Monday, December 8, 2014

Akshara Brahma yoga

Courtesy:Smt.Uma Balasubramanian


அக்ஷர ப்ரஹ்ம யோகம்
 
அர்ஜுனன் கிருஷ்ணனிடம்  கேட்கிறான் :
 
·                     மனிதருள் சிறந்தவனே! பிரம்மம் எது? ஆன்மா எது? கர்மம் எது?அதிபூதம் எது? அதிதெய்வம் என்று எது சொல்லப்படுகிறது?
·                     கிருஷ்ணா! இந்த உடம்பில் அதியஜ்ஞன் யார்? அவர் எப்படி இருக்கிறார்? சுயக் கட்டுப்பாடு உடையவர்கள் மரண காலத்திலும் எப்படிஉன்னை நினைக்கிறார்கள்?
அதற்கு ஸ்ரீ  கிருஷ்ண பகவான் சொன்னது:
 
·                     பிரம்மம் அழிவற்றது.மேலானது. அதன் இயல்பு ஆன்மா என்று சொல்லப்படுகிறது.உயிர்களை உண்டாக்கி வளரச் செய்வதாகியவேள்வி கர்மம் எனப்படுகிறது.
·                     உடல் தரித்தவர்களுள் உயர்ந்தவனே! அழியும் பொருள் அதிபூதம் எனப்படுகிறது.உடம்பில் உறைபவன் அதிதெய்வம் ஆவான். இந்தஉடம்பில் அதியஜ்ஞமாக நானே இருக்கிறேன்.
·                     மரணகாலத்திலும் யார் என்னையே நினைத்தவாறு உடம்பை விட்டுச் செல்கிறானோ அவன் என் நிலையை அடைகிறான். இதில்சந்தேகம் இல்லை.
·                     குந்தியின் மகனே! இறுதிக்காலத்தில் எந்தப் பொருளை நினைத்தவாறு ஒருவன்உடம்பை விடுகிறானோ, எப்போதும் அந்தப்பொருளையே நினைக்கின்றஅவன், அந்தப்பொருளையே அடைகிறான்.
·                     எப்போதும் என்னை நினைத்தவாறு போர் செய்.என்னிடம் மனத்தையும் புத்தியையும் சமர்ப்பணம் செய்வதால் சந்தேகமின்றிஎன்னையே அடைவாய்.
·                     அர்ஜுனா! மனத்தால் வேறு எதையும் நாடாமல், மேலான ஒளிமயமான இறைவனை இடைவிடாமல் தியானிப்பவன் அவரைஅடைகிறான்.
·                     எல்லாம் அறிந்தவனை, ஆதிபரம்பொருளை, அனைத்தையும் ஆள்பவனை, அணுவைவிட நுண்ணியவனை, அனைத்தையும்தாங்குபவனை, சிந்தனைக்கு எட்டாத வடிவம் உடையவனை,சூரியனைப் போல் ஒள்ர்பவனை, இருளுக்கு அப்பாற்பட்டவனை, புருவநடுவில் பிராணனை நன்றாக நிலை நிறுத்தி, பக்தியுடனும் யோக ஆற்றலுடனும் அசைவற்ற மனத்துடனும் மரணகாலத்தில் யார்நினைக்கிறானோ, அவன் அந்த ஒளிமிக்க மேலான இறைவனையே அடைகிறான்.
·                     வேதத்தை அறிந்தவர்கள் எதை ஓங்காரம் என்கிறார்களோ, பற்று நீங்கிய துறவிகள் எதை அடைகிறார்களோ, எதை விரும்புபவர்கள்பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்கிறார்களோ, அந்த மந்திரத்தை உனக்குச் சுருக்கமாகச் சொல்கிறேன்.
