படித்ததில் பிடித்தது
ராமாயணம் பிரயோக-சாஸ்திரம் என்று அழைக்கப் படுகிறது. அதாவது சந்சாரத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்; எப்படி உட்காருவது; எப்படி எழுந்திருப்பது; சஹோதரனோடு நம்முடைய விவகாரம் எப்படி இருக்க வேண்டும்; மனைவியோடு நம்முடைய விசுவாசம் எப்படி இருக்க வேண்டும்; நம்முடைய குடும்ப-அங்கத்தினர்களோடு நம்முடைய விவகாரம் எப்படி இருக்க வேண்டும்; நம்முடைய தந்தை நமக்கு ஆணையிட்டார் என்றால், அந்த ஆணையை நாம் எப்படி அடிபணிந்து செயல்படுத்த வேண்டும்; சொந்த-பந்தங்களோடு நம்முடைய விவகாரம் எப்படி இருக்க வேண்டும்; இந்த சந்சாரத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். ராமாயணம் பிரயோக-சாஸ்திரம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
கீதை யோக-சாஸ்திரம் என்று சொல்லப் பட்டிருக்கிறது.
ராமாயணம் பிரயோக-சாஸ்திரம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஸ்ரீமத்பாகவதமஹாபுராணம் வியோக-சாஸ்திரம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த சந்சாரம் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக பிடித்துக் கொண்டது. இந்த ஜெகத்தில் நாம் வந்தோம். பிறப்பிலேயே இந்த பிராணி இயற்கை-சுபாவத்தோடு இருக்கிறது. நிர்மலமாக இருக்கிறது. அதன் இதயத்தில் பாவம் எதுவும் இருப்பதில்லை! சின்ன பாலகனைப் பாருங்கள் – களங்கமற்றவனாக இருக்கிறான். ஆனால், எப்படி-எப்படி அவன் சந்சாரத்தில் பிரவேசிக்கிறானோ – எப்படி அவன் பெரியவனாக வளருகிறானோ – இந்த மாயையின் தத்துவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவனை சூழ்ந்து கொள்ள ஆரம்பிக்கின்றன. இந்த ஜீவனின் இயற்கை-சுபாவம் மாறி விடுகிறது. அவனுடைய சுபாவமாக இருந்தது எது? பரமாத்மாவின் பஜனை செய்வது! இவனுடைய சுபாவமாக இருந்தது பகவானை அடைவது! ஆனால், இந்த ஜெகத்தில் எப்போது அம்மா-பாட்டி தேனின் இரண்டு துளிகளை நாக்கில் தடவி விட்டார்களோ, அப்போது அந்த சுவை அவ்வளவு தித்திக்க ஆரம்பித்து விட்டது!
எப்போது அவன் தாயில் கர்ப்பத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தானோ, அப்போது ஒவ்வொரு நிமிஷமும் – ஒவ்வொரு கணமும் – அழுது-அழுது பகவானிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான், 'ஹே பகவன், ஒரு தடவை என்னை இந்த நரகத்தின் வாசலிலிருந்து வெளியே எடுத்து விடுங்கள் – நான் உங்களை அப்படி பஜனை பாடுவேன் – அவ்வளவு சிந்தனை செய்வேன் – திரும்பவும் தாயின் கர்ப்பத்தில் சிக்க மாட்டேன்!'
ஏன்?
கர்ப்பவாசமே நரகவாசம்!
கர்ப்பத்தில் இந்த ஜீவன் வந்தானோ இல்லையோ, இவனுடைய நரகவேதனை ஆரம்பமாகி விட்டது!
இந்த ஜீவன் சந்சாரத்தில் வந்தது. அது கொஞ்சம்-கொஞ்சமாக இயற்கைக்கு முரணாக ஆக ஆரம்பித்து விட்டான்! சொத்துக்காக சஹோதரனோடு மல்லுக்கு நிற்கிறான்; சந்சாரத்தில் உயிரை பணயம் வைக்க தயாராகி விடுகிறான்.
ஜீவனத்தில் வந்தது என்னவோ ஹரி-நாமத்தை ஜெபிக்க! ஆனால், ஜெகத்தின் மாயாஜாலத்தில் சிக்கி விட்டான்!
இந்த ஸ்ரீமத்பாகவதம் நமக்கு விடுபடுவதற்கான உபாயத்தைக் காண்பிக்கிறது – நாம் இந்த ஜெகத்தை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக பிடித்துக் கொண்டோமோ, அதே மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக இதைஎப்படி விடுவது சாத்தியமாகும்!
ஏன்?
ஏனென்றால், ஒரே நாளில் விடுவதற்கு பிராக்டிஸ் ஆவதில்லை; ஒரே நாளில் வைராக்கியம் ஆவதில்லை!
धीरे धीरे रे मना, धीरे सब कुछ होय |
माली सीचे सों घड़ा, ऋतू आये फल होय ||
கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய பஜனையை அதிகரிக்க வேண்டி இருக்கும்; கொஞ்சம் கொஞ்சமாக சந்தர்களின் சேவையில் ஈடுபட வேண்டும். எப்படி-எப்படி சந்த-சேவையில் நிறம் ஊறுகிறதோ நமது துணி ஹரிநாமத்தில் படிந்து விடுகிறது! ஒரு தடவை ஹரிநாமத்தின் துணியை நாம் போர்த்திக் கொண்டோம் என்றால், நிச்சய ரூபத்தில் நமது மங்களமாகி விடும்!
இது வியோக சாஸ்திரம்
சாஸ்திரம் சொல்கிறது – பாவி-மனிதனுடைய தேகத்திலிருந்து பிராணனும் அவ்வளவு சுலபமாக விடுபடுவதில்லை! எப்போது பிராணன் இந்த சரீரத்தை விடுகிறதோ, அப்போது 20 கோடி தேள் கொட்டுவது போல வேதனை உண்டாகிறது!
யார் இப்படிப்பட்ட துன்பத்தை அனுபவிப்பதற்கு தயாராவார்கள்?
நாம் நம்முடைய ஜீவனத்தில் மங்களம் விரும்பினோம் என்றால், பகவானுடைய பஜனையை ஆரம்பித்து விடவேண்டும்! இந்த ஸ்ரீமத்பாகவதம் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் நம்மை பகவானோடு அவசியம் சேர்த்து வைத்து விடும்!
No comments:
Post a Comment