Tuesday, April 7, 2015

Vasantha Gelikkai & pavvalimbu part4

Courtesy:Sri.SV.Narayanan

வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ்விளக்கம—4


ராகம்: யதுகுலகாம்போதி                                                          தாளம்: ஆதி


1.கன்யலாரா மீரந்தரு கானரெமெ மன சின்னிக்ரிஷ்னு போலு செல்கு போன்னபூலு


கன்னிபெண்களே நீங்கள் எல்லோரும் பாருங்கள் நம்முடைய பாலக்ரிஷ்ணனைப்போல் அழகாக இருக்கிறது இந்த பொன்னை பூ


2. குவலயதலாஷுலாற கோரி கொலிசின மன பவனாத்மஜ தேவுனி போலு குவலயம்புலு


குவலய பூ போன்ற கண்களுடையவர்களே நாம் வேண்டி கொண்டடுஹிற நமது வாயுபுத்திரனால் வணங்கப்படும் ராமனை போல் இருக்கிறது இந்த குவலய பூ  (தாமரை பூ போல் உள்ள ஒரு பூ)


3.குந்தரதனுலாரா மனம் அந்தரு சேவிஞ்சு கோவிந்து ரதனமுல போலு குந்தமுலனு


குந்த பூவைபோல் பற்களை உள்ள பெண்களே நாம் எல்லோரும் வணங்கும் கோவிந்தன் பற்களை  போல் உள்ளது இந்த  குந்த பூ. குந்த பூ என்பது மல்லிகை பூவை போல் இருக்கும்


4.பல்லவாங்குலார மன தில்ல கோவிந்து மேன உல்லாஸ் மனுலு போலு நல்லபூலுனு


மிருதுவான உடலை உடய பெண்களே நம் மனதில் உள்ள கோவிந்தனின் உடலில் சந்தொஷமஹ மாலையாக  இருக்கும் ருத்ராஷம் போல் உள்ளது இந்த கருப்பு பூக்கள்


5.பங்கஜ ஸுமுகுலாரா பாவிம்பரெமே ஸ்ரீ வேங்கடேஸ்பதமு போலு பங்கஜமுலு


தாமரை பூவைபோல் முகத்தை உடயவர்ஹளே கூர்ந்து கவனியுங்கள் ஸ்ரீ வேங்கடேஸ் பெருமாளின் பாதங்கள் போல் உள்ளது இந்த தாமரை பூக்கள்


இந்த பாட்டின் உட் பொருள்


இந்த பாட்டில் பலவிதமான பூக்கள் பூத்து குலுங்குவதை சொல்லியிருக்கிறார். இவை அனைத்தும் 
உருவத்தாலும்,வண்ணங்களும்,நிறத்தாலும் வேறுபடுஹிறது.உலஹத்தில் சகல ஜீவராசிஹளும் ஒவவொரு பூவைபோல் இருக்கிறது. இந்த பூக்கள் என்ன வாஹின்றன அடுத்து வரும் பாட்டுகளில் பார்ப்போம்

No comments:

Post a Comment