·                     உடம்பின் வாசல்கள் அனைத்தையும் அடக்கி, மனத்தை இதயத்தில் நிறுத்தி, பிராணனை உச்சந்தலையில்குவித்து, யோகதாரணையில் நிலைபெற்று, பிரம்மாகிய ஓம் என்னும் ஓரெழுத்து மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு, என்னைநினைத்தவாறு உடம்பை விட்டு யார் போகிறானோ, அவன் மேலான நிலையை அடைகிறான்.
·                     அர்ஜுனா! வேறு எண்ணம் இல்லாமல் நீண்டகாலம் என்னை யார் எப்போதும் நினைக்கிறானோ, ஒருமுகப்பட்ட நிலையில்நிலைபெற்ற அந்த யோகிக்கு நான் எளிதில் அகப்படுகிறேன்.
·                     உயர்ந்த பக்குவம் பெற்ற மகான்கள் என்னை அடைந்து, துக்கத்தின் இருப்பிடமும் நிலையற்றதுமாகிய பிறவியை மீண்டும்அடைவதில்லை.
·                     அர்ஜுனா! பிரம்மலோகம் வரையுள்ள அனைத்து உலகங்களில் இருப்பவர்களும் மீண்டும் பிறந்தேயாக வேண்டும்.குந்தியின் மகனே!என்னை அடைந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை.
·                     ஆயிரம் யுகங்கள் பிரம்மாவின் பகல், ஆயிரம் யுகங்கள் இரவு.இதனை அறிந்தவர்கள் பகலையும் இரவையும் அறிந்தவர்கள்.
·                     (பிரம்மாவின் பகல் வரும்போது தோன்றாநிலையிலிருந்து (பிரபஞ்சம் முதலான) எல்லா தோற்றங்களும் வெளிப்படுகின்றன.இரவுவரும்போது அவ்யக்தம் என்ற பெயருடைய அதன் உள்ளே ஒடுங்குகின்றன.
·                     அர்ஜுனா! உயிர்க்கூட்டம் தன்வசமின்றி பிறந்து பிறந்து இரவு வரும்போது ஒடுங்குகிறது; பகல் வரும்போது வெளிப்படுகிறது.
·                     தோன்றா நிலையில் உள்ள இந்தப் படைப்பைவிட மேலானதாக,வேறானதாக, தோன்றாததாக, அழிவற்றதாக யார் உள்ளாரோ, அவர்எல்லா உயிர்களும் அழிந்தாலும் அழிவதில்லை.
·                     தோன்றாதவர், அழிவற்றவர் என்று சொல்லப்படுகின்ற அவரை அடைவதை மேலான நிலை என்று சொல்கின்றனர். எதை அடைந்துதிரும்பி வருவதில்லையோ, அது எனது மேலான இருப்பிடம்.
·                     அர்ஜுனா! உயிர்கள் யாருள் இருக்கின்றனவோ, யாரால் இவை அனைத்தும் வியாபிக்கப்பட்டுள்ளனவோ, அந்த மேலான இறைவன்வேறு நோக்கமற்ற பக்தியால் அடையப்படுகிறார்.
·                     பரதகுலப் பெருமகனே! எந்தக் காலத்தில் இறக்கின்ற யோகிகள் திரும்ப வரமாட்டார்கள், எந்தக் காலத்தில் இறப்பவர்கள் திரும்பிவருவார்கள் என்கின்ற விவரத்தை உனக்குச் சொல்கிறேன்.
·                     தீ,சுடர்,பகல்,வளர்பிறைக் காலம், ஆறுமாத காலமாகிய உத்தராயணம்- இந்த வேளையில் உடலை விட்டுப் போகின்ற பிரம்மஞானிகள் பிரம்மத்தை அடைகிறார்கள்.
·                     புகை,இரவு,தேய்பிறைக் காலம், ஆறுமாத காலமாகிய தட்சிணாயனம்- இந்த வேளைகளில் உடலை விட்டுப் போகின்ற யோகி, சந்திரஒளியை அடைந்து திரும்பி வருகிறான்.
 
