வரலக்ஷ்மி பூஜை எப்படி பண்றது .......... !!??
முன் காலங்களில் மண் தரை ஆதலால் பசுஞ் சாணத்தைக்
கொண்டு தரை மெழுகப்படும்.
சுவரில் சுண்ணாம்படித்து மண்டபத்தில் கலசத்தில் வரலக்ஷ்மி வீற்றிருப்பதைப்
போல் வண்ணக் கலவைகளினால் சித்திரம் தீட்டப்படும்.
இப்போது அநேகமாக படமே மாட்டப் படுகிறது. அழகாக பந்தல் அமைக்கப்படும்.
முன் காலத்தில், வரலக்ஷ்மி,முகங்கள் என்று வெள்ளியில் செய்தது எதுவும் கிடையாது.
கண்,மூக்கு,வாய்,காது என்று வெள்ளியில் செய்த அவயவங்கள்தான் கிடைக்கும்.
வெள்ளி,பித்தளை,வெண்கல,செப்புச் செம்புகளிலோ,சிறிய குடங்களிலோ கலசம் வைப்பார்கள
அந்தக் கலசங்களில் சந்தனத்தைப் பருமனாக அப்புவார்கள்.
மையினால் அடையாளமிட்டு அவயவங்களைப் பொருத்துவார்கள்.
கலசத்தினுள் அரிசியை நிரப்பி,வெற்றிலைப்பாக்கு,மஞ்சள், வெள்ளிக்காசுகள்,
பவுன்ஏதாவது சிறிதுபோட்டு, அதன்மேல் ஒரு சுத்தமான மாவிலைக்கொத்தைச் சொருகி
குடுமியுடன் கூடிய நல்ல தேங்காயை, மஞ்சள்ப்பூசி பொருத்துவார்கள்.
ஒரு எலுமிச்சம் பழத்தையும் வைக்கும் பழக்கமும் உண்டு.
விச்சோலை, கருகமணி அவசியம் வைப்பார்கள்.
இப்போது வெள்ளியில் செய்த வரலக்ஷ்மி முகம் அழகான நகை,நட்டுகளுடன் கிடைக்கிறது.
அதை வாங்கிக் கலசத்தின் மேல் பொருத்தி விடுகிறோம். அதே முகத்தைப் பத்திரமாகப்
பாதுகாத்து வருஷா வருஷம் வரலக்ஷ்மி பூஜை செய்ய உபயோகமாக இருக்றது.
எந்த நாளிலும் அம்மனுக்கு பின்னழகிற்கு செயற்கைப் பின்னலில்,பூ அலங்காரம்
தாழம்பூ,மல்லிகைப் பூவினால் செய்வதுண்டு. பின்னழகு தெரிய நிலைக் கண்ணாடி வைப்பதுண்டு
நகை,நட்டுகளினாலும் அலங்கரிக்கிரோம் அம்மனுக்கென்றே தயாரித்து விதவிதமான பாவாடை, புடவைகளையும் அணிவித்து தற்காலத்தில் அழகாகவே ரஸனையைப் பொருத்து அலங்காரங்கள் செய்கிறோம்.
இம்மாதிரி எல்லாம் அலங்கரித்து ,அம்மனை தனியான இடத்தில் அமர்த்துகிறோம்.
அலங்கரித்த அம்மன் பூஜை செய்யப்போகும் இடத்தில் அழகான மாக்கோலமிட்டு,
செம்மண் பூசி அழகாக பந்தல் அமைக்கிறோம்.
ஒன்றுமில்லாவிட்டாலும், ஒரு மேஜையைக் கொண்டாகிலும், நான்குகால்களைக் கொண்ட
பந்தல் அமைத்து, வாழைக் கன்றுகளைக் கட்டி, மாவிலைத் தோரணங்கள் அமைத்து
அலங்கரித்து வைக்கிறோம்.
முதல் நாளே மடியாக செய்யக்கூடிய, இட்லி, கொழக்கட்டைக்கு,மாவு,பூரணங்கள் ஆயத்தம் செய்கிறோம்
தாழம்பூ அம்மனுக்கு மிகவும் உகந்த பூ. தாமரை,மல்லிகை,மருக்கொழுந்து
ரோஜா ஸம்பங்கி, என வாஸனை புஷ்பங்கள், மாலைகள், சேகரிக்கிறோம்.
குத்து விளக்குகளை மங்களகரமாக ஏற்றி வைக்கிறோம்.
"தன-தான்ய" லக்ஷ்மியுடன், வரலக்ஷ்மி சேர்த்து ஒன்பது லக்ஷ்மிகள்.
நோன்பின் முக்கிய அம்சமாக நோன்புக்கயிறு வைத்து, அதையும் பூஜை செய்து,
சரட்டை வலதுகையில் பெரியவர்களைக் கொண்டு அணிந்து கொள்கிறோம்.
பூஜை செய்யும் பந்தலின் உள் ஒரு தாம்பாளத்தில் அரிசியைப் பரப்பி, மணையின் மீதோ,முக்காலியின் மீதோ கலசம் வைக்க தயார் செய்கிறோம். பூஜைக்கு வேண்டிய
எல்லா ஸாமான்களும் தயார் செய்கிறோம்.
