Thursday, August 17, 2017

NEW VEDA PATASALA AT GOVINDAPURAM

Appeal from Brahmasri.Govindapuram Balaji Bhagavatar


===============

ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பகவந் நாம போதேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் விளங்கும் கோவிந்தபுரம் என்னும் திவ்ய க்ஷேத்திரத்தில் (கும்பகோணம்- ஆடுதுறை மார்க்கம்) ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகளால் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட ஸத்குரு ஶ்ரீ ஞானானந்த பாதுகா மண்டபத்திற்கு அருகில் "ஜகத்குரு ஸ்ரீ சிவரத்னகிரி மஹா ஸ்வாமிகள் வேத வித்யாலயம்" என்ற பெயரில் ருக் வேத, க்ருஷ்ண யஜுர் வேத பாடசாலை ஸ்ரீ ஸத்குருநாதரின் அநுக்ரஹத்துடனும் மஹாரண்யம் ஶ்ரீஶ்ரீ முரளிதர ஸ்வாமிஜியின் அருள் வழிகாட்டுதலுடனும், ஸ்ரீ குரு லோகோபகார ட்ரஸ்டின் ஏற்பாட்டினால் மங்கள ஹேமலம்ப ஆவணி  ஸோமவாரம் திருவோணத்தன்று  (4-9-2017) துவங்குகிறது.

கும்பகோணம் ஸ்ரீ கைலாசநாத கனபாடிகள் ருக்  வேதத்திற்கும் 
வேப்பத்தூர் ஸ்ரீ விச்வநாத கனபாடிகள் யஜுர்வேதத்திற்கும் அத்யாபகர்களாக இருக்க அன்புடன் இசைந்துள்ளனர்.

ஸமஸ்த லோகங்களையும் ரக்ஷிக்கும் வேதம் ஸத்பாத்ரமான வித்யார்த்திகளுக்கு கற்பிக்கப்படுவதாலையே ரக்ஷிக்கப்படும்.

வசதியான தங்குமிடம், ஆஹார வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வேதம் கற்க விரும்பும் மாணவர்களையும் வேதத்திற்கு தங்கள் குழந்தைகளை அர்ப்பணிக்கும் பெற்றோர்களையும் வணங்கி வரவேற்கிறோம்.

தொடர்பு கொள்ள வேண்டிய அன்பர்கள்

ஸ்ரீ ஜெயராமன் 9840854708 , ஸ்ரீ சந்த்ரமௌலி 9940132254, ஞானேஷ்வர் 9789987028, 

தொலைபேசி எண்:-
04352473300.

இந்த வேத கைங்கர்யத்திற்கு காணிக்கை செலுத்த விரும்புவோர் ஸ்ரீ குரு லோகோபகார ட்ரஸ்ட் என்ற பெயரில் பணமாகவோ, காசோலை, வரைவோலையாகவோ செலுத்தலாம்.

Shri Guru Lokopakara Trust
City union bank, Thiruvidaimarudur branch, s.b. a/c no.500101011449551, IFSC code CIUB0000021, MICR code 612054005.

மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் கோவிந்தபுரம் ஸ்ரீ பாலாஜி பாகவதரைத் தொடர்பு கொள்ளலாம்.
8056202343.

பாடசாலை வித்யார்த்திகள் தவிர வேதம் கற்க, அனுஷ்டானம் தெரிந்து கொள்ள விரும்பும், உபநயனம் ஆனவர்கள் அனைவரும், வயது வரம்பில்லாமல் வரலாம்.

 ருத்ரம் சமகம் புருஷஸூக்தம் நாராயண ஸூக்தம் ஸ்ரீஸூக்தம் துர்கா ஸூக்தம் சீக்ஷாவல்லி ப்ருகுவல்லி நாராயணவல்லி  நவக்ரஹ மந்த்ரம் ஸந்த்யாவந்தன மந்த்ரம்,விஷ்ணு ஸஹஸ்ரநாமம்,  லலிதா  ஸஹஸ்ரநாம்ம்
இந்த்ராக்ஷி சிவகவசம் மற்றும் ஸ்தோத்திரங்கள் கற்றுத் தரப்படும்

No comments:

Post a Comment