*இந்துக்களை அவமதிக்கும் "மேற்கத்திய ஊடக" நிறுவனம்*
அந்த அழிவுப்பாதையில் ஒரு மைல்கல்லாக ஒரு நிகழ்ச்சியை 11-10-09 அன்று "ஸ்டார் விஜய்"தொலைக்காட்சி அரங்கேற்றியது. "ஸ்டார் விஜய்" ராபர்ட் முர்டாக் என்பவரின் "ஸ்டார் நெட்வொர்க்" குழுமத்தைச் சேர்ந்த, ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் "நீயா நானா" என்றொரு நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது இந்நிறுவனம்.
இந்நிகழ்ச்சியைத் தயாரிப்பவர்கள் "மெர்குரி கிரியேஷன்ஸ்" என்று சொல்லக்கூடிய ஒரு நிறுவனம். இதன் நிர்வாகத் தலைவராக (CEO) 'திரு.ஆண்டனி' இருக்கிறார். இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் 'கோபிநாத்'என்பவரும் ஒரு ஹிந்து விரோதி என்றே அறியப்படுகிறார். ஒரு கருப்பொருளை எடுத்துக் கொண்டு அதை இரண்டு குழுக்கள் விவாதிப்பதே இந்நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் இறுதியில் நிறுவனத்தின் நோக்கம் என்னவோ அதையே தீர்ப்பாக கோபிநாத் அறிவிப்பார்.
நாட்டில் விவாதிக்கப் படவேண்டிய பல பிரச்சினைகள் இருக்கும்போதும், இந்நிறுவனம் பல முறை ஹிந்து கலாசாரம், ஹிந்து ஆன்மீகம், ஹிந்து பண்பாட்டின் பழக்க வழக்கங்கள் என்று ஹிந்து மதம் சம்பந்தப்பட்ட கருப்பொருள்களையே விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு, விவாதத்தினிடையே அவற்றை கேலி செய்து, நிந்தனை செய்து, அவமதித்து, அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஹிந்துப் பெரும்பான்மையின மக்களின் மனங்களில் சந்தேகம், நம்பிக்கையின்மை போன்ற விஷவித்துக்களை விதைத்து, அவர்களே தங்கள் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் வெறுத்து ஒதுக்குமாறு செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது.
"குலதெய்வ வழிபாடு தேவையா?", என்ற தலைப்பில் சில மாதங்களுக்கு முன்னர் விவாதம் நடத்தி ஒளிபரப்பு செய்யப்பட்டது. விவாதத்தில் பங்கேற்றவர்கள், பெற்றோர்கள் ஒரு குழுவாகவும் இளைஞர்கள் ஒரு குழுவாகவும். பெற்றோர்கள் குலதெய்வ வழிபாடு தேவை என்றும் இளைஞர்கள் குலதெய்வ வழிபாடு தேவையில்லை என்பது போலவும் ஒளிபரப்பப்பட்ட இந்நிகழ்ச்சி, பார்ப்பவர்கள், குறிப்பாக இளைஞர்கள் மனதில் என்ன மாதிரியான எண்ணங்களை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
அதே போல், "கோவில்களில் வடமொழியில்தான் அர்ச்சனை செய்யவேண்டுமா", "அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாமா" போன்ற தலைப்புகளை உதாரணமாகச் சொல்லலாம். இவ்விவாதங்களில் வைதீக, ஆகம முறைகளைத் தவறாக விமரிசித்தும், பிராம்மண சமுதாயத்தினரை தாக்கியும் கருத்துகள் சொல்லப்பட்டன. பூசாரிகள், குருக்கள் இடையே பகை ஏற்படுத்துவதும், கிராமத் தெய்வங்களை வழிபடுபவர்களை ஹிந்து கலாசாரத்திலிருந்து பிரிப்பதுமே நோக்கம் கொண்டதாக இந்நிகழ்ச்சி அமைந்தது. பிராம்மண கலாசாரமே ஹிந்து கலாசாரம் என்பது போலவும், அதற்கும் தமிழ்க் கலாசாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போலவும் மக்கள் மனதில் குழப்பம் விளைவிக்கும் விதமாக நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சி.
இந்த மாதிரியான விவாதங்களில் கலந்து கொள்பவர்கள், குறிப்பாக நிறுவனத்தின் நோக்கத்திற்குச் சாதகமாகப் பேசக்கூடிய அணியில் பங்கு பெறுபவர்கள் அந்நிறுவனத்தால் முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இதே கோபிநாத் நடத்திய இதே 'நீயா நானா' நிகழ்ச்சியில் நேரிடையாகப் பங்கேற்ற அனுபவம் எனக்கு உண்டு.
