யார் பெரியவா - ஞானாநந்தகிரி ஸ்வாமிகளின் விளக்கம்
சிருங்கேரி பெரியவா பெரியவரா இல்லை காஞ்சி பெரியவர் பெரியவரா என்று ஒருவர் ஞானாநந்தகிரி ஸ்வாமிகளிடம் கேட்டார். அதற்கு ஞானாநந்தகிரி ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே நம்மளை விட இரண்டு பேரும் பெரியவா என்று சொன்னார். கேள்வி கேட்கிற உன்னை விட அவா இரண்டு பேரும் பெரியவா. நமக்கு எதுக்கு அந்த விசாரம்? நமக்கு தேவையில்லையே. நமக்கு தேவை எந்த மகான் கிட்ட இருந்து எந்த நல்ல விஷயத்தை கிரஹித்துக் கொண்டு நாம முன்னேற பார்க்கணும். மற்ற விஷயங்கள் நமக்கு தேவையில்லை. அது விதண்டாவாதம்.
கேள்வி கேட்டவர் வாயடைத்துப் போய்விட்டார்.
ஸ்ரீ கோவிந்தபுரம் பாலாஜி பாகவதர் உபன்யாசத்தில் கேட்டது
No comments:
Post a Comment