Monday, August 31, 2015

Kozhukattai

Courtesy:Sri.GS.Dattatreyan

நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு உடல் 
உறுப்புக்களை புரிய வைக்க எப்படியெல்லாம் 
பாட்டுப்பாடி புரிய வைத்தார்கள் பாருங்கள்....

அம்மா அம்மா கொழக்கட்டைக்கு கண்ணும் 
உண்டோடி..என்று கூறி விட்டு கண்ணைதொட்டு 
காண்பிப்பார்கள்.

அம்மா அம்மா கொழக்கட்டைக்கு காதும் உண்டோடி..
என்று கூறிவிட்டு காதைத் தொட்டு காண்பிப்பார்கள்.

இதே போல்.....

அம்மா அம்மா கொழக்கட்டைக்கு வாயும் உண்டோடி.
அம்மா அம்மா கொழக்கட்டைக்கு மூக்கும் உண்டோடி.
அம்மா அம்மா கொழக்கட்டைக்கு கையும் உண்டோடி.
அம்மா அம்மா கொழக்கட்டைக்கு காலும் உண்டோடி.

ஒரொரு உறுப்பாக தொட்டுக் காண்பிப்பார்கள். குழந்தைகள் 
வெகு சீக்கிரமாகவே எதெது என்ன உறுப்புகள் என்பதை கற்றுக்கொள்ளும். பின்னர் நாம் கேட்கும்போது அழகாக தொட்டு காண்பிக்கும்.

இப்பொழுதெல்லாம் அம்மாக்கள் குழந்தைகளுக்கு 
இப்படியெல்லாம் சொல்லித்தருவதாக தெரியவில்லை..!

No comments:

Post a Comment