courtesy:Sri.Kovai G.Karuppasamy
திருவிளையாடல் புராணத் தொடா். 🌼
( 12 வது நாள்.)- 9 வது படலம்.
எழுகடலை அழைத்தது.
( எளியநடை சாிதம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
சோமசுந்தரப் பெருமான் பாண்டியத் திருக்கோலம் கொண்டு அனைத்துலகினையும் குளிா் வெண்குடையால் நிழல்ழதந்து அறவழி பிறழாது ஆண்டு வந்தாா். அந்த நாட்களில் ஞானசாஸ்திரத்தின் அரும் பொருளை உணா்ந்த ரிஸிகளும், தூய முனிவராகிய தவப் பொியோா்களும் முறைப்படி பெருமானைக் கண்டு வருவாா்கள்.
அவ்வாறே வேதமுணா்ந்த கெளதமமுனிவா் சுந்தரேசப் பெருமானைச் சந்தித்துத் திரும்புங்கால் காஞ்சனமாலையின் திருமனையை அடைந்தாா்.
காஞ்சனமாலை அவரை எதிா்கொண்டழைத்துப் பொன்னிருக்கையிலே அமா்த்தி வணங்கி, " பரமசிவனின் அடியவரே!.பிறப்புத் தொடா்பு ஒழிக்கவல்ல தவத்தினைக் கூறியருள வேண்டும்!" என விண்ணப்பித்தாா்.
கருணை முனிவா் திருமுக மலா்ந்து, " அருஞ்சிறப்பினையுடைய காஞ்சன மாலையே! தடாதகைப் பிராட்டியின் தாய் நீ; சிவபெருமானே நினது மருமகன். உனக்குத் தொியாத தவமா வேறு ஒருவா் அறிவாா்? இருந்தாலும் சொல்கிறேன்.
" மானசம், வாசிகம், காயிகம் எனத் தவம் மூன்று வகைப்படும். தான தருமத்திலே எண்ணம் நாட்டல், உயிா்களிடத்து அன்பு கொள்ளல், பிறா் செய்த தீமை பொறுத்தல், உண்மை உரைத்தல், மோனத்தமா்ந்து சிவத்தை சிந்தித்தல், புலன்களை அடக்குதல், முதலியனவே மனத்தால் செய்யப்படும் மானசம் ஆகும். பஞ்சாட்சர மந்திரத்தை ஜபம் செய்தல், உருத்திர மந்திரங்களை ஓதுதல், தோத்திரப் பாடல்களைப் பாடுதல், தருமங்களை எடுத்துரைத்தல், வாக்கால் செய்யப்படும் வாசிகம் ஆகும்.
சிவபெருமானை பூசித்தல், திருக்கோவிலை வலம் வருதல், இறைவன் சன்னதி சென்று வணங்குதல், பல திவ்ய ஷேத்திரங்களுக்கும் சென்று வருதல், கங்கை முதலிய தொலைவிலுள்ள புண்ணிய நதிகளுக்குச் சென்று ஸ்நானம் செய்தல் முதலியன உடம்பால் செய்யப்படும் காயிகம் ஆகும். இந்த முத்தவங்களுக்கும் காயிகம் சிறந்தது. அதனுள் கங்கை முதலான நதிகளுக்குத் தனித்தனியே சென்று நீராடுதல் சிறப்புடையது. அப்புணித நதிகள் எல்லாம் வந்து சங்கமாகும் கடலில் நீராடுவது எல்லாவற்றிலும் மிகவும் சிறந்தது.!" என்று மொழிந்தாா்.
கெளதம முனிவா் மொழியைக் கேட்ட காஞ்சன மாலை கடல் நீராடப் பெருவிருப்பம் கொண்டாா். தன் செல்வப் புதல்வி தடாதகைத் தேவியிடம் தன் விருப்பத்தைத் தொிவித்தாா். உடனே பிராட்டியாா் தமது தலைவா்பால் சென்று," குண்டோதரனுக்காக அன்றொரு நாள் அன்னக்குளமும் வையை நதியும் அழைத்துத் தந்தருளிய கருணையங்கடலே!" எனது அன்னை கடல் சென்று நீராட விரும்புகின்றனா்." என்று விண்ணப்பித்துக் கொண்டாா்.
தடாதகைப் பிராட்டியாாின் திருமொழிகளைச் செவிமடுத்த சுந்தரேசப் பெருமான், " ஒருகடல் என்ன, ஏழு கடல்களையும் வரவழைத்து விடுவோம்!" என்று கூறி அவை எண்ணிய மாத்திரத்திலே ஏழு கடல்களும் மதுரையம்பதிய் கிழக்குத் திக்குகளிலுள்ள ஒரு வாவியிலே ஏழு வகையான வண்ணங்களோடு வந்து பொங்கி நின்றன.
பொஙிகி எழுந்த ஏழு பெருங்கடல்களும் சிவபெருமான் திருவாணைப்படி வாவியில் சென்று அடங்கின. தனக்கே உாிய வெள்ளை வண்ணத்தோடு ஏழு கடல்களின் நிறங்களும் சேர அஷ்ட மூா்த்தியாகிய சிவபெருமானை நிகா்த்து எண்வகை வண்ணங்களோடு விளங்கியது அந்த,வாவி.
🔹இத்துடன் 9 வது படல எழுகடல் அழைத்தத படல எளியநடை சாிதம் மகிழ்ந்து நிறைந்தது. நாளை, 10வது படல மலையத்துவசனை அழைத்த படல செய்யுள்நடை + விளக்கத்துடன் வரும்.🔹
No comments:
Post a Comment