 
·                     ஒளியும் இருளுமாகிய இந்த வழிகள் உலகில் என்றென்றும் உள்ளவை என்று கருதப்படுகின்றன. ஒன்றினால் பிறவாமையைஅடைகிறான், மற்றொன்றினால் மீண்டும் பிறக்கிறான்.
·                     குந்தியின் மகனே அர்ஜுனா! இந்த இரண்டு வழிகளையும் அறிகின்ற எந்த யோகியும் குழப்பம் அடைவதில்லை. ஆகையால்எப்போதும் யோகத்தில் நிலைபெற்றவனாக ஆவாய்.
·                     வேதங்களைப் படிப்பதற்கும், வேள்விகள் செய்வதற்கும், தவத்திற்கும்,தானத்திற்கும் எந்த புண்ணிய பலன்சொல்லப்பட்டிருக்கிறதோ, யோகி அவற்றை அறிந்து, அவற்றையெல்லாம் கடந்து செல்கிறான்; ஆதியும் மேலானதுமான இடத்தைஅடைகிறான்.
                  திருப்புகழ் ( விபூதி யோகம் )
ஸ்ரீபகவான் அருச்சுனனுக்குச்  சொன்னது:
1.    பெருந்தோள் உடையவனே! எனது மேலான வார்த்தைகளைக் கேள். கேட்பதில்மகிழ்ச்சி அடைகின்ற உனது நன்மைக்காக நான் மீண்டும் சொல்கிறேன்.
2.    எனது ஆரம்பத்தை தேவர்களும் மகரிஷிகளும் அறியவில்லை. ஏனெனில் நான் தேவர்களுக்கும் மகரிஷிகளுக்கும் எல்லா வகையிலும் முற்பட்டவன்.
3.    நான் பிறப்பற்றவன், ஆரம்பமற்றவன், உலகின் தலைவன் என எவன் அறிகிறானோ அவன் மனமயக்கம் இல்லாதவன். அவன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான்.
4.    புத்தி, ஞானம், விழிப்புணர்வு, பொறுமை, உண்மை,புலனடக்கம், மனக்கட்டுப்பாடு, சுகம்,துக்கம், பிறப்பு, இறப்பு, பயம், பயமின்மை, அஹிம்சை, சமநிலை, திருப்தி, தவம், தானம், புகழ்ச்சி, இகழ்ச்சி என்று உயிரினங்களில் காணப்படுகின்ற பல்வேறு தன்மைகள் என்னிடமிருந்தே உண்டாகின்றன.
6.    ஏழு மகரிஷிகளும், அவ்வாறே பண்டைய நான்கு மனுக்களும் எனது சங்கல்பத்திலிருந்து எனது இயல்புடன் பிறந்தார்கள். அவர்களிடமிருந்து உலகில் உயிர்கள் உண்டாகின.
7.    என்னுடைய இந்த மகிமையையும் யோகத்தையும் யார் உள்ளபடி அறிகிறானோ , அவன் யோகத்தில் உறுதியாக நிலைபெறுகிறான். இதில் சந்தேகம் இல்லை.
8.    நான் எல்லாவற்றின் பிறப்பிடம். என்னிலிருந்தே அனைத்தும் செயல்படத் தொடங்குகின்றன. இவ்வாறு அறிந்து, சான்றோர்கள் பக்தியுடன் என்னை வழிபடுகிறார்கள்.
9.    அவர்கள் என்னிடம் மனத்தை வைத்து, உயிரை எனக்கு உரியதாக்கி, ஒருவருக்கொருவர் என்னைப் பற்றி விளக்கம் தந்தும், எப்போதும் பேசியும் மன நிறைவு கொள்கிறார்கள். மகிழ்ச்சி அடைகிறார்கள்.
10.  எப்போதும் யோகத்தில் இருப்பவர்களும், அன்புடன் என்னை வழிபடுபவர்களும் ஆகிய அவர்களுக்கு நான் புத்தியோகத்தை வழங்குகின்றேன். அதன்மூலம் அவர்கள் என்னை வந்தடைகின்றனர்.
11.  அவர்களிடம் கொண்ட கருணையால் நான் அவர்களின் உள்ளத்தில் வீற்றிருந்து, அறியாமை காரணமாகத் தோன்றிய இருளை, பிரகாசிக்கின்ற ஞான தீபத்தினால் அகற்றுகிறேன்.
 
