பின் வரும் பாட்டு பாடும்பொழுது சஹிகள் தாமரை பூக்களை ஒருவர் மேல் ஒருவர் அடித்து கொள்ஹிரார்கள் அது போல் செய்யக்கூடாது கையில் தாமரை பூவை வைத்துக்கொண்டு பாட்டுக்கு தகுந்தாற்போல் பாவனை செய்ய வேண்டும். கடைசி சரணம் பாடும்பொழுது தாமரை பூவை ஸ்வாமியின் பாதத்தில் சமர்பிக்கவேண்டும்
ராகம்:பூர்விகல்யாணி/குந்தளவராளி தாளம்:சாபு
1.தாமர பூவுலு தப்பக வேதுனு தருணீரோ நீ முத்து மோமுன
தாமரை பூக்களை குறிதவறாமல் பெண்களாகிய நாங்கள் உன் அழகான முகத்தில் போடுவோம்
2.கலுவலிருவனு செலுவுக வேதுனு கலிகிரொ நீவாலு கன்ன்னுலனு
வாசனையுள்ள விருட்சி பூவை ஆசையாக உன் கண்ணில் போடுவோம்
3.சம்பங்கி மொக்கலு சாரெகு வேதுனு இம்புக நீ முத்து செம்பலனு
சம்பங்கி மொட்டுக்களை கொத்தாக போடுவேன் சந்தோஷமாக உன் அழகான் கன்னத்தில்
4.பாரிஜதமுல கோரிவேதுனு ஒக பாரி வேங்கடேஸ பதமுலனு
பாரிஜாத பூக்களை வேண்டிகொண்டு ஒரே தடவையாக போடுவேன் வேங்கடேஸா உன்னுடைய பாதங்களில்
இந்த பாட்டின் உட் பொருள்
நாம் ஒருவரை ஒருவர் பார்க்கும்பொழுது முதலில் முகத்தை பிறகு உடல் முழுவதும் பார்த்து அதன்பிறகு பாதத்தை பார்க்கிறோம். ஜீவாத்மா எல்லாமே பூக்கள் என்று முன்பே சொல்லியிருக்கிறோம்.இறைவனுடைய நாம பலத்தினால் ஜீவாத்மா சரணாகதி செய்து இறைவனுடைய பாதங்களை சென்றடைஹிறது என்பது இந்த பாடலின் தத்துவம்.
இதன் பிறகு ஜூலத் ராதா பாடி உஞ்சல், தீராஸமீரே அஷ்டபதி பாடி மத்து இழுத்தல் பிறகு மங்களம் பாடி தாம்பாளத்தில் குங்குமம் கரைத்து ஆரதி எடுக்கவேண்டும்.
சில ஊர்களில் வசந்த் மாதவம் கலசத்தை சஹிகள் தலையில் வைத்துக்கொண்டு ஆடும் பழக்கமும் உண்டு.
இத்துடன் வசந்த் கேளிக்கை முடிவடைஹிறது
பின் வரும் பாடல்கள் சில ஊர்களில் வசந்த கேளிக்கையில் பாடப்படுஹிறது இந்த பாட்டுக்களுக்கும் விளக்கம் தரப்படுஹிறது. இந்த பாட்டு ஷேத்ரஞர் பதம்
Radhekrishna🙏With Gurukrupa I happen to see your blog. Very happy to read all articles posted by you. Each & everyone priceless gems.Continue the service. Dhanyavaad🙏 Premika charanam Periyava charanam sadhana smarami. Aham dhanyosmi.🙏🙏🙏🚩💐🥰👍✌👏💯
ReplyDeleteSadha smarami🙏
ReplyDelete