ஶ்ரீ ஶ்ரீ அண்ணாவின் உபதேச மொழிகள் - 6- புத்தகத்தைப் படித்துப்பார்த்து அடுக்கிக்கொண்டே செல்லாதே. இதனால் அனுபவஞானம் வந்துவிடாது. ஆகாயத்திலுள்ள வீண்மீன்களை எண்ணுகின்றவன் வானசாஸ்திரியாகி விடுவானா?
- சாஸ்திரப் பண்டிதர் மூலம் நீ அக்ஞானத்தை விலக்கிக் கொள்ள முடியாது. அவர்கள் எண்ணெய், திரி எல்லாம் போட்டிருந்தும் ஏற்றப்படாத தீபம் போன்றவர்கள். அவர்களால் அக்ஞான இருள் எப்படி விலகும்? எனவே அனுவஞானியை குருவாக அடை.
- கடலின் காம்பீர்யத்தைக் கண்ட நதிகள் அடக்கத்துடன் அதில் விழுகின்றன. ஆனால் அதே நதிகள் நாட்டில் ஓடும்பொழுது கம்பீரமாய் ஓடுகின்றன. அதுபோல் உன் கல்வியும் மேதையும் உலகைத் திகைக்கச் செய்தாலும் உண்மையான ஞானியைக் காணும் பொழுது தானே ஒடுங்கிவிடும்.
- சின்னக்குழந்தை திண்னையில் ஏறிக்கொண்டு, நான் அம்மாவை விடப் பெரியவனாகி விட்டேன் என்பதைப் போலத்தான் புத்தகத்தை படித்துவிட்டு அதனால் நான் பெரியவனென்று சொல்வது.
- புத்தகம் பலபேருக்குப் பாடம் சொல்லித்தருமேயன்றி தான் படிக்காது. அதுபோல் தன்வரை ஞானமில்லாதவர் பிறருக்குச் சொல்வதுண்டு
|
No comments:
Post a Comment