Sunday, May 8, 2016

Cook-Periyavaa

பல வருடங்களுக்கு முன் நடந்தது. காஞ்சி மகா ஸ்வாமிகள் திருவிடைமருதூரில் ஒரு சத்திரத்தில் முகாமிட்டிருந்தார். ஒருநாள் மதிய போஜனத்திற்கு பின் 3 மணி அளவில் சத்திரத்தில் ஒரே ஆரவாரம். மடத்தைச் சேர்ந்தவர்கள் எதையோ தேடிக்கொண்டிருந்தனர். விசாரித்ததில் தெரிய வந்தது ஒரு தங்க உத்தரிணியை காணவில்லை. எல்லோரையும் விசாரித்தாகி விட்டது. கிடைக்கவில்லை. அப்போது சமையற்கார ராமநாதனை மட்டும் காணவில்லை. அவன் தன் தாயார் உடல்நிலை மோசமாக இருக்கிறதென்று வெளியூர் சென்று விட்டான். அவன் செல்வதற்கு முன் பணம் அட்வான்ஸ் கேட்டிருந்தான். ஆனால் மடத்தில் கொடுக்கவில்லை. அதனால் மடத்திலுள்ளவர்கள் அவன் தான் உத்தரிணியை எடுத்திருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்டார்கள். இவ்விஷயம் பெரியவாளுக்கு தெரிய வந்தது. உடனே மடத்து அதிகாரியைக் கூப்பிட்டு விசாரித்தார். அப்போது அவர்கள் ராமநாதன் கொஞ்ச நாளாகவே சம்பளம் அதிகம் வேண்டுமென்று கேட்டிருந்தான். அதையும் மடத்தில் தரவில்லை. பெரியவா ராமநாதனை கூட்டி வரச்சொன்னார். அவனிடம் என்ன சம்பளம் வாங்குகிறாய் என்று கேட்க  அவனும் 60 ரூபாய் என்றான். எவ்வளவு அதிகம் எதிர்பார்க்கிறே என்றார். 10 ரூபாய் அதிகம் கொடுத்தால் நல்லது என்றான். உடனே பெரியவா அவனுக்கு 75 ரூ. கொடுக்கும்படியும் அவன் கேட்ட அட்வான்ஸும் தரும்படி அதிகாரியிடம் கூறினார். அங்குள்ளவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பின் பெரியவா அவன் பணம் கேட்டு நீங்கள் தராததால் அவன் தான் எடுத்திருப்பான் என்று எப்படி நினைத்தீர்கள். நீங்கள் யாரும் சரியாக தேடவில்லை. பூஜை முடிந்து பூக்களை எங்கே கொட்டினீர்களோ அந்த இடத்தில் போய் தேடிப்பாருங்கள் என்றார். அவர்களும் அப்படியே சென்று தேடியதில் அந்த இடத்தில் தங்க உத்தரிணி கிடைத்தது. பெரியவாள் ஒரு தீர்க்க தர்ஷினி.
ஜய ஜய ஷங்கர ஹர ஹர ஷங்கர !


No comments:

Post a Comment