி தெற்கு அருள்பாலிக்க, அவளை வணங்கி அருட்பிரசாதம் பெற்றுக் திரும்பினோம்.
கருவறைச் சுற்றில் அறுபத்து மூவர்கள், நர்த்தன கணபதி, சூரியன், சனீஸ்வரன் ஆகியோர் காட்சிதர அனைவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டே நகர்ந்தோம்.
கருவறை கிழக்குச் சுற்றில் செல்லும்போது வள்ளி, தெய்வானை சமேத முருகர் சந்நிதிக்கு சென்று வணங்கி வந்தோம்.
கோஷ்ட தெய்வங்களாக தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, ஆகியோரையும் வணங்கிக் கொண்டோம்.
இத்தலத்தில் சூரியபுஷ்கரணி, குகதீர்த்தம், தவத்தீர்த்தம் ஆகய மூன்று தீர்த்தங்கள் உள்ளன என்பதைத் தெரிந்து அவ்விடம் சென்று பார்த்தோம்.
இவற்றுள் சூரியனால் உண்டாக்கப்பட்ட சூரிய புஷ்கரணி தீர்த்தம் சிறந்தததென அங்கிருப்போர் கூறினர்.
ஞாயிற்றுக்கிழமைகளில் வைகறையில் இத் தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பு என்பதையும் சொன்னார்கள்.
*தல அருமை:*
பங்குனி மாதத்தில் 13-ம் தேதி முதல் ஏழு நாட்கள் சூரியபூசை நிகழ்கிறது எனபதையும் ஏற்கனவே தரிசனத்திற்கு வந்திருந்தோர் கூறினர்.
பார்வதிதேவி காத்யாயன முனிவரின் மகளாக அவதரித்து இத்தல இறைவனை வழிபட்டு அவரை மணம் செய்து இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.
பார்வதி அம்மை என்றும், சுயம்வர தபஸ்வினி என்றும் பெயர் பெற்று திருமணம் வரம் தரும் நாயகியாக அருளுகிறார்.
அம்பரீச மகாராஜா இத்தல இறைவனை வழிபட்டு குழந்தை பாக்கியம் பெற்றதனால் இறைவனுக்கு ராஜலிங்கம் என்று பெயர் சூட்டினார்.
பல்குணன் வழிபட்டதால் இறைவனுக்கு பல்குணன் என்ற பெயரும் ஏற்பட்டது.
இது ஒரு கற்கோவிலாகும்.
சிவன் இத்தலத்தில் கிராத மூர்த்தி என்ற பெயரில் வேடன் வடிவில் அருளுகிறார்.
*தல பெருமை:*
சூரியன் தனது துணைவியான சாயாதேவியிடம் அன்பு செலுத்தாத காரணத்தில் அவள் மிகுந்த வருத்தமடைந்தாள்.
இதனை நாரதர் மூலம் அறிந்த அவளது தந்தை சூரியனை சபித்து விட்டார்.
இதனால் சூரியன் தனது ஒளியை இழந்து வருந்தி இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி பார்வதீஸ்வரரை வழிபட்டார்.
இவரது வழிபாட்டிற்கு மகிழ்ந்த இறைவன் சாபத்தை நீக்கினார்.
சூரியன் வழிபட்டதால் இதனை பாஸ்கர தலம் என்கின்றனர்.
*புத்தரை வாதில் வென்றது:*
இத்தலத்திற்கு அருகாமையில் இருக்கும் *போதிமங்கை* என்னும் ஊர் இருக்கின்றது.
அவ்வூரில், புத்தர்கள் அதிகமாக வசித்து வந்தனர். திருத்தெளிச்சேரியை தரிசித்த பின் போதிமங்கை வழியாக ஞானசம்பந்தரது அடியார் திருக்கூட்டம் ஞானசம்பந்தர் புகழைப் பாடியவாறு சென்றது.
இதைத் தாங்கப் பொறுக்காத புத்தர்கள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தினர். முன்னேற்றத்தைத் தடுத்தனர்.
அப்பொழுது தேவாரத் திருமுறை எழுதும் சம்பந்தரின் அடியார், சம்பந்தரின் பஞ்சாட்சரப் பதிகத்திலிருந்து
🌸புத்தர் சமண் கழுக் கையர் பொய்கொளாச் சித்தத்தவர்கள் தெளிந்து தேறின வித்தக நீறு அணிவார் வினைப்பகைக்கு அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே.🌸
*பொழிப்புரை:*
🙏🏾புத்தர்களும், சமணர்களும் கூறும் பொய் வார்த்தைகளை மனத்திற் கொள்ளாத தெளிந்த சித்தத்தவர்களால் உறுதியுடன் ஓதப்படுவன திருவைந்தெழுத்தாகும். சகல சக்திகளுமுடைய திருநீற்றை அணிபவர்களுடன் போர்புரிய வரும் பகைவர்களை எதிர்த்து அம்புபோல் பாய்ந்து அழிக்கவல்லன திருவைந்தெழுத்தேயாகும்.