வியாழக்கிழமையே சாயங்காலத்திற்குப் பின் அம்மனுக்கு விளக்கேற்றி குங்கும சந்தன,பூக்களுடன்,வழிபட்டு,நமஸ்கரிக்கிறோம். வெள்ளிக்கிழமை, காலை. விடியற்காலை. பரபரவென்று இயங்குகிறோம். வாசலில் கோலம்போடுவதில் ஆரம்பித்து, குளித்து ,மடியாக நைவேத்யங்களைத் தயாரித்து மண்டபத்தில் கோலம்போட்டு செம்மணிட்டு, பூஜைக்கு ஏற்றவைகளைச் செய்து, அம்மனை அழைக்கத் தயாராகிறோம்.
அலங்கரித்த அம்மனை வீட்டு வாசற்படியினருகே வெளியில் ஒரு ஸ்டூலில் வைத்து
விளக்கேற்றி, குங்கும,சந்தன உபசாரங்கள், தூப, தீபங்கள், நிவேதனம் செய்து, கற்பூர
ஆரதி எடுத்து, நமஸ்கரித்து, பக்தி,சிரத்தையாக உடன் ஒரு ஸுமங்கலி, அல்லது
கன்னிகை உதவியுடன், ஸௌபாக்கியத்தைக் கொடுக்கும் லக்ஷ்மி தேவியே, அம்மாவே,
நீங்கள் வரவேண்டுமம்மா என்று பக்தி, சிரத்தையுடன் பாடல்களைப் பாடி அதி கவனமாக
கலசத்தை உள்ளே எடுத்துவந்து தயாராக அலங்கரித்து,தீபங்களுடன்ம கூடிய மண்டபத்தில்,.
கிழக்கு முகமாக அதி ஜாக்ரதையாக வைக்கிறோம்.
பாக்யத லக்ஷ்மி பாரம்மா, லக்ஷ்மி ராவேமா இண்டிகி. இரண்டும்
பிரஸித்தமான பாடல்கள் பாடப்படும்
இராகு காலத்திற்கு முன் பூஜை ஆரம்பமாகிறது. பிள்ளையார் பூஜையுடன் வாத்தியார்
சொல்லும் முறையில் கவனமாக மந்திரங்களைச் சொல்லி அம்மனுக்கு எல்லாவித உபசாரங்களையும் செய்து ஆஸனத்தில் இருத்தி, ஆடை, ஆபரணங்கள், ரவிக்கைத்
துணி, பஞ்சு வஸ்திர மாலைகள்,அணிவித்து அஷ்டோத்திர சத நாமாவளிகளினால்
பூக்களினால் அர்ச்சனை செய்கிறோம்.
தூப,தீபங்களைக் காட்டி, நைவேத்யப்பொருள்களை வைத்து நைவேத்யம் செய்கிறோம்.
சகலமான பொருள்களும் நிவேதனமாகிறது.
வெற்றிலைப்,பாக்கு, பழங்கள், உடைத்த தேங்காய், பழவகைகள் நிவேதனமாகிறது.
கற்பூர தீபம் காட்டுகிறோம்.
புஷ்பாஞ்சலி செய்து, ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்கிறோம். ப்ரார்த்தனை நோன்புச்
சரடுகளில் ஒவ்வொரு புஷ்பங்களைாகத் தொடுத்து வைத்திருப்பதை அம்மனின்
பாதங்களில் வைத்து அதற்கும் தனிப்பட பூஜை செய்கிறோம்.
பூஜை முடிந்து ஒவ்வொரு சரடாக எடுத்துப் பெரியவர்களால் சுமங்கலிகளுக்கும்,
கன்யாப் பெண்களுக்கும், வலது கையில் கட்டப் படுகிறது. அப்படிக் கட்டும்போது கையில், வெற்றிலைப்பாக்கு, மஞ்சள், பூ, தேங்காய்,பழங்களைக் கொடுத்துக்,
குங்குமமிட்டு சரடைக் கட்டுவார்கள்.
பெரியவர்களை நமஸ்கரித்து ஆசிர்வாதம் பெறுவார்கள்.
ஸுமங்கலி, கன்யாப் பெண்களுக்கு, தாம்பூலம் கொடுத்து, பிரஸாதம் அளித்து, ஆரத்தி
எடுத்து, மறுநாளும், புனர்ப் பூஜைகள் செய்து ஸாயங்காலம் சுண்டல் முதலானது செய்து யாவருக்கும் வினியோகிப்பது வழக்கம்.
இரவு ஆரதி எடுத்து கலசத்தை அரிசி வைக்கும் பெரிய சேமிப்புக் கலங்களில் வைத்து,
நல்லபடியாக போய்விட்டு வாருங்களம்மா என்று கூறி வேண்டிக் கொள்வது வழக்கம்.
இப்போது எப்பட்டி நடக்கிறது என்பது அவரவர்களுக்கே நன்னா தெரியும். :)
No comments:
Post a Comment