Thursday, February 26, 2015

Time in Bhagavatha

Courtesy; Smt.Uma Balasubramaniam


கணக்கில்புலியா ? ,   இதைத் தெரிந்து கொள்ளுங்கள்
சூரியனின் ஒளி இரு  அணுவைத் தாண்டுவதற்கு வேண்டிய காலத்திற்கு பரமாணு என்று பெயர்.
2 பரமாணுக்கள்                --     1 அணு
3 அணுக்கள்                   --     1 திரஸ் ரேணு
3 திரஸ்ரேணுக்கள்              --     1 துருதி
100 துருதிக்கள்                 --     1 வீதம்
3 வீதம்                       --     1 லவம்
3 லவம்                       --     1 நிமிஷம்
3 நிமிஷம்                     --     1 க்ஷணம்
3 க்ஷணம்                     --     1 காஷ்டை
15 காஷ்டை                   --     1 லகு
15 லகு                        --     1 நாடி
2 நாடி                        --     1 முகூர்த்தம்
7 முகூர்த்தம்                  --     1 பிரஹரம்
8 பிரஹரம்                    --     1 நாள்  ( இராப்பகல்)
15 நாள்                       --     1 பக்ஷம்
இது சுக்கில பக்ஷம் , கிருஷ்ணபக்ஷம் என இருவகைப்பட்டு மாறி மாறி வந்து கொண்டிருக்கும் .
2 பக்ஷம்                      --     1 மாதம் ( பித்ருக்களுக்கு ஒரு நாள் )
2 மாதம்                       --     1 ருது
6 மாதம்                       --     1 அயனம்
இது உத்தராயனம் , தக்ஷிணாயனம் என இரு வகைப்பட்டு மாறி மாறி வந்து கொண்டிருக்கும்
2 அயனம்                     --     1 வருஷம்( தேவதைகளுக்கு ஒரு நாள் )
100 வருஷம்                   --     1 புருஷாயுஸ்
360 வருஷம்                   --     தேவ வருஷம்
இதற்கு மேற்பட்ட காலங்களுக்கு யுகங்கள் என்று பெயர். அவைகளுள் 4 மாறி மாறி புரண்டு கொண்டே வரும். அவைகளில் ஒரு யுகம் முடிந்து மற்றைய யுகம்தொடங்குவதற்கு முன் யுக ஸந்தி என்று சிறிது காலம் உண்டு
ஸந்தி யுக ஸந்தி உட்பட----------
கிருத யுகம்              ( 4000+800)   தேவ வருஷம்
திரேதாயுகம்             ( 3000+600)   தேவ வருஷம்
துவாபர யுகம்            (2000+400)    தேவ வருஷம்
கலியுகம்                (1000+200)    தேவ வருஷம்
ஆக 12000 தேவ வருஷங்கள்    --     1 சதுர் யுகம்  ---   1 மஹாயுகம்
71 மஹா யுகம்                -      1  மன் வந்திரம்
1000 மஹா யுகம் அல்லது 14 மன்வந்திரம்    --     1 கல்பம்
2 கல்பம்                --     பிரும்மாவுக்கு     1 நாள்
360 நாள்                --     பிரும்மாவுக்கு     1 வருடம்
100 வருஅம்             --     பிரும்மானின் ஆயுட் காலம்.
இது கடவுளோடு இருக்கும் கால தத்துவத்துக்கு  1 நிமிடமாகும்
 
உமா பாலசுப்ரமணியன் – ஆதாரம் பாகவதம்

No comments:

Post a Comment