Wednesday, October 14, 2015

AAVOOR

Courtesy:Sri.GS.Dattatreyan

ஆவூர்ப்பசுபதீச்சுரம் தற்போது ஆவூர்

மூலவர் - பசுபதீஸ்வரர் ( அஸ்வந்தநாதர், 
ஆவூருடையார் )
அம்பாள் - பங்கஜவல்லி மற்றும் 
மங்களாம்பிகை 
தலமரம் - அரசமரம் 
தீர்த்தம் - பிரம்ம , காமதேனு , சந்திர 
மற்றும் அக்னி தீர்த்தங்கள் , 
பொய்கையாறு ( காமதேனு 
தீர்த்தம் வழக்கில் தேனதீர்த்தம் 
என்று சொல்லப்படுகிறது )
புராண பெயர் - ஆவூர்ப்பசுபதீச்சரம் (மணிகூடம், 
அசுவத்தவனம்)
தற்போதைய பெயர் - ஆவூர் (கோவந்தகுடி)
மாவட்டம் - தஞ்சாவூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - சம்பந்தர்

* தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 21வது தலம்.
* கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில்களில் இந்த ஆலயமும் ஒன்று 
* வசிஷ்டரால் சபிக்கப்பட்ட காமதேனு , தன் சாபம் நீங்க வழிபட்டு அருள் பெற்ற தலம் 
* கொடிமரத்தில் பசு பால் சொரிந்து சிவனாரை வழிபடும் சிற்பம் 
* கயிலையில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு சிகரத்தின் மீதே சிவனாரின் சந்நிதி அமைக்கப்பட்டு உள்ளதாக வரலாறு சொல்லப்படுகிறது 
* பங்கஜவல்லி அம்மையே பழமையான தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்பிகை . ஆனால் பின்பு குளத்திலிருந்து எடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட மங்களாம்பிகை அம்மைக்கே சிறப்புகள் அனைத்தும் 
* பிரம்மன் , திருமால் , இந்திரன் , சூரியன் , நவக்கிரகங்கள் , சப்தரிஷிகள் , தேவர்கள் , இயக்கர் , கணங்கள் , கந்தர்வர் , தசரதர் , வசிஷ்டர் முதலானோர் வழிபட்ட தலம் 
* சங்கப்புலவர்களான ஆவூர் கிழார் , ஆவூர் மூலங்கிழார் , பெருந்தலைச் சாத்தனார் பிறந்த தலம் 
* கி.பி. 2-ம் நூற்றாண்டில் சோழர்களின் கோட்டையாக விளங்கிய தலம் 
* வெட்டாற்றின் வடகரையில் அமைந்துள்ள தலம் 
* தர்மத்துவஜ மன்னனின் குட்ட நோய் நீங்கிய தலம் 
* முருகப்பெருமானார் வில்லேந்தியவராக திருக்காட்சி 
* பஞ்ச பைரவர்கள் சந்நிதி மிகவும் விசேஷமானது. இத்தலத்தில் 5 பைரவர்கள் சிவனை நோக்கி நின்ற கோலத்தில் அருளுகின்றனர். எனவே இத்தலம் பஞ்ச பைரவர் தலம் என அழைக்கப்படுகிறது.
* சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை முதலான உற்சவங்கள் 
* கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இவ்வூர் சோழ மன்னர்களின் கோட்டையாக விளங்கியது. 
* திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் வழிபடவேண்டிய தலம் 
* கொடிமரத்தில் பசு, சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வழிபடும் சிற்பமுள்ளது
* கயிலையிலிருந்து, ஆதிசேடனுடன் போட்டியிட்டு வாயுதேவனால் கொண்டு வரப்பட்ட இருமலைச் சிகரங்களில் ஒன்று நல்லூரிலும் மற்றது ஆவூரிலும் தங்கியதாகப் புராணவரலாறு கூறுகிறது.

தரிசன நேரம்

காலை 07:00 - 11:00 &
மாலை 04:00 - 08:30

தொடர்புக்கு

94863-03484

கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் வலங்கைமான் அடைந்து , அங்கிருந்து கோவந்தகுடி வழியாக இத்தலத்தை அடையலாம் . தஞ்சை பாபநாசத்தில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்

கும்பகோணத்திலிருந்து (15 கி.மீ.) பட்டீஸ்வரம் வழியாக இத்தலத்திற்கு செல்லலாம்.

No comments:

Post a Comment