சில சமயங்களில், எதிரணியில் பங்கு பெறுபவர்கள் தொலைக்காட்சியில் தங்கள் முகம் தெரியவேண்டும் என்று அலைபவர்களாக இருப்பர். அந்த இந்துக்கள், நம் கலாசாரத்தை நாமே குறை சொல்கிறோமே, கிண்டல் செய்கிறோமே என்கிற நினைப்பே இல்லாமல், கேனத்தனமாக சிரித்துக் கொண்டும், மடத்தனமாக உளறிக் கொண்டும், தொலைக் காட்சியில் தங்கள் முகம் சில நிமிடங்கள் தெரியவேண்டும் என்பதற்காக தன்மானம், சுயமரியாதை என அனைத்தையும் இழந்து நிற்பதுதான் மிகவும் வேதனை.
இதே போல் தான், கடந்த 11-ஆம் தேதியன்றும் "பெண்கள் தாலி அணிவது அவசியமா" என்ற பொருள் விவாதிக்கப் பட்டது. தாலி தேவையில்லை என்கிற விஷவித்தை மக்கள் மனத்தில் விதைப்பது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களின் நோக்கம். வழக்கம்போல் அந்த நோக்கத்திற்கு ஏற்றவாறு நிகழ்ச்சியை நடத்திச் செல்வது கோபிநாத்தின் நோக்கம்.
எனவே 'தாலி தேவையில்லை' என்கிற அணியில் பேசியவர்கள் முன்னரே தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என்பது சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. இவர்களில் சிலர் ஹிந்து விரோதி என்பதும் 'பகுத்தறிவு'ப் பாசறையில் இருந்து வந்தவர்கள் என்பதும் நிதர்சனம். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய பிரபலம் 'நிர்மலா பெரியசாமி' என்கிற 'முற்போக்கு'ச் சிந்தனையாளர். ஒரு காலத்தில் தொலைக் காட்சிகளில் செய்தி வாசிக்கும்போதே இவரின் லட்சணத்தைப் பலர் பார்த்திருக்கலாம். மற்றபடி இவரைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.
விவாதங்களில் சொல்லப்பட்ட "முத்தான" கருத்துகள்
தாலி அணிவது வெறும் மூடநம்பிக்கையே. அதில் தெய்வீகமோ, புனிதத்துவமோ ஒன்றும் இல்லை. அது ஒரு சாதாரண பொருள் தான். பெரும்பான்மையான பெண்கள் இப்போது தாலி அணிவதில்லை.வேலைக்குச் செல்லும் பெண்கள் மணமானவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை. எனவே, தாலியை தங்கள் ரவிக்கைக்குள் மறைத்துச் செல்கிறார்கள்.பல பெண்கள் வீட்டை விட்டு வெளியில் கிளம்பும்போது தாலியை வீட்டிலேயே கழற்றி வைத்து விடுகிறார்கள்.பெரும்பான்மையான பெண்கள் இரவில் படுக்கும்போது தாலியைக் கழற்றி வைத்து விடுகிறார்கள்.தாலி என்பது நாய்களின் உரிமம் போன்றது தான். நாயின் உரிமத்தை அதன் கழுத்தில் தொங்க விடுவதைப்போல் பெண்ணின் கழுத்தில் தாலி தொங்குகிறது. அவ்வளவு தான். (இதைச் சொல்லியது ஒரு கிறுத்துவப் பெண்மணி).
நிகழ்ச்சியினிடையே கோபிநாத் ஒரு பெண்மணியிடம், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது, அறுவை சிகிச்சை சமயங்களில் மருத்துவர் தாலியைக் கழற்றச்சொன்னால் கழற்றுவீர்களா?" என்று கேட்க "கழற்றிவிட்டு சிகிச்சை முடிந்த பின்னர் அணிந்துகொள்வேன்" என்று கூறிய பெண்மணியிடம், "மருத்துவர் என்ன செய்யச் சொன்னாலும் செய்வீர்களா?" என்று கேவலமாக ஒரு கேள்வியைக் கேட்டு அந்தப் பெண்மணியை அவமானம் செய்துள்ளார் கோபிநாத்.
