Sunday, August 21, 2016

You want to die peacefully ... recite this


நோயுற்(று) அடராமல் நொந்துமனம் வாடாமல்

பாயிற் கிடவாமல் பாவியேன் – காயத்தை
ஓர்நொடிக்குள் நீக்கிஎனை ஒண்போரூர் ஐயாநின்
சீரடிக்கீழ் வைப்பாய் தெரிந்து.
- ஸ்ரீமத் சிதம்பரசுவாமிகள், திருப்போரூர் சந்நிதிமுறை
 
எவ்வளவு அழகான பாடல்! நேர்தியான வெண்பா!
 
சிறந்த போரூர் நகர் வாழ எழுந்தருளும் சமராபுரி ஷண்முக! ஐயனே!
(மனித உடலில் 4444 விதமான ஏற்படுமாம்; விதவிதமான இனிப்பு உணவு பொருட்கள் இருக்கும் ஆனாலும் டாக்டர் சொல்லியிருக்கார்னு கஞ்சி குடிப்பார்கள்,உடம்பு இளைகனும்னு உபவாசம் இருப்பார்கள், தூக்கம் இழந்து ஓட்டம் பிடிபார்கள் என்ன கொடுமையான் வாழ்க்கை!) பலவிதமான கொடிய நோய்களால் வேதனை அடையாமல், கடுமையான நோயாலும்,முதுமையாலும் உடல் தளர்ந்து தன் உடம்பிற்கு தேவையான அடிப்படை வேலைக்கு கூட பிறர் உதவி வேண்டும்படி நேர்ந்து; பாயில் படுத்தபடி கிடக்காமல், இங்ஙனம் நோயுற்று படுக்கையில் கிடக்கும் போது, போதுமடா சாமி எனக்கு "நாள்" இன்றைக்கு வருமோ அல்லது நாளைக்கு வருமோ என்று மனம் நொந்து வாடாமல். எந்தவிதமான வலியுமின்றி இந்த கூட்டிலிருந்து ஆவியை இமைப்பொழுதில் நீக்கி (சிலருக்கு நல்ல மரணம்கூட கிடைப்பதில்லை! நோயாலும்,முதுமையாலும் உடலில் எத்தனை வலிகள்! மரணம் சம்பவிக்கும் போது எத்தனை வலிகள்! அதனால்தான் ஏதேனும் வலிஏற்பட்டால் உயிர் போர மாதிரி வலிக்குது சொல்றோமே!)
உன் பத்மபாதங்களில் அல்லது பாதரவிந்தங்களில் வைப்பாயாக! உன் மலரடியில் ஒரு மலராக நான் கிடக்க வேண்டும் இதுவே நான் வேண்டும் வரம்! அதை நீ தரல் வேண்டும் ஐயா!

No comments:

Post a Comment