Wednesday, March 9, 2016

for ladies

Courtesy:Sri.JK.sivan

        பெண்களுக்கென்று  சில  வார்த்தைகள்  ........


எத்தனையோ  காலத்திற்கு முன்பு  இருந்த வாழ்க்கை நிலை வேறு. இப்போது வேறு  என்று  இருந்தாலும், அக்காலத்தவர்கள்  பெண்களுக்கென்று சில பழக்க வழக்கங்களை விதித்திருந்தது  இப்போதும் பின்பற்றத்தக்கவை போல்  காண்கிறதே.   சிலவற்றை  கட்டாயம்  நம் பெண்களுக்கென்றே உண்டான  சில  ஆசாரங்களாக  சம்ப்ரதாயமாக  கொள்ளலாம் என்று தோன்றுகிறது.  

அவற்றில் சிலவற்றை  நினைவுக்கு கொண்டுவருவதால்  பலர்  பயனுற  வாய்ப்பிருக்கும் என்ற  நம்பிக்கையில்  இதை ஆரம்பிக்கிறேன்.


ஒரு க்ஷணம்  கூட  நெற்றியில்  ஏதோ ஒரு  திலகம்  இல்லாமல் இருக்கவேண்டாம்.  இதை  பின்பற்றலாம்.

தலையை  இரு கையாலும்  சொரியும்  பழக்கம் இருந்தால்  தீபாவளியோடு  அது  போகட்டும்.

கர்ப  ஸ்திரீகள் தேங்காயோ,பூஷணி, பரங்கி  காயையோ  முழுதுமானதை  உடைக்கக் கூடாது.  இவைகளை வீட்டில்  உடைக்கும்போது  அந்த அறையிலேயே  இருக்கக்கூடாது.

எந்த பெண்ணும்  ஒரு கணவன் மனைவி  பிரிவதற்கு  காரணமாக  இருக்கக்கூடாதாம். இந்த  பாபத்தை செய்தால்  21  தலைமுறை விதவையாம்.

விளக்கு வைத்ததும் வீட்டைப்  பெருக்கக்கூடாது.  அப்படிப் பெருக்கினாலும் குப்பையை வெளியே கொட்டக்கூடாது. செய்தால் என்னவாம் தெரியுமா?  அந்த வீட்டில் நடக்கும் எந்த நல்ல காரியங்களிலும் அந்த பெண் பங்கேற்க முடியாதபடி போகுமாம். (பகலிலேயே  விளக்கு போட்டால்  தான்  இருக்கும்படியான  வீடுகளுக்கு  இதை சூரிய அஸ்தமனத்திற்கப்புறம் என்று எடுத்துக் கொள்வோமா ?) 

வீட்டு வாசலில் விடிகாலையில்  பசுஞ்சாணி தெளித்து மெழுகி கோலம்  போடவேண்டும். செய்யாதவள்  ஏழையாகவே இருப்பாள்,  அப்புறம் எப்படி வைரத்தோடு?  - அது சரி,  இப்போது அநேக  அடுக்கு  வீடுகளுக்கு வாசல் இல்லை, பசுவையே  காணோம்,  கோலத்திற்கு பதில் பிளாஸ்டிக் ஸ்டிக்கர். -  காலத்திற்கேற்றவாறு மாற்றிக்கொள்வோம்.   
இருப்பினும்,  ஒரு சில தனி வீடுகளிலாவது இதற்கு வழி இருந்தால் செயலாம், கிராமப் பெண்கள்  நிச்சயம்  இதை பின்பற்றலாமே.  என்று  சொல்லி  நிறுத்திக்கொள்கிறேன்.


பரிமாறும்போது,  கையால்  சாதத்தையோ, காய் கறிகளையோ தொட்டு  இலையில்  பரிமாறக்கூடாது .அப்படிப்போடும்  உணவு  மாமிசத்திற்கு சமானம்  என்கிறது  பழைய சாஸ்திரம். இதை பின்பற்றமுடியுமே. 


வீட்டிற்கு தலைவன், கர்த்தா கணவன் அனுமதியின்றி தான தர்மம் செய்யக்கூடாது. அதேபோல்  விரதம், உபவாசம்  எதிலும்  அவனது அனுமதி இன்றி  ஈடுபடக் கூடாது.  அப்படிச் செய்வதால் கணவனின்  ஆயுள்  குறையுமாம்.  சமயம்போல்  உசிதம்போல் இதை  ஏற்போம். 


வீட்டில்  அந்த சாமான் இல்லை, இந்த  சாமான்  தீர்ந்து விட்டது என்றெல்லாம்  சொல்லக்கூடாது. கணவனிடம்  அதை வாங்கிவாருங்கள், இதை கொண்டுவரவேண்டும்  அப்படி தான்  சொல்லவேண்டுமாம். வீட்டில்  செல்வம்  குறையுமாம். 

மோர்  சாதம்  சாப்பிட்டவுடன்  சாப்பிடுவர்களை,  இன்னும்  கொஞ்சம்  சாதம்  பரிமாறலாமா  என்று கேட்கவேண்டுமாம். நிச்சயம்  வேண்டாம் என்றுதானே  சொல்வார்கள்.  அதனால்  என்ன நஷ்டம்.  செய்வோமே.  


தலையை விரித்துக்கொண்டு  நடப்பதோ, உட்காருவதோ  கூடாதாம்.   தலை முடியை  இருக்க முடிந்துகொண்டு இப்படி செய்யலாம். இதையும் பின்பற்றலாமே. 


அபசகுன  வார்த்தைகளை  சொல்லக்கூடாது.  பின்ற்றலாம் 


குழந்தைகள் பெரியோர்கள்  சேர்ந்து சாப்பிடும்போது, முதலில் குழந்தைகளுக்கு பரிமாரவேண்டுமாம்.  நல்லது தானே. செய்வோமே.


பின் தூங்கி முன்னேழும்ப வேண்டுமாம்.  கணவன் தூங்கினதற்குப்பிறகு தூங்கி,  அவன் எழுவதற்கு முன்  படுக்கையை விட்டு எழ வேண்டும்

வேலைக்குச் செல்லும்  பெண்கள், நைட் டூட்டி போகும்  கணவன்  திரும்பி வந்து தூங்குவதற்கு காத்திருப்பது சிரமம்.  


பகவானுக்கு அர்ச்சிக்காத, மலரைத்   தலையில் சூடக்கூடாதாம்.  தலையில் சூட்டிய மலர்  வெளியே தெரியக்கூடாதாம்.  முடிக்குள் மறைந்த மலராக  இருக்கவேண்டுமாம்.   வாசமற்ற  மலர்கள்,  அதாவது, கனகாம்பரம்,  காகிதப்பூ, போன்றவையை மணமான பெண்கள்  சூடக்கூடாதாம்.  வாடின  பழைய பூவை  காலால் மிதிக்க கூடாது.. இது செய்யலாமே. 

No comments:

Post a Comment