வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ்விளக்கம—6
ராகம்:கண்டா தாளம்: சாபு
1.கந்தமு கஸ்துரி பங்காரு கின்னல நிஞ்சுகொனி
மந்தகமனலாடுசு கோவிந்தராஜுனி பை சல்லரெ
சந்தனம் கஸ்தூரி கலந்து தங்க கிண்ணத்தில் நிரப்பி மெதுவாஹ யானையை போல் ஆடிக்கொண்டு கோவிந்தராஜுவின் மேல் தெளியுங்கள்
2.கோரோஜன கந்தமு பகடால கின்னல நிஞ்சுகொனி
ராரே நாட்யமுலாடுசு மா சீதாராமுனி பை சல்லரே
கோரோஜனை கலந்த சந்தனத்தை பவழம் பதித்த கிண்ணத்தில் நிரப்பி அபிநயத்துடன் நர்த்தனம் செய்துகொண்டு நம்முடைய சீதாராமன் மேல் தெளியுங்கள்
3.கற்பூரயுத கந்தமு முத்யால கட்டுகின்னால நிஞ்சுக
கற்பூரகந்துலாரா மாயப்பபைனி சல்லரே
பச்சைகற்பூரம் கலந்த சந்தனத்தை முத்துக்கள் பதிக்கப்பட்டு பட்டை தீட்டப்பட்ட கிண்ணத்தில் நிரப்பி பச்சைகற்பூர வாசனை உள்ள பெண்களே எங்கள் தந்தையாக உள்ள இர்ரைவன்மேல் தெளியுங்கள்
4.அத்தரு பன்னீரு வஜ்ரால யத்து செம்புல நிஞ்சுக
சித்தமு ராஞ்ஜில்லகா சகலலோக கர்துனி பை சல்லரே
அத்தர் பன்னீர் கலந்து வைரம் பதித்த பன்னீர்தெளிக்கும் செம்புபோல் உயரமான செம்பில் நிரப்பி மனதை சந்தொஷமாஹ வைத்துகொண்டு அகில உலகங்களையும் படைத்த இறைவனின்மேல் தெளியுங்கள்
5.குங்கும கஸ்தூரி பங்காரு கின்னல நிஞ்சுகொனி
கொங்குலேக கூடுசு சங்கடஹரணுனி பை சல்லரே
கஸ்தூரி மஞ்சளினால் செய்த குங்குமத்தை தங்க கிண்ணத்தில் நிரப்பிக்கொண்டு நம்முடன் கூச்சமில்லாமல் சேர்ந்து நம்முடைய கஷ்டங்களை போக்கும் நம் இறைவன் மேல் தெளியுங்கள்
6.தளுகு குங்கும கந்தமு சிந்தாமணி வெலுகு கின்னல நிஞ்சுக
கலிதீர வேங்கடேஸூ திவ்ய பதகமலமு பை சல்லரே
ஜொலிக்கும்படியக குங்கும வண்ணத்தில் உள்ள சந்தனத்தை (நலுங்கு)சிந்தமனியைப்பொல் மின்னுஹின்ற கிண்ணத்தில் நிரப்பி கலியுகத்தின் பாபங்களை தீர்க்கும் வேங்கடேஸ் பெருமாளின், தாமரை மலரை போல் உள்ள அழஹிய பாதங்கள் மேல் தெளியுங்கள்
இந்த பாட்டின் உட் பொருள்
இந்த பாட்டில் சொல்லக்கூடிய சந்தன கிண்ணங்கள் பக்தர்களுடைய மனது
சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் நம் மனதில் உள்ள நல்ல சிந்தனைகளை
இறைவனிடம் சமர்ப்பணம் செய்வதாஹும்
No comments:
Post a Comment