Wednesday, March 4, 2015

Siva shakti

Courtesy: http://amrithavarshini.proboards.com/thread/911/#ixzz3P8KmghkS

தேவதாமூர்த்திகள் அவதார புருஷர்கள்

சிவ-சக்தியின் ஐக்கிய ஸ்தானம்

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்என்று ஒளவ்வைப்பாட்டி சொல்கிறார் என்றால்அந்தத் தெய்வமே அன்னையும் பிதாவுமாகி - ஒருபாதி அன்னைஒருபாதி பிதா என்று - அர்த்தநாரீசுவரராக உட்கார்ந்திருக்கிறதுஇது நமக்குப் பரம லாபம் என்று கிட்டே போகிறோம்போனால்அப்புறம் இதனாலேயே சில குழறுபடிகள்சண்டைகள்கூடஉண்டாகிவிடுகின்றனகாலில் போய் விழலாம் என்றால்ஒரு கால்ஈஸ்வரனுடையதுமற்றது அம்பாளுடையது என்று இருக்கிறதுஇப்படிக்கு ஒன்றுக்குமேல் ஆசாமி இருந்தால்உடனே நம்மையறியாமல் இதுஉசத்தியா அல்லது அது உசத்தியாஎன்று ஒப்புப் பார்க்கிற எண்ணம் (Comparison) உண்டாகிவிடும்இது உண்டானால் அனர்த்தம்தான்எந்தக்காலில் விழுவது என்றே தெரியாதுஅர்ச்சனை செய்யப்போனால்இவருக்கு ஒரு தினுசு புஷ்பத்தால் அர்ச்சனை பண்ண வேண்டும்அவளுக்குஇன்னொன்றால் பண்ணவேண்டும் என்கிறார்களே, 'இந்தப் பக்கத்துப்பூ அந்தப் பக்கத்தில் விழுந்தால் அபசாரமாகிவிடுமோ?' என்றுகலக்கமாயிருக்கிறது. 'கடாக்ஷம் வேண்டும்என்று கேட்கிறபோதே வலது கண்ணாஇடது கண்ணா என்று குழப்பம்.


குழப்பம் போதாதென்று சண்டையே மூட்டிவிடுகிறார் ஒருகவிஅப்பைய தீக்ஷிதரின் வம்சத்தில் பிறந்து மதுரையில் மந்திரியாகப் பரிபாலனம்செய்த நீலகண்ட தீக்ஷிதர்தான் அவர். "ஆனந்த ஸாகர ஸ்தவம்என்று மீனாக்ஷியைத் துதிக்க ஆரம்பித்தவர்பார்வதீ பரமேசுவரர்களானதம்பதியருக்குள் கலகம் மூட்டி சந்தோக்ஷப்படுகிறார். "அம்மாஇதென்ன உன் பதி அக்கிரமக்காரராக இருக்கிறார்உன் புகழையெல்லாம் அவர்அல்லவா திருடிக்கொண்டிருக்கிறார்காமதகனர்மன்மதனை எரித்தவர் என்று பெயர் வாங்கியிருக்கிறாரேஎரித்தது நெற்றியின் நடுவில்இருக்கிற கண் அல்லவாஅது வலது இடது இரண்டுக்கும் பொதுஎனவே உனக்கும் அந்த நெற்றிக் கண்ணில் பாதி உண்டுவெற்றியிலும் பாதிஉன்னுடையதாக இருக்கஅவர் மட்டுமே பேரை அடித்துக்கொண்டு போய்விட்டாரேபோனால் போகிறதுஇதிலாவது பாதி உரிமை அவருக்குஇருக்கிறதுஇதைவிடஅநியாயம் அவரைக் 'காலகாலன்என்பதுதான்காலனை உதைத்தது எந்தக் கால்இடது கால் அல்லவாஅதுமுழுவதும்நூறு பெர்ஸெண்டும் உன்னுடையதல்லவாநீ செய்த கால சம்ஹாரத்தைஅவர் தமதாகத் தஸ்கரம் பண்ணியிருக்கிறாரே!"என்கிறார்ஜனனம்மரணம் இரண்டையும் கடக்க முறையே காமஜயம்காலஜயம் பண்ண வேண்டுமானால்அம்பாள் அருள் இன்றி முடியாதுஎன்கிற பெரிய தத்துவத்தைக் கவித்வ ஸ்வாதந்திரியத்தோடுஸ்வாதீனத்தொடு இப்படிச் சொல்கிறார்.

