Friday, September 23, 2016

Andhra - Periyavaa


// எல்லா லிபிகளுக்குள்ளும் தெலுங்கு லிபிக்கு ஒரு விசேஷம் உண்டு. மற்ற லிபிகளிலெல்லாம் தக்ஷிணாவர்த்தமாக, அதாவது வலது பக்கம் சுழித்து எழுத்துக்கள் எழுதப்படுகின்றன. தெலுங்கில் மட்டும் வாமாவர்த்தமாக இடது பக்கம் சுழித்து எழுத்துக்கள் இருக்கின்றன. ஈச்வரனின் வாமபாகத்திலிருக்கிற பராசக்திக்கு வாமமார்க்கம் என்ற உபாஸனையும் உண்டு. இடது அவளுக்கு விசேமானதால் அவளுக்குரிய ஸ்ரீசக்ரத்தில் அக்ஷரங்களை ஆந்திர லிபியிலேயே எழுத வேண்டும் என்பதுண்டு. ஆந்திர பாஷை சிவப் பிரதானமானது என்பார்கள். ஏனென்றால் மற்ற எல்லா இடங்களிலும் மஹா விஷ்ணுவின் அஷ்டாக்ஷரத்துடனேயே அக்ஷராப்யாஸத்தை (படிப்புத் தொடக்கத்தை) ஆரம்பிக்கிறார்களென்றால், தெலுங்கு தேசத்தில் சிவ பஞ்சாக்ஷரத்துடன் தொடங்குகிறார்கள். ஆந்திர தேசமும் தெற்கே காளஹஸ்தி, மேற்கே ஸ்ரீ சைலம், வடக்கே கோடிலிங்க க்ஷேத்ரம் என்பதாக மூன்று சிவஸ்தலங்களுக்குள் - த்ரிலிங்கங்களுக்குள் - அடங்கியிருப்பதால்தான் அதற்கு தெலுங்கு தேசம் என்ற பெயரே உண்டாயிற்று. இதனால்தான் அப்பைய தீக்ஷிதர் தாம் ஆந்திரராகப் பிறக்கவில்லையே என்று குறைப்பட்டு ச்லோகம் செய்திருக்கிறார்.

ஆந்த்ரத்வம் ஆந்த்ரபாஷாசாப் - யாந்த்ர தேச ஸ்வஜன்ம பூ:|

தத்ராபி யாஜுஷீ சாகா ந(அ)ல்பஸ்ய தபஸ: பலம்

//

No comments:

Post a Comment