Wednesday, October 14, 2015

Rudra Ekadashi - How? When?

Courtesy:Sri.Sarma Sastrigal

A nice detailed explanation about Sri Rudhra Ekathasini conducted before Sastiaptha poorthy and Satha abhisheham. Ram Tam.

Sarma Sastrigal's photo.
Sarma Sastrigal's photo.

" மாமா, ஸ்ரீ ருத்ர ஏகாதஸினீ யை சஷ்டியப்த பூர்த்தி போன்ற கர்மாக்களுக்கு அங்கமாக அல்லாமல் தனியாகவும், எப்போது நினைத்தாலும், ஒருவர் செய்து கொள்ளலாமா..?"

ஸ்ரீ ருத்ர ஏகாதஸினீ என்பது மஹா பிராயஸ்சித்த கர்மாவாகும்.. மிகவும் விசேஷமானது. கர்மாக்களுக்கு அங்கமாக அல்லாமல் தனியாகவும், எப்போது நினைத்தாலும், ஒருவர் செய்து கொள்ளலாம்

சாந்தி கர்மாக்களான சஷ்டியப்தபூர்த்தி, உக்ர ரத சாந்தி, பீமரத சாந்தி, விஜயரத சாந்தி போன்ற வைபவங்களின் போதும், மற்றும் சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் ஆகிய மூன்று அபிஷேகங்களின் அங்கமாகவும் ஸ்ரீ ருத்ர ஏகாதஸினி தற்காலத்தில் செய்யப்பட்டு வருகின்றது.

இதுவரை மனதாலும் சரீரத்தாலும் தெரிஞ்சும் தெரியாத வகையிலும் இழைத்த பாபங்களுக்கு இந்த சிவாராதனை மூலம் பிராயஸ்சித்தம் செய்யப்படுகின்றது.

இந்த மகத்தான சிவாராதனையை பற்றி சற்று சுறுக்கமாக இப்போது இங்கே பார்க்கலாம்.

1. குறைந்தது 11 ருத்விக்குகள் (வைதீகர்கள்) ஸ்ரீ ருத்ர ஜபத்திற்கு தேவை. ஹோம சமயத்தில் 12 பேர் தேவைப்படும்.

2. தம்பதிகளுக்கு விஸ்தாரமான சங்கல்பம் செய்து வைக்கப்படும்.. அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, அப்யுதயம், புண்யாஹவாசனம், தானாதிகள் முதலியவைகள் உண்டு.

3.. கலச ஸ்தாபணம் : 12 சிறிய கலசங்களும் ஒரு ப்ரதான (பெரிய) கலசமும் தேவைப்படும். கலசங்களில் ஜலத்தை நிரப்பி அலங்காரம் செய்து ஒவ்வொரு கலசத்திலும் ஒவ்வொரு தேவதா மூர்த்தி (பரமேஸ்வரின் அம்ஸம்) ஆவாஹநம் செய்யப்படும். ஆவாஹநம் செய்யப்படும் பெயர்கள் இதோ:
சாம்ப-பரமேஸ்வரர், மஹாதேவர், சிவம், ருத்ரம், சங்கரம், நீலலோஹிதம், ஈசாநம், விஜயம், பீமம், தேவதேவம், பவோத்பவம் ஆகிய தேவாதா மூர்த்திகளை 11 கலசங்கள் ஒவ்வொன்றிலும் ஆவாஹநம் செய்வார்கள். பிரதான கலசத்தில் ஆதித்யாத்மக ஸ்ரீ ருத்ரம் ஆவாஹநம் செய்யப்படும். மீதி இருக்கும் ஒரு சிறிய கலசம் புண்யாஹவாசந கலசமாகும்.

4.. மஹந்யாஸத்துடன் கர்மா துவங்கும். மஹந்யாஸத்தில் ஷோடஸாங்க ரெளத்ரீகரணம், ஷடாங்க ந்யாஸம், சிவ சங்கல்பம், ஆத்ம ரக்ஷா, புருஷ சூக்த பாராயணம், தொடர்ந்து அப்ரதிரத: போன்ற சில வேத மந்த்ரங்கள், 8 தடவை அனைவரும் நமஸ்காரம் செய்தல், கலச தேவதைகளுக்கு ஷோடஸ உபசாரங்கள், த்ரிசதி அர்ச்சனை, பதின்மூன்று நமஸ்காரங்கள், அனைவரும் சேர்ந்து த்யான ஸ்லோகம் சொல்லுதல், சமக மந்த்ரங்களுடன் பிரார்த்தனை, புஷ்பாஞ்சலி, ப்ரதக்ஷிண நமஸ்காரம் போன்றவைகள் பல இடம் பெறும்.

4. பிறகு 11 தடவை ஸ்ரீ ருத்ர ஜபம்.
அதே சமயத்தில் ஸ்வாமிக்கு, பஞ்சாயதன மூர்த்திகளுக்கு, 11 த்ரவ்யங்கள் மூலம் வரிசை க்ரமமாக அபிஷேகம் யாராவது ஒருவர் செய்வார்.

5.. தொடர்ந்து 12 ருத்விஜர்களுடன் ருத்ர ஹோமம் - ஹோம இறுதியில் வஸோர்தார ஹோமம். இதில் பூர்ணாஹுதி தனியாக சொல்லப்படவில்லை.

6. கலசங்களை யதாஸ்தானம் செய்து அந்த ஜலத்தை வைதீகாள் மூலம் தம்பதிகளுக்கு அபிஷேகம் செய்வித்தல்.

7. கலசங்களுடன் தக்ஷிணையை சேர்த்து வைதீகாளுக்கு சம்பாவனையாக அளித்து ஆசி பெறுதல். ஹாரத்தியுடன் மங்களகரமாக பூர்த்தி செய்ய வேண்டும்.

இப்பேற்பட்ட மகத்தான, சக்தி வாய்ந்த ஸ்ரீ ருத்ர ஏகாதஸநீயில் கலந்துகொள்ளும் வாய்ப்பு பெற்றவர்கள் பாரம்பரிய உடையில் சென்று பக்தி ச்ரத்தையுடன் பங்குபெற்று எல்லா க்ஷேமங்களையும் அடைய எல்லாம் வல்ல சர்வேஸ்வரனை ப்ரார்த்திக்கின்றேன்.

No comments:

Post a Comment