ஆனால்அவர் ரொம்பப் பெரியவர்சண்டை மூட்டி விட்டதோடு அவர் நின்றுவிடவில்லைஎல்லாச் சண்டைகளும் (வாழ்க்கைப் போராட்டமே)தீர்த்து போதும்படியான பரமப்பிரேமைஇந்த அர்த்தநாரீசுவரருக்குள் எங்கே ஊற்றெடுக்கிறது என்பதையும், 'சிவலீலார்ணவ'த்தில் சொல்கிறார். ('அசக்யமங்காந்தரஎன்று தொடங்கும் சுலோகம்). பரமாத்மாவின் அன்பு ஊற்றெடுக்கும் அந்த இடத்தை நினைத்து விட்டால் நமக்கு ஒருகுழப்பம்குறைவும் உண்டாகாதுஅப்படியே அதில் ஊறிப்போகவே தோன்றும்அவர் இரத்தினச் சுருக்கமாகச் சொல்வதை விவரித்துச்சொன்னால்தான் நமக்குப் புரியும்.

அர்த்தநாரீசுவர ரூபத்திலிருந்து பார்வதி - பரமேசுவரர்களின் எல்லா அங்கங்களையும் பிர்த்துப் பிரித்து பாகம் பண்ணுகிறோம். 'மாதொருபாகன்' 'உமையொரு பாகன்என்றெல்லாம் அவருக்கும், 'பாகம் பிரியாஎன்றே அவளுக்கும் பெயர்கள் இருந்தாலும்கூடஇது இவர் கண்அதுஅவள் கண்இது இவர் காது - இது அவள் காது என்று இப்படிப் பாகம் பிர்த்துப் பார்க்க முடிகிறதுஇந்தக் கூறு இவருடையதுஅந்தக் கூறுஇவளுடையது என்று மொத்தத்தையும் பப்பாதியாக பிரிக்க முடிகிறதுஇப்படி இரண்டு ஆசாமிகளைக் கொண்டுவந்தவுடனேயே 'கம்பேர்'பண்ணுகிற அனர்த்தம். 'அடாடாஅப்படியானால் பிரித்துச் சொல்ல முடியாமல் ஒரிடமும் இவர்களிடம் இல்லாயா?' என்று தேடுகிறோம்.

பிரிக்க முடியாமல் இருப்பது எதுஅணு (Atom) தான்அதற்கு மேலே பிரித்துக் காட்ட முடியாது என்று நம்மை நிறுத்தி வைப்பது அணுதான். (பிரிக்க முடியாதஅதைப் பிளந்துதான் இப்போது எத்தனையோ உற்பாதங்களைப் பண்ணியிருக்கிறார்கள்இப்படி உபாதம் பண்ணுவதால்எதிர்த்தரப்புசுயத்தரப்பு என்ற பேதமில்லாமல் எல்லாம் சர்வ நாசமாகிவிடும் என்று இரண்டு கட்சிக்காரர்களுக்கும் தெரிந்தும்கூட, 'அப்படியும்உண்டாக்கிவிடுமோ?' என்று பீதியையாவது உண்டாக்கலாமே என்று உண்டாக்கி வருகிறார்கள். (இவ்விஷயம் இருக்கட்டும்இப்படி அணுமாத்திரமாக ஒன்று அர்த்த நாரீசுவர ஸ்வரூபத்தில் இருந்து விட்டால் போதும்பிரச்சனை தீர்ந்ததுஅதை ஸ்மரித்து விடலாம்ஏனென்றால்'இவளுகக்கு அவருக்குஎன்று இதை பாகம் போட முடியாதுஅது இரண்டு பேருக்கும் சொந்தமாயிருக்கும்ஒப்புவமைஒருத்தரை விட்டோம்,ஒருத்தருக்கு அபச்சாரம் செய்தோம் என்கிற தோஷங்கள் உண்டாவதற்குகில்லைஅப்படி அணுப்பிரமாணமாக ஒன்று இந்த இரண்டுக்கும்மதயஸ்தானத்தில் இருந்துவிட்டால் போதும்எவ்வித மனக்கலக்கமும் இல்லாமல் அதைப் பிடித்துக் கொண்டு அம்மை அப்பனின் கூட்டுஅநுக்கிரகத்தைப் பெற்றுவிடலாமே என்று தேடுகிறோம்.

