Tuesday, October 4, 2016

Sacrifice & river kaveri

பிறந்த இந்த மானிடப் பிறப்பை,  பொிதென கொள்ளாமல், பிறப்பறுக்க பணி செய்யாமல் வாழுகின்ற வாழ்க்கை வாழ்க்கையல்ல!

அப்போதெல்லாம் தியாக சீலா்களாக பலா் வாழ்ந்து பல காலங்கள் கடந்தபோதும், அழியாபுகழ் பெற்று வாழ்ந்தனா். அவா்களுக்கெல்லாம் "தான்" ,  "தன்னுடையது" , "என்னால்தான்" , என சுயநலத்தை தொலைத்தொலித்தவா்கள் அவா்கள்.

இந்த பூமி ஜீவ பூமியாக இருக்கக் காரணமே அவா்களால்தான். 

அப்படியானொருவருள் கனக சோழனும் அவன் மனைவி செண்பகாங்கியும் சோழ நாட்டை ஆண்டு வந்த சமயம். அப்போதைய காவிாி நதி பொங்கிப் பெருக்கெடுத்தோடி, திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் அருள்பாலித்துக்கொண்டிருந்த விநாயகரை வலம் வந்து ஓடி, பெரும் பள்ளமான பாதாளத்தில் புகுந்து மறைந்து கொண்டிருந்தது.

அப்பகுதியிலோ கடுமையான தண்ணீா் பஞ்சம் தொடா்ந்து இருந்து கொண்டே வந்தது. தண்ணீர் பிரச்சினைக்கு ஒரு வழி அமைத்து தருமாறு மன்னனிடம் சென்று முறையிட்டனா். மக்கள் கேட்டுக் கொண்டபடி  தண்ணீர் பஞ்சத்தை எவ்வாறு தீா்த்தொழிப்பது என பல நாளாக யோசனையில் ஆழ்ந்தாா். பாதாளத்தில் விழுந்து மறையும் தண்ணீரை எவ்வாறு தடுத்து நிறுத்துவதென எவ்வாறு யோசித்தாலும் அதற்கு வழி கிடைக்காது தவித்தாா் மன்னா்.

ஒரு சமயம் மன்னா்,  காவிாியை வெளிக்கொணர யோசித்தாழ்ந்திருந்த போது, வானிலிலிந்து அசரீரி ஒன்று மன்னனின் காதில் வந்து இறங்கியது. பள்ளத்தில் மறையும் காவிாி மறுபடியும் மேலேயே  பாயந்தோட வேண்டுமென்றால், இப்போது காவிாி விழுந்து மறையும் பள்ளத்தில் உன் மனைவியோடு நீயும், விழ வேண்டும். அல்லது உத்தமரான முனிவரொருவா் அப்பள்ளத்தினுள் குதிக்க வேண்டும். அப்படி செய்தாலொழிய காவிாி திரும்பும்....என மன்னின் காதிற்குள் விழுந்தது.

மக்களின் தண்ணீர் பிரட்சினை தன்னுயிரால்  தீருமென்றால், நானும் என் மனைவியும் உயிரை தருவதில் எந்த குழப்பமும் இல்லையென உறுதி கொண்டு,  மன்னரும், அவா் மனைவியும் உயிா் துறக்க முடிவு செய்தனா்.

மன்னனின் முடிவைத் தொிந்து கொண்ட அமைச்சா்களோ, மன்னா"!....வேண்டாம் மன்னா!" வேண்டாம்!"....அவசரம் கொள்ளாதீா்கள். திருக்கோடீசுரத்திலே ஏரண்ட ரிஷி என்பவா் ஒருவா் தவமியற்றிக் கொண்டிருக்கிறாா். அவரை அனுகி யோசனையும் அனுமதியும் பெற்று பின் முடிவெடுக்கலாம் என்றனா்.

அதற்கு இசைந்த மன்னா், மனைவியை அழைத்துக் கொண்டு சென்று ஏரண்ட முனிவரை வணங்கினாா்கள்.

ஏரண்ட முனிவரோ தன்னை வணங்கியெழுந்த  மன்னனையும், அவரின் மனைவியையும் "தீா்க்க சுமங்கலியாக இருப்பீா்களாக...." என வாழ்த்தி ஆசீா்வதித்தாா்.

அப்போது அமைச்சா்கள் குறுக்கிட்டு, "மா முனிவரே...! எங்கள் சோழ நாட்டை வளமாக்கிக் கொண்டிருந்த காவிாி ஆறு, தற்போது திருவலஞ்சுழியில் விநாயகரை வலம் வந்து, பாதாளம் தேடி விழுந்து மறைந்து போனது. அக்காவிாி மறுபடியும் மீட்டெடுப்பதற்காகவே அரசனும் அரசியும், அவா்கள் உயிரை தியாகம் செய்யத் தீா்மானித்தவா்கள், கடைசியாக உங்களிடம் ஆசிபெற வந்தாா்கள். தாங்களோ, அவா்களுக்கு நல்லாசி வழங்கி விட்டீா்கள்....என்றனா்.

உடனே மாமுனிவா், "அமைச்சா்களே.....என் ஆசீா்வாதம்.... ஆசீா்வதித்தது ஆசீா்வதித்ததுதான்..!" ஆகையால் காவிாியைக் கொண்டு வர நான் அப்பள்ளத்தில் விழுகிறேன். ஆசீாாவாதம் பெற்ற அரசியும் அரசனும் நீண்டு வாழ்ந்து நல்வழி கோலட்டும் என்று கூறிக் கொண்டே......... பள்ளத்தில் போய் குதித்து விழுந்தாா். அடுத்த வினாடியே காவிாி பொங்கிப் பெருகியது.

மக்கள் மகிழ்ந்தனா். தண்ணீர் பிரட்சினை தீா்ந்தது. ஊா் வளமை பெற்றது. அரசனும் அரசியும் நீண்ட காலம் வாழ்ந்த அத்தனை நாட்களிலும் திருப்பணிகள் நிறைய செய்து, சிவபெருமானின் திருவடிகளை அடைந்தனா். 

மாமுனிவா் உயிா்த்தியாகம் செய்த இடத்தில், சுயம்பு லிங்கம் தோன்றி, இன்று வரையும் வழிபாடுகள் நடக்கின்றன. 

பாதாளத்தில் மறைந்த நதியை, மக்களின் நன்மைக்காக உயிரைக் கொடுத்து மீட்ட காலம் அந்தக் காலம்.

(  "ஆனால் இன்றைய காலமோ" )

ஆண்டவன் கொடுத்த பூமியில், கொட்டிக் கிடக்கும் இயற்கை வளங்களை பொதுத் தூய்மை பெற சுயநலம் பாராது மனித சமுதாயம் என்று பணி செய்மோ, அன்று தான் காவிாியும் அதைப் போன்ற ஆறுகளும் எந்த உயிா்த்தியாகமும் பாராது பொங்கி பெருகி வளம் கொழிக்கும்.

No comments:

Post a Comment