Tuesday, October 20, 2015

Durga sapta shloki

Courtesy:Sri.KS.Ramki

நவராத்திரி நாட்களில் முக்கியமாக சொல்ல வேண்டிய ஸ்லோகம்

நவராத்திரி நாட்களில் முக்கியமாக சொல்ல வேண்டிய ஸ்லோகம்
நவராத்திரி ஒன்பது நாட்களிலும் துர்கா ஸப்த ஸ்லோகீ என்கின்ற இந்த ஏழு ஸ்லோகத்தையும் பாராயணம் செய்தால் தேவீ மாஹாத்யம் வாசித்த புண்யம் கிடைக்கும் அதோடு சர்வ மங்கலமும் ஐஸ்வர்யமும் கிட்டும்.

1) ஜ்ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா
பலாத் ஆக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி
மஹாமாயை ஆகிய பகவதி தேவி ஞானிகளின் சித்தங்களையும் வலுக்கட்டாயமாகப் பிடித்துக் கவர்ந்திழுத்து மோஹத்தில் செலுத்திவைக்கிறாள்.

2) துர்க்கே ஸ்ம்ருதா ஹர்ஸி பீதிம் அசேஷ ஜந்தோ:
ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதி-மதீவ சுபாம் ததாஸி
தாரித்ரிய து•க்க பயஹாரிணி கா த்வதன்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்ர சித்தா
கடப்பதற்கும் முடியாத மிகுந்த துன்பத்தில் நினைக்கப் பட்டால், நினைக்கப்பட்டவுடனேயே சகல ஜீவர்களின் பயத்தையும் உடனேயே போக்குகிறாய். மகிழ்ச்சியான காலத்தில் நினைக்கப்பட்டாலோ பரமமங்கலமான நல்லறிவைக் கொடுக்கிறாய். வறுமை, துன்பம்,பயம் ஆகியவற்றை உடனே போக்குபவளே அனைவருக்கும் அனைத்துவிதமான உதவிகள் நன்மைகள் துணை ஆகியவற்றை அனைத்துக் காலங்களிலும் செய்வதற்காக, எப்போதும் ஈரம் கசிந்த மனத்துடன் காத்துக்கொண்டு நிற்பதில் உன்னைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்.

3) ஸர்வமங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே
மங்கலமான பொருள்கள் அனைத்திலும் பரம மங்கலமாக விளங்கும் பரம மங்கலமானவளே மங்கலமே வடிவான சங்கரனின் சக்தியே
அனைத்து புருஷார்த்தங்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை சாதித்துக் கொடுப்பவளே, சரணாகவும் கதியாகவும் விளங்குபவளே முக்கண் படைத்தவளே, வெண்ணிறம் கலந்த பொன்மேனியுடைய கௌரியே மனிதர்களுக்கு அருள்பவளாகிய நாராயணியே உனக்கு நமஸ்காரம்.

4) சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நாமோஸ்துதே
சரண் என்றும் நீயே கதி என்று நிர்க்கதியாக வந்த தீனர்களையும் துன்பமடைந்தவர்களையும் அருமையுடன் காப்பதைத்தன் தொழிலாகக் கொண்டிருப்பவளாகிய தேவீ அனைவரின் கஷ்டங்களையும் துன்பங்களையும் நீக்கும் நாராயணீ! உனக்கே நமஸ்காரம்.
 
5) ஸர்வஸ்வரூபே ஸர்வேசே ஸர்வசக்தி ஸமன்விதே
பயேப்யஸ்: த்ராஹி நோ தேவி துர்க்கே தேவி நமோஸ்துதே
பார்க்கப்படும் பொருளனைத்தும் நீயாவாய். அனைத்தையும் ஆளும் தேவியும் நீயே நிற்கும் நடக்கும் இருக்கும் சர அசரங்களின் அனைத்து சக்தியும் ஒருமுகமாக இருப்பிடம்கொண்டவளும் நீயே தேவீ! துர்கே உனக்கு நமஸ்காரம். பயங்களிலிருந்து எங்களைக் காத்தருள்வாய்.

6) ரோகா நசேஷா நபஹம்ஸி துஷ்டா
ருஷ்டா து காமான் ஸகலா நபீஷ்டான்
த்வாமாச்ரிதானாம் ந விபந்நராணாம்
த்வாமாச்ரிதா ஹ்யாச்ரயதாம் ப்ரயாந்தி
நீ திருப்தியடைந்தால் அனைத்து நோய்களையும் பிணிகளையும் அறவே அகற்றிவிடுகிறாய். ஆசைகளுடன் கேட்கப்படும் அனைத்தையும் நிறைவேற்றித் தருகிறாய். உன்னையே அரணாகக் கொண்ட மனிதர்களுக்கு இடர் என்பதே இல்லை. அப்படி உன்னால் பாதுகாக்கப்படுபவர்கள் மற்றவர்களுக்கே அரண்களாக விளங்குகிறார்கள் அல்லவா

7) ஸர்வா பாதா ப்ரசமனம் த்ரைலோக்யஸ்யாகிலேச்வரி
ஏவமேவ த்வயா கார்யம் அஸ்மத் வைரி விநாசனம்
அனைத்து அகிலத்துக்கும் ஈஸ்வரியாக உள்ளவளே உன்னால் என்னுடைய பகைவர்கள் நாசமடையவேண்டும். இவ்வாறே மூவுலகங்களிலும் உள்ளவர்களின் அனைத்துத் துன்பங்களையும் நீ அடியோடு இல்லாமல் செய்துவிடவேண்டும்.
Please see these too:



No comments:

Post a Comment