இங்கேதான் கவி நமக்கு சகாயம் பண்ண வருகிறார்ஒரு சரீரத்துக்கு மத்தியில் இருக்கிற இருதயத்துக்கும் மத்தியில் ஒரு அணு இருக்கத்தான்செய்கிறதுஅணு என்றுகூட அதைச் சொல்ல முடியாதுஅணுவையாவது ரொம்பவும் நுண்ணிய மைக்ராஸ்கோப் வைத்துப் பார்த்துவிடலாம்.உடனே மானஸிகமாகவாவது அதில் இரு பக்கங்களைப் பங்கு போடலாம்இருதய மத்தியில் இருக்கிற இந்த 'அணு'வையோ எந்தசூக்ஷ்மதரிசினியாலும் காண்பிக்க முடியாதுஆனால்இது இல்லாவிட்டால் மநுஷ்யனுக்கு எண்ணமே இல்லைஉணர்ச்சியே இல்லை.

இது என்னமனசு மனசு என்கிறோமே அதுதான்எந்த எக்ஸ் - ரேயிலாவது அதைக் காட்ட முடியுமா?

அர்த்தநாரீசுவரர் மட்டும் என்றில்லைஎந்த மூர்த்தியானாலும் அதன் மனசு என்று இருக்கிறதே அதைத் தியானிப்பதுதான் விசேஷம்உருவத்தியானம் ரொம்ப ரொம்ப அழகாகத்தான் இருக்கிறதுஆரம்ப தசையில் அத்தியாவசியமாகத்தான் இருக்கிறது என்றாலும்கூடஇதிலும் நம்மனசு அந்தண்டை இந்தண்டை அசையாமல் ஒருமுகப்படுவதில்லைஆடத்தான் செய்கிறதுபரமேஸ்வர ஸ்வரூபம் என்றால் ஜடைஅதைவிட்டு கங்கைஅதை விட்டு சந்திரன்நெற்றிக்கண்நீலகண்டம் இப்படி எண்ணமானது எதில் நிலைத்து நிற்பது என்று தெரியாமல் சலித்துக்கொண்டே இருக்கிறதுபரமாத்மாவின் மனசு என்று எடுத்துக் கொண்டாலோ அது ஒன்றாகவே இருக்கிறதுநம் மனசிலே நூறு கோடிஎண்ணங்கள்அதில் முக்கால்வாசி தேஷமயமாகவே இருக்கும்தாயும் தந்தையுமாக இருக்கப்பட்ட அர்த்தநாரீசுவர மனசு இப்படியா இருக்கும்?அதில் பிரேமப்பிரேமை என்கிற ஒரு எண்ணம் தவிர வேறென்ன இருக்கும்கருணை ஒன்றை நிறைந்த அணுமாத்திரமான மனசு அதுஅதைப்பிடித்துக் கொள்ளுங்கள் என்கிறார் கவிஅதிலே நம்மைக் கொண்டுபேய் நிறுத்துகிறவர்கள்தான் குமாரஸ்வாமிசிவ சக்திகளின் ஐக்கியத்தில்தோன்றிய அன்புக் குழந்தை.


No comments:

Post a Comment