நிகழ்ச்சியில், "தாலி தேவையில்லை" என்ற அணியில் பல பெண்கள் தாலியைக் கழற்ற தயாராக இருந்தார்கள். ஒரு 65 வயதான ஒரு முற்போக்கான பெண், 'இங்கேயே இப்போதே தாலியை கழற்றுவீர்களா?' என்று கோபிநாத் கேட்டவுடன் தாலியைக் கழற்றி அவர் கையில் கொடுத்தார். நிகழ்ச்சியின் இறுதியில், 'தலைமை' தாங்கியவர்களில் ஒருவரான "ஓவியா" அந்தப் பெண்ணின் ஆணித்தரமான முடிவுக்குப் பாராட்டி, "சிறந்த பங்கேற்பாளர்" என்ற பரிசு வழங்கி கௌரவித்தார். அப்போது அந்தப் பெண்ணின் 'தைரியத்தையும்' 'பகுத்தறிவையும்' பாராட்டி கையொலி எழுப்புமாறு அனைவரையும் வற்புறுத்தியுள்ளார் கோபிநாத்.
தாலி அணிவது அவசியம்; அது நமது கலாசாரம் என்று அதன் முக்கியத்துவத்தைப் பேசிய எதிரணியினரின் கருத்துக்கள் பல நிகழ்ச்சித் தொகுப்பில் மறைக்கப் பட்டுள்ளன என்பது நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு நிதர்சனமாகத் தெரிந்தது. நிகழ்ச்சியை நடத்திய கோபிநாத் வேண்டுமென்றே தாலிக்கு ஆதரவாகப் பேசியவர்களைக் கேலி செய்துள்ளார். திருமணம் ஆகாத இளம்பெண்கள் மனதிலும் மற்றும் கிராமப்புற பெண்கள் மனதிலும் இந்த நிகழ்ச்சி எந்த மாதிரியான எண்ணங்களை விதைத்திருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை.
தாலியில்லையேல் "பகுத்தறிவு"ம் இல்லை, "சுயமரியாதை"யும் இல்லை.
தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக 'தமிழர் இந்துக்கள் அல்ல' என்கிற பிரசாரத்தை, தொடர்ந்து செய்து வருகின்றன. ஹிந்து கலாசாரம் வேறு, தமிழ் கலாசாரம் வேறு என்று எப்படியெல்லாமோ தமிழ் ஹிந்துக்களை ஏமாற்ற முயற்சி செய்தும் வருகின்றன. இம்மாதிரியான முயற்சிகள் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
ஹிந்து கலாசாரத்தைக் கொச்சை படுத்தும் நோக்கத்துடன் இவர்கள் ஆரம்பித்த வழக்கம்தான் "சுயமரியாதைத் திருமணம்" என்பது. சுயமரியாதைத் திருமண இயக்கம் படுதோல்வி அடைந்தது என்பது வேறு விஷயம். நடக்கும் ஒரு சில சுயமரியாதைத் திருமணங்களில் கூட, திருமண மந்திரங்களையும், திருமணத்தை நடத்தும் பிராம்மண புரோகிதரையும், தெய்வ வழிபாடுகளையும்தான் இவர்களால் நிறுத்த முடிந்ததே தவிர "மாங்கல்ய தாரணம்" என்னும் தாலி கட்டும் புனிதச் சடங்கை நிறுத்த முடியவில்லை. திராவிடத் தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களில் நடத்தப் படும் சுயமரியாதைத் திருமணங்களில் கூட, பெரியார் பள்ளி, அண்ணா கல்லூரி என்கிற பகுத்தறிவுப் பாசறைகளில் பயின்று வந்த அத்தலைவர்கள் தங்கள் கையாலேயே தாலிகளை எடுத்துக் கொடுத்து திருமண வைபவத்தை நடத்துகிறார்கள்.
