courtesy:Sri.G.Muthukumaran
கோவில்கள் – அதிரவைக்கும் அதிசயங்களும்! – வியத்தகு விளக்கங்களும்! – (அரிய படங்களுடன்)
அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது
ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர். ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!
அவைகளில் சில:
1.உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம் நடராஜ கோயி ல்
2.கும்பகோணமருகே "தாராசுரம்" என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில் உள் ளசிற்பத்தில் வாலியும் சுக்ரீவ னும் சண்டைஇடும் காட்சி உள்ள து. இங்கிருந்து ராமர் சிற்பம் இரு க்கும் தூண்தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத் தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.
3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.
4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவன நாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிச னம் செய்யலாம்.
5.கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்த லம்கும்பகோணம் அருகே வெள்ளிய ங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டு ம் இது போல் காட்சிதருகிறார்.
6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதி யில் 4பேர் தூக்குவார்கள்பின்பு 8,16, கோவி ல் வாசலில் 64பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.
7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமா னுஜர் உருவம் விக்ரஹமோ, வேறுஉலோகப்பொருளால்ஆன வடிவமைப்போ இல்லை.குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.
8.திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வ நாதர் கோயிலில் உள்ளவில்வமரத் தில் லிங்கவடிவில் காய்காய்க்கிறது .
9.கும்பகோணம் அருகே திருநல் லூரில் உள்ள சிவலிங்கத் திருமே னி ஒரு நாளைக்கு 5 முறைவெவ் வேறு வண்ணங்களில் நிறம் மாறு வதால் "பஞ்சவர்ணேஸ்வரர்" என் று பெயர்.
10. விருதுநகர், சொக்கநாதன் புத்தூ ரில் உள்ள தவ நந்திகேஸ்வரர் ஆல யத்தில் உள்ள நந்திக்குகொம்போ, காதுகளே இல்லை.
11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிர தான சாலைகளில் சந்திப்பி ல்உள்ள 72 அடி ஆஞ்ச நேயர் சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில்ஸ்ரீராமன் திரு வடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.
12.வேலூர் அருகேஉள்ள விருஞ்சிபுரம் என்றதலத்தில் உள்ள கோயில் தூணின் தென் புறம்அர்த்த சந்திர வடிவில் 1 முதல் 6வரையும், 6முதல் 12 வ ரையும் எண்கள் செதுக்கியுள்ள ன. மேற்புறம்உள்ளபள்ளத்தில் வழியே ஒருகுச்சியை நீட்டினா ல், குச்சியுன் நிழல் எந்த எண் ணில் விழுகிறதோ அதுதான் அப்போதுமணி ஆகும்.
13. சென்னை-திருப்பதி சாலையி ல் ஊத்துக் கோட்டை தாண்டி நாகலாபுரம் என்ற ஊரில்உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன்வடிவம்கொண்டுள்ளார்.
14. தருமபுரி – பாப்பாரப்பட்டி {16கி.மீ} இரு க்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவி லில்நவக்கிரகங்கள் பெண் வடிவில் உள் ளது.
15.மதுரை மீனாக்ஷி அம்மன்கோயி லில் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும்இவ்வளவு கோபு ரங்கள்கிடையாது
16.கும்பகோணம் சாரங்கபாணி கோவில் கோமளவல்லி தாயாருக் கு படிதாண்டா பத்தினி என்ற பெய ரும் உண்டு-பெருமாளோடு எக்கா லத்திலும் வெளியே வராத காரணத்தினால் . . .
No comments:
Post a Comment