Monday, October 17, 2016

Do sandhyavandanam - Periyavaa

Courtesy: Sri,.Varagooran Narayanan
பிராமணன் தன் கடமையை ஒழுங்காகச் செய்தால்
நானே நேரில் சென்று அனுக்ரஹம் செய்கிறேன்".
(தர்மத்தை ஒழுங்காக செய்யாதவன்தான் என்னைத்
தேடிவர வேண்டும்)
சொன்னவர்;எஸ்.பஞ்சாபகேசசாஸ்திரிகள்.கும்பகோணம். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
1963-ம் வருஷம். ஸ்ரீ பெரியவர்கள் மருதாநல்லூரில் Camp
செய்திருந்தார்கள். கும்பகோணம் ஸ்ரீ கும்பேச்வர ஆலயத்தில்திருப்பாவை-திருவெம்பாவை மகாநாடு வெகுவிமரிசையாக நடைபெற்றது. அப்போது பக்தவத்சலம் தமிழ்நாட்டுமுதல்வராக இருந்தார்..மதுரை மீனாக்ஷிகோயிலைதிருப்பணிசெய்தபி.டி.ராஜன்,
தமிழ்நாட்டு முதல்வர்முதலிய பெரிய பிரமுகர்கள் விஜயம் செய்திருந்தனர்.
ஸந்த்யாகாலம். ஸ்ரீ பெரியவர்கள் அனுக்ரஹபாஷணம்
கேட்க வேண்டும் என்ற ஆசையில் ஸ்ரீ பெரியவர்கள்
அருகில் அமர்ந்து இருந்தேன்.
ஸ்ரீ பெரியவா உபன்யாஸம் செய்யத் தொடங்கும் நேரம்.
என்னைப் பார்த்து, ஆசமனம் செய்வது போல் தன் கையை வைத்துக் கொண்டு என்னை வெளியே செல்லுமாறு சைகைகாட்டினார்கள்.
'இது ஸந்த்யாகாலம். உன் கடமை இப்போது
ஸந்த்யாவந்தனம் செய்வதுதான். என் உபன்யாசத்தை
கேட்பதற்காக, உரிய காலத்தில் ஸந்த்யாவந்தனம்
செய்யாமல் இருக்காதே' என்று சைகை மூலம் எனக்கு
உணர்த்தினார்கள். நானும் திருக்குளத்தில் ஸந்த்யை
செய்யச் சென்று விட்டேன்.
அன்று இரவு பத்து மணிக்கு நாங்கள் அழைக்காமலேயே,
மேலக்காவிரியிலுள்ள எங்கள் க்ருஹத்துக்குத்
தானாகவே வந்து ஒரு மணி நேரம் பரமானுக்ரஹம்
செய்தார்கள்.
பிராம்மணனுக்கு ஸந்த்யாவந்தனம் முதலிய கர்மாக்கள்தான்முக்யமானது; வேறு எதுவும் உயர்ந்தது இல்லை.
'பிராமணன் தன் கடமையை ஒழுங்காகச் செய்தால்
நானே நேரில் சென்று அனுக்ரஹம் செய்கிறேன்.
தர்மத்தை ஒழுங்காக செய்யாதவன்தான் என்னைத்
தேடிவர வேண்டும்' என்ற உண்மையை உலகிற்கு
இதன் வாயிலாக வெளிப்படுத்தினார்கள்

Image may contain: one or more people



No comments:

Post a Comment