இந்துக்கள் தரும் ஆலோசனைகள்
11-ஆம் தேதி 'விஜய் டிவி' நடத்திய 'நீயா நானா' நிகழ்ச்சியை அடுத்து 12-ஆம் தேதியும், 13-ஆம் தேதியும், இக்கட்டுரையாளருக்கு பலர் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு தங்கள் வேதனையைப் பகிர்ந்துகொண்டனர். மற்ற சில இந்து இயக்கவாதிகளிடமும் பலர் தங்கள் எண்ணத்தைத் தெரிவித்துள்ளனர். இக்கட்டுரையில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒரு முக்கிய உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளது. அந்த உதாரணத்தின்படி விஜய் டிவிக்கும், மற்ற நிறுவனங்களுக்கும் பின்வரும் பொருள்களில் நிகழ்ச்சிகளோ, விவாதங்களோ நடத்துமாறு இந்துக்கள் ஆலோசனைகள் வைக்கின்றனர். இந்த ஆலோசனைகளைச் சவால்களாக எடுத்துக் கொண்டு இந்த நிறுவனங்களின் உரிமையாளர்களும், அதிகாரிகளும் நிகழ்ச்சிகள் தயாரித்து ஆவன செய்வார்களா? இதோ சில தலைப்புகள்:
1)முஸ்லீம் பெண்கள் தங்கள் முகத்தை மூடி பர்கா அணிவது அவசியமா?
2)இஸ்லாமியச் சடங்கான 'சுன்னத்' தேவையா?மொஹர்ரம் தினத்தன்று தங்கள் மார்பில் ரத்தம் வரும் அளவிற்கு அடித்துக் கொள்ளும் மூட நம்பிக்கை அவசியமா?
3)ரமலான் மாத விரதத்தினால் பயன் உண்டா இல்லையா?
4)கிறுத்துவப் பாதிரிமார்கள் பாவாடை அணிவது எதற்காக? அவ்வாறு அணிவது அவசியமா? பாவாடையின் பயன் என்ன?
5)மோதிரம் மாற்றித் திருமணம் செய்து கொண்ட கிறுத்துவ தம்பதியர் பின்னர் அவற்றை அணிவது அவசியமா?
6)தலித் கிறுத்துவர்களுக்கு பேராயர் பதவிகள் கொடுப்பதில்லையே, ஏன்? அவர்களுக்கு தேவாலயங்களில் தனியாக இருக்கைகள் கொடுத்து பிரித்து வைத்திருப்பது ஏன்? அவர்களுக்கு மயானங்களிலும் தனியாக இடம் ஒதுக்குவது ஏன்? உயர் சாதியினர்கள் அவர்களை தங்கள் சர்ச்சுகளில் அனுமதிப்பதில்லையே, ஏன்?
7)மசூதிகளில் முஸ்லீம் பெண்களை அனுமதிப்பதில்லையே, ஏன்?
உயிர்த்தெழுந்து வருவார் என்று சொல்லப்பட்ட இயேசு இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் வரவில்லையே, ஏன்?
8)இந்துக் கடவுள்களை சாத்தான்கள் என்றும், இந்து ஆன்மீகச் சடங்குகளை மூடநம்பிக்கைகள் என்றும் பழித்த கிறுத்துவர்கள் சிரிதும் வெட்கமில்லாமல் இந்துக்களின் பழக்க வழக்கங்களைக் காப்பியடித்து கலாசாரக் களவு செய்வது ஏன்?
9)மசூதிகளில் தமிழ் வழிபாடு செய்யாதது சரியா, தவறா? அராபிய மொழி தெரியாத தமிழ் முஸ்லீம்களும், முஸ்லீமாக மதமாற்றம் செய்யப்பட்ட தமிழர்களும் எந்த மொழியில் தொழுவார்கள்?
இன்னும் பல பொருள்கள் சுட்டிக் காட்டலாம். இம்மாதிரியான பொருள்களில் விவாதங்களும், நிகழ்ச்சிகளும், நடத்த தொலைக்காட்சி நிறுவனங்கள் முன்வருமா? கட்டுரைகள் எழுத பத்திரிகைகள் முன்வருமா? விவாதத்திற்காகச் சுட்டிக்காட்டப்ப்பட்ட மேற்கண்ட தலைப்புகள், தொலைக்காட்சி நிறுவனங்களின் கோழைத்தனத்தையும், அயோக்கியத் தனத்தையும், மற்றும் ஹிந்துக்களின் வேதனைகளையும், மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்பட்டனவேயன்றி, கிறுத்துவ, இஸ்லாமிய மக்களின் மனதைப் புண்படுத்தவதற்காக அல்ல. மேற்கண்ட தலைப்புகளில் விவாதங்கள் நடந்தால் கிறுத்துவர்களும், இஸ்லாமியர்களும் எவ்வளவு தூரம் மனம் புண்பட்டுப்போவார்களோ, அந்த அளவிற்கு இந்துக்கள் புண்பட்டு மனவேதனை அடைந்துள்ளார்கள் என்பதைத் தெரிவிப்பதற்காகவே சொல்லப்பட்டன.
No comments:
Post a Comment