Monday, November 2, 2015

Samskritam & Solomon Paapaiyaa

Courtesy:Sri.D.Ganesan

 http://www.sangatham.com/articles/sanskrit-for-all.html

எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும்! – சாலமன் பாப்பையா

டிவிசேனல்களில் பயனுள்ள பட்டிமன்றங்கள் வாயிலாக தமிழகம்அறிந்த இந்த பேராசிரியர் மதுரை கம்பன் கழகத் தலைவர்இன்றுஉலகமே நாடும் சம்ஸ்க்ருதம் பற்றிப் பேசுகிறார்.

 

 

எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியாதுசம்ஸ்க்ருத அறிஞர்கள் சபை மேடையில்நான் இடம்பெறுவது "இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலைஎன்றகேள்வியைத்தான் எழுப்பும்படிக்கும் காலத்தில் சம்ஸ்க்ருதம் கற்க எனக்குவாய்ப்பு இருக்கவில்லைமதுரையில் 10 ஆண்டுகள் ஒரு வைணவப்பெரியாரிடம் சம்ஸ்க்ருதம் கற்றேன்அது 1953ல்அதோடு சரிஇளமையில்வறுமை காரணமாக மேலும் சம்ஸ்க்ருதம் படிக்க முடியாமல் போனது.ஹிந்தி மொழியையே படிக்காதே என்ற சூழலில் சம்ஸ்க்ருதம் படிப்பதுஎப்படிமொழி வெறுப்பு நிறைந்த கெட்ட காலம் அதுஆனால் எனக்குசம்ஸ்க்ருதத்திடம் வெறுப்பு இருந்ததே கிடையாது. "இந்த பிறவியில்எனக்கு சம்ஸ்க்ருதம் கிடையாதுஎன்பது மீனாட்சி அம்மையின்திருவுள்ளம் போலும்.

தமிழ் ஒரு கண் என்றால் சம்ஸ்க்ருதம் மற்றொரு கண்இரண்டு கண்களும்முக்கியம். "பார்வைசரியாக இருக்க வேண்டுமானால் இரண்டு கண்களும்தேவைஇந்திய மண்ணில் விஷயம் தெரிந்தவராய் உருவாக ஒருவருக்குஇந்த இரண்டும் வேண்டும்.

எம்.. (தமிழ்படிக்கும் போது, "வட எழுத்து நீக்கி வருவது சொல்என்றபொருள்பட இலக்கண சூத்திரம் படித்தேன்அதாவது தொல்காப்பியருக்குமுன்பே தமிழில் வடமொழி இருந்திருக்கிறதுஎனவே தான் "அதை நீக்கி"என்று கூறியிருக்கிறார்ஆகதமிழில் சம்ஸ்க்ருதம் இருந்ததுபிற்காலத்தில்தேவநேய பாவாணர்பரிதிமாற் கலைஞர் உள்ளிட்டோர் "ஸ்என்கிறவடமொழி எழுத்தைத் தவிர்க்க "சமக்கிரதம்", "சமற்கிரதம்என்றெல்லாம்சொல்லிக் காட்ட வேண்டி இருந்ததுகாரணம் "ஸ்என்கிற வடமொழிஎழுத்தாம்.

 

 

அது சரி "வடமொழிஎன்றால்சிலர் வடக்கிலிருந்து வந்ததால் என்றுவிளக்கம் சொல்வதுண்டுஆனால் வட (vata) என்ற சொல்லுக்கு ஆலமரம்என்று பொருள்ஆலின் கீழ் அமர்ந்து தான் உயரிய ஞான உபதேசங்கள்அருளப் பட்டனஅவற்றைக் கொண்ட மொழிஎனவே வடமொழி என்பேன்.இது "பிரிட்டானிக்காகலைக்களஞ்சியம் தந்துள்ள விளக்கம்இது நமக்குத்தெரியாமல் போயிற்றேஅவன் சொல்லி நாம் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது பாருங்கள்!!

ஏகப்பட்ட இலக்கியங்கள் உடையது சம்ஸ்க்ருதம்எனவே அது ஞானமொழி.ராமாயணமும் மகாபாரதமும் சான்றுஉலகில் மலையும் நதியும் உள்ளகாலமெல்லாம் ராமாயணம் நின்று நிலைக்கும். "நல்லான் ஒருவன்வேண்டுமென்றால் ராமன் அங்கே இருக்கிறான்என்பதல்லவா பழமொழி?சங்க நூல்களிலும் ராமாயண மகாபாரதம் காட்சி தருகிறதுபுறநானூற்றுப்புலவர்களின் பெயர்களையே பாருங்களேன்வான்மீகியார்நெய்தற்காகி,பாரதம் பாடிய பெருந்தேவனார்கலைக்கோட்டு ஆசான்… சம்ஸ்க்ருதஇலக்கியம் பெரிய விஷயங்களைப் பேசுவதுஅந்த ஞான அலைதமிழுக்குள் பாய்ந்திருக்கிறதுவள்ளுவர் சமஸ்க்ருத இலக்கியம்படித்திருப்பார். "நிரம்பிய நூல்", "பல கற்றும்போன்ற அவர் வார்த்தைகளைப்பாருங்கள்அவற்றைப் படித்திராமல் பொத்தம் பொதுக்கென பேசுபவர் அல்லஅவர்பிறரையும் "படிஎன அறிவுறுத்துகிறார்.

தமிழ் போலவே சமஸ்க்ருதமும் செம்மொழிஆகசம்ஸ்க்ருதம் படிப்பதுதமிழுக்குத் தொண்டுஇப்படிப் பலரும் அறிந்த மொழிஅனைவரும்பாராட்டும் மொழிபதவிப் போட்டி காரணமாக அனைவரும் படிக்கமுடியாமல் செய்யப் பட்டிருக்கிறதுஆனால் எல்லாரும் சம்ஸ்க்ருதம்கற்கணும்குறைந்த பட்சம் – ஆம் – குறைந்த பட்சம் பகவத் கீதையாவதுபடிக்கணும்சம்ஸ்க்ருதம் படிக்க வாய்ப்புக் கிடைத்த ஒவ்வொருவரும்புண்ணியவான்அன்னவர்கள் அனைவரையும் போற்றுகிறேன்.

(ஆகஸ்டு 19 அன்று சென்னை சம்ஸ்க்ருத பாரதி கருத்தரங்கில் அவர்நிகழ்த்திய உரையில் இருந்து).

நன்றிவிஜயபாரதம்

No comments:

Post a Comment