என்ற பாடலைப் பாட....பாட......
புத்தர்கள் தலைவனான புத்தநந்தி தலையில் இடி விழுந்தது. உடனே அவன் இறந்து போனான்.
மீண்டும் புத்தர்கள், சாரி புத்தனைத் தலைவனாகக் கொண்டு வாது செய்ய வந்தனர். தேவாரத் திருமுறை எழுதும் சம்பந்தரின் அடியார் ஞானசம்பந்தர் முன்னிலையில் அவர்களை வாதில் வென்றார். புத்தர்கள் தங்கள் பிழை உணர்ந்து ஞானசம்பந்தரை வணங்கி சைவர் ஆனார்கள்.
திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இத்தல பதிகத்தை தினமும் ஓதுவோர் வானவர்கள் சூழ வாழ்ந்திருப்பர் என்று பதிகத்தின் படைசி பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.
*தேவாரம் பாடியவர்கள்:*
💐பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் உம் பொற்கழல் தேவர் வந்து வணங்கும் மிகு தெளிச்சேரியீர் மே வரும் தொழிலாளொடு கேழற்பின் வேடனாம் பாவகம் கொடு நின்றது போலும் நும் பான்மையே.
💐விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே திளைக்கும் தீர்த்தம் அறாத திகழ் தெளிச்சேரியீர் வளைக்கும் திண்சிலை மேலல் ஐந்து பாணமும் தான் எய்து களிக்கும் காமனை எங்ஙனம் நீர் கண்ணிற் காய்ந்ததே.
💐வம்படுத்த மலர்ப்பொழில் சூழ மதி தவழ் செம்படுத்த செழும் புரிசைத் தெளிச்சேரியீர் கொம்ப் அடுத்தது ஓர் கோல விடைமிசை கூர்மையோடு அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே.
💐கார் உலாம் கடல் இப்பிகள் முத்தங் கரைப்பெயும் தேர் உலாம் நெடுவீதி அது ஆர் தெளிச்சேரியீர் ஏர் உலாம் பலிக்கு ஏகிட வைப்பிடம் இன்றியே வார் உலாம் முலையாளை ஓர் பாகத்து வைத்ததே.
💐பக்கம் நும் தமைப் பார்ப்பதி யேத்தி முன் பாவிக்கும் செக்கர் மா மதி சேர் மதில் சூழ் தெளிச்சேரியீர் மைக்கொள் கண்ணியர் கைவளை மால்செய்து வௌவவே நக்கராய் உலகெங்கும் பலிக்கு நடப்பதே.
💐தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழ நல் திவள மாமணி மாடம் திகழ் தெளிச்சேரியீர் குவளை போற்கண்ணி துண்ணென வந்து குறுகிய கவள மால்கரி யெங்ஙனம் நீர் கையிற் காய்ந்ததே.
💐கோடு அடுத்த பொழிலின் மிசைக்குயில் கூவிடும் சேடு அடுத்த தொழிலின் மிகு தெளிச்சேரியீர் மாடு அடுத்த மலர்க்கண்ணினாள் கங்கை நங்கையைத் தோடு அடுத்த மலர்ச்சடை யென்கொல் நீர் சூடிற்றே.
💐கொத்து இரைத்த மலர்க்குழலாள் குயில் கோலஞ்சேர் சித்திரக் கொடி மாளிகை சூழ் தெளிச்சேரியீர் வித்தகப் படை வல்ல அரக்கன் விறற்றலை பத்து இரட்டிக் கரம் நெரித்திட்டதும் பாதமே.
💐காலெடுத்த திரைக்கை கரைக்கு எறி கானல்சூழ் சேலடுத்த வயல் பழனத் தெளிச்சேரியீர் மால் அடித்தலர் மாமலரான் முடி தேடியே ஓலம் இட்டிட எங்ஙனம் ஓர் உருக் கொண்டதே.
💐மந்திரம் தரு மா மறையோர்கள் தவத்தவர் செந்தி லங்கு மொழியவர் சேர் தெளிச்சேரியீர் வெந்த லாகிய சாக்கியரோடு சமணர்கள் தம் திறத்தன நீக்குவித்தீர் ஓர் சதிரரே.
💐திக்கு உலாம் பொழில் சூழ் தெளிச் சேரி எம் செல்வனை மிக்க காழியுள் ஞானசம் பந்தன் விளம்பிய தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தடமுடித் தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே
*செழிப்பு தன்மை:*
அதர்மம் ஓங்கி தர்மம் நலிவுறும் போதெல்லாம் தர்மத்தை நிலை நாட்டுவதற்காகவும், சுபிட்சத்தை உண்டாக்குவதற்காகவும் தெய்வங்கள் அவதாரம் எடுப்பது வழக்கம்.
