பீஷ்மரை போல ஆசார்ய பக்தி பண்ணவேண்டும் என்பது தேசிகர் அருள் வாக்கு.
முதலில் பீஷ்மர் "வ்யாஸம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ர மகல்மஷம் பராசராத்மஜம் வந்தே ஸுக தாதம் தபோநிதிம்" என்று அவரின் பரம்பரையும்
அவருக்கு வாய்க்கப்பெற்ற ஆசார்ய அனுக்ரஹத்தையும் கொண்டாடுகிறார்.
வேதமே கொண்டாடு்ம் வசிஷ்டரின் வம்சம் (கொள்ளு பேரன்). சக்தியின் பௌத்ரர், புராணரத்னமான விஷ்ணு புராணமருளிய பராசரரின் புத்ரர்.
இது மட்டுமா? இதைகாட்டிலும் பெருமை என்னவென்றால் ஸுகருக்கு இவர் தந்தை.
இப்படி ஆசார்ய கடாக்ஷம் நிறம்பப்பெற்ற மற்றும் மாஞானிகளின் வம்சத்தில் அவதரித்தவர் என்று வ்யாஸரின் வம்சத்தையே பொற்றுகிறார்.
அடுத்தது அவர் அவதார விசேஷத்தை கொண்டாடுகிறார். "வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே".
இங்கு வ்யாஸரின் அவதார ஏற்றத்தை குறிப்பிடுகிறார். அவர் விஷ்ணுவின் ரூபம் (அவதாரம்). இதற்கு மேல் என்ன வேண்டும்?
கடைசியில் பீஷ்மர் சங்கல்பம் செய்யும் பொழுது "அஸ்ய ஸ்ரீ விஷ்ணோர் திவ்ய ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய,
ஸ்ரீ வேதவ்யாஸோ பகவான் ரிஷி: அனுஷ்டுப் சந்த: ஸ்ரீ மஹாவிஷ்ணு பரமாத்மா ஸ்ரீமந்நாராயணோ தேவதா…"
அதாவது ஒரு மந்த்ரம் எடுத்து கொண்டால் அதை உபதேசித்த ரிஷி யார்? எந்த சந்தஸ்சில் அனுக்ரஹித்தார்?
அவர் உபதேசித்த மந்த்ரத்தில் கூறப்படும் தேவதை யார்? என்று ஸங்கல்பித்தபின்பு தான் அந்த மந்த்ரத்தை சொல்வர்.
இதை நாம் நமது நித்ய கர்மானுஷ்டாநமான ஸந்த்யா வந்தனத்தலும் காணலாம்.
ஆக பீஷ்மர் கூறும் இந்த ஸஹஸ்ர நாமம் அனைத்துமே வ்யாஸரால் தனக்கு உபதேசிக்க பட்டது என்று கூறி அதை வெளியிட்டார்.
இப்படி பீஷ்மர் தனக்கும், தன்னை கொண்டும் மேலும் பல க்ரந்தங்களை இயற்றி லோக உஜ்ஜீவனம் செய்த வ்யாஸரின் க்ரந்தத்தின் (உபதேசத்தின்) ஏற்றத்தை கூறுகிறார்.
ஆக பீஷ்மர் தனது ஆசார்யன் பரம்பரா மற்றும் அவருக்கு கிடைத்த ஆசார்யன் கடாக்ஷத்தையும்,
அவரின் அவதார மஹாத்மியத்தையும் அவரது க்ரந்த மஹிமையும் பொற்றிய பின்பு தனது ஸஹஸ்ரநாமத்தை ஆரம்பிக்கிறார்.
பீஷ்மர் கூறியதில் இத்தனை தாத்பர்யம் உள்ளது.

No comments:
Post a Comment