Monday, February 1, 2016

Mahodaya punya kalam

Courtesy:Sri.GS.Dattatreyan

தாமோதர தீக்ஷிதர் 

மஹோதய புண்யகாலம் என்பது 
திதி - அம்மாவசை , நக்ஷத்திரம் திருவோணம் ,யோகம் வ்யதீபாதம் ,மாதம் தை ,கிழமை திங்கள் 
அர்தோதயத்தில் கிழமை -ஞாயிறு 
மேற்சொன்ன ஐந்தும் ஒரேநாளில் வரும் காலமாகும் 

பலவருடங்களுக்கு முன்பு வந்த , பல வருடங்களுக்கு பின்பு வரகூடிய இந்த மஹோதய புண்யாகாலம் வரும் 08.02.2016 அன்று வருகின்றது , 

அன்றைய தினம் காலையில் ஸ்நானம் செய்து ஸந்தியாவந்தனம் பின்பு ஸமுத்ர ஸ்நானம் சங்கல்பத்துடன் செய்துவிட்டு (சமுத்தரத்தில் ராமேஸ்வரம் , தனுஷ்கோடி தவிர முழ்கி ஸ்நானம் செய்தல்கூடாது ) மஹோதய புண்யகால தர்ப்பணம் செய்யவேண்டும் , தர்பணத்தில் பித்ரு ,பிதாமஹ, ப்ரபிதாமஹ வர்கத்திற்கு ஒரு கூர்ச்சம் ,மாத்ரு,பிதாமஹி ,ப்ரபிதாமஹி வர்கத்திற்கு ஒரு கூர்ச்சம் ,ஸபத்னிக மாதாமஹா வர்கத்திற்க்கு ஒரு கூர்ச்சம் வைத்து ஆவாஹனம் ,ஆசனம் ,தர்ப்பணம்,உத்ஸர்ஜனம் செய்யவேண்டும் , 

பின்பு கிழ்கண்ட ஸ்லோகத்தை சொல்லி இரண்டு கைகளாலும் அர்க்யம் விடவேண்டும் 

திவாகர நமஸ்தேஸ்து தேஜோரதே ஜகதப்ரதே 
அத்ரி கோத்ரா ஸமுத்பண்ன லக்ஷ்மி தேவ்யாஹ சகோதர அர்கயம் க்ரஹனா பகவன்னு சுதா கும்ப நமோஸ்துதே 

விதிர் பாத மகா யோகின்னு மஹாபாதஹ நாசநா 
சஹஸ்ர பாஹோ சர்வாத்மன்னு க்ரஹனார்கயம் நமோஸ்துதே 

திதி நக்ஷத்திர வாராணம் அதிபோ பரமேஸ்வர மாஸ ரூப க்ரஹனார்கயம் காலரூப நமோஸ்துதே பிறகு உங்களால் முடிந்த கோ ,பூ , தச ,பஞ்ச தானங்கள் செய்யவும் ,வேத பிராமணாளுக்கு தக்ஷிணை தாம்பூலம் தரவும் ,பின்பு மாத்யாணிகம் செய்து அம்மாவாசை தர்ப்பணம் செய்யவேண்டும் , 

பிரம்மயஞ்ஞம் செய்து ஆத்துபூஜை பின்பு சாப்பாடு

No comments:

Post a Comment