காரைக்கால் பகுதியில் நீண்ட காலமாக மழை இல்லாததால், மக்கள் வறுமையில் வாடினர். பயிர்கள் விளைச்சல் இல்லாததால் உணவு இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டனர்.
உணவு பஞ்சத்தால் ஜீவராசிகள் மடிய தொடங்கின. அப்பகுதி மக்கள் ஈசனை நினைத்து மனம் உருக வழிபட்டனர்.
இதைக்கண்ட ஈசன், உழவு படை சூழ உணவுத் திருமேனியராகி, இந்த ஊர் நெற் கழனிகள் பக்கம் சென்று உழுது விதை தெளித்து கரையேறினார்.
அன்று முதல் இன்று வரை இந்த ஊர் மக்கள் உணவு பஞ்சமின்றி சிறப்புடன் வாழ்கின்றனர். ஈசரே உழவராக மாறி உழவு படையுடன் வந்த கழனிகளை உழுது விதை தெளித்தார் என்ற காரணத்தால், இத்திருத்தலம் *திருத்தெளிச்சேரி* என்று பெயர் பெற்றது.
இதை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் இவ்வாலயத்தில் *விதைத் தெளி உற்வசம்* நடத்தப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சியையொட்டி சுயம்வர தபஸ்வினி அம்பாள் சமேத பார்வதீஸ்வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதணை நடக்கும்.
தொடர்ந்து, சுவாமி பிரகாரம் புறப்பட்டு கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த வயலுக்கு செல்வார்.
அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்படும்.
பின்னர் அங்கு தயாராக உழவு செய்து வைக்கப்பட்டிருந்த வயலில் நெல் விதைகள் துாவி விதைக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் உட்பட நிறைய பக்தர்கள் கலந்து கொள்வர்.
*சிறப்புகள்:*
சோழநாட்டில் பஞ்சம் ஏற்பட மக்கள் பசி பட்டினியால் வாட, இட்சுவாகு வம்ச அரசன் இறைவனை வழிபட்டு நிற்க, இறைவன் மழை பொழியச் செய்து உழவனாக வந்து விதை தெளித்ததான்.
திருத்தெளிச்சேரி கற்கோயில் தவம் செய்வதற்கு உகந்த இடம். புத்த நந்தியின் தலையில் இடிவிழச் செய்த தலம்.
பிரதோஷ விநாயகர் (அம்பாளுடன்) சிறப்பு. ஞானசம்பந்தரை விநாயகர் பத்து முறை கூவி அழைத்ததார். அதனால் கூவிபத்து-கோயில் பத்து.
துவஷ்டாவின் சாபத்தால் ஒளியிழந்த சூரியன் இத்தலத்தில் தீர்த்தம் ஏற்படுத்தி இறைவனை வழிபட்டு சாபம் நிவர்த்தியானது.
ஞாயிறு வைகறை சூரியபுஷ்கரணி நீராடல் சிறப்பு.
அம்பரீஷன் அசுவமேத யாகம் செய்து புத்திர பாக்யம் பெற்ற தலம்.
சம்பந்தர் சமனர்களை வென்ற பின் மன்னருக்காக தீயில் காய்ச்சிய இரும்பு பீடத்தில் அமர்ந்து சிவனைத் தவிர வேறு தெய்வமில்லை என நிரூபித்த தலம்.
*இலிங்க வணக்கம்:*
இங்குள்ள இலிங்க மூர்த்தியை பிரமன் வழிபட்டதால், மகாலிங்கம்,
பிரம்மலிங்கம் என்றும் ; அம்பரீஷனால் வழிபடப்பட்டதாதலின் ராஜலிங்கம்
என்றும், சூரியனும் வழிபடப்பட்டதாதலின் பாஸ்கரலிங்கம் என்றும்
அழைக்கப்படுகிறது.
*திருவிழாக்கள்:*
இத்தலத்தில் சோமவாரம் (திங்கட்கிழமை) வழிபாடு சிறப்பு.
ஆவணியில் விதை நெல் தெளிக்கும் விழா ஆண்டுதோறும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.
*பூஜை:*
சிவாகம முறையில் நான்கு கால பூஜை.
காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
*அஞ்சல் முகவரி:*
அ/மி, பார்வதீஸ்வரர் திருக்கோயில்,
கோயில் பத்து, காரைக்கால் அஞ்சல், புதுவை மாநிலம்-609 602.
*தொடர்புக்கு:*
சரவணபவ குருக்கள்.
97866 35559,
99943 45452.
மாரியப்பன். மெய்க்காவல்.
93604 08611...04368-227660
திருச்சிற்றம்பலம்.
*நாளைய தலம்.....திருத்தரும புரம்.*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
No comments:
Post a Comment