அர்ஜுனன் கிருஷ்ணனிடம்  சொன்னது:
 
12.   நீ மேலான பிரம்மம், உயர்ந்த இருப்பிடம், ஒப்பற்ற புனிதப் பொருள். எல்லா ரிஷிகளும், தேவ ரிஷியான நாரதரும், அஸிதர், தேவலர், வியாசர் போன்ற முனிவர்களும் உன்னை நிலையானவன், ஒளிமயமான இறைவன், முழுமுதற் கடவுள், பிறப்பற்றவன், எங்கும் நிறைந்தவன் என்றெல்லாம் போற்றுகின்றனர். நீயும் எனக்கு அவ்வாறே சொல்கிறாய்.
14.   கேசவா! எனக்கு எதைச் சொல்கிறாயோ அவை எல்லாம் உண்மை என்று கருதுகிறேன். பகவானே! உனது உண்மை இயல்பை தேவர்களும் அறியவில்லை, அசுரர்களும் அறியவில்லை.
15.  புருஷோத்தமா! உயிர்களைப் படைத்தவனே, உயிர்களின் தலைவனே, தேவாதிதேவனே, உலகை ஆள்பவனே, உன்னை நீயே அறிவாய். உன்னால் மட்டுமே உன்னை அறிய முடியும். நீ அதை அறிகிறாய்.
16.  எந்த மகிமைகளால் நீ உலகங்களை வியாபித்து நிற்கிறாயோ, தெய்வீகமான உனது அந்த மகிமைகளை எனக்கு முற்றிலுமாகச் சொல்ல வேண்டும்.
17.  யோகீ, நான் எப்போதும் தியானிப்பதன்மூலம் எப்படி உன்னை அறிவது? பகவானே! உன்னை எந்தெந்த பாவனைகளில் தியானிக்க முடியும்?
18.  ஜனார்த்தனா! உனது யோகத்தையும் மகிமையையும் மீண்டும் எனக்கு விரிவாகச் சொல்ல வேண்டும். ஏனெனில் அந்த அமுதமொழிகளைக் கேட்பதில் எனக்குத் திருப்தியே வரவில்லை.
 
ஸ்ரீபகவான் கிருஷ்ணன் அருச்சுனனுக்கு உபதேசித்தது.  
 
19.  குருகுலப் பெருவீரனே! நல்லது. எனது தெய்வீக மகிமைகளுள் முக்கியமானவற்றை மட்டும் உனக்குச் சொல்கிறேன். ஏனெனில் எனது மகிமைகளுக்கு எல்லையே இல்லை.
20.  தூக்கத்தை வென்றவனே! எல்லா உயிர்களின் இதயத்தில் இருக்கின்ற ஆன்மா நான். உயிர்களின் ஆரம்பமும் நடுவும் முடிவும் நானே.
21.  நான் ஆதித்தர்களில் விஷ்ணு. ஒளிர்பவற்றில் கிரணங்களை உடைய சூரியன். மருத்துக்களில் மரீசியாக இருக்கிறேன். நட்சத்திரங்களில் நான் சந்திரன்.
22.  நான் வேதங்களில் சாம வேதம், தேவர்களில் இந்திரன், புலன்களில் மனம், உயிர்களில் உணர்வு.
23.  நான் ருத்திரர்களில் சங்கரன். யட்சர்கள் மற்றும் ராட்சஸர்களுள் செல்வத்துக்கு அதிபதியான குபேரனாகவும், வசுக்களுள் அக்கினியாகவும், சிகரமுள்ள மலைகளில் மேருவாகவும் நான் இருக்கிறேன்.
24.  அர்ஜுனா! புரோகிதர்களில் முக்கியமானவரான பிருகஸ்பதி நான். சேனாதிபதிகளில் கந்தனாகவும், நீர்நிலைகளில் கடலாகவும் நான் இருக்கிறேன்.
25.  நான் மகரிஷிகளில் பிருகு, மந்திரங்களுள் ஓரெழுத்து மந்திரமாகிய ஓங்காரம், வேள்விகளுள் ஜப வேள்வி, அசையாதவற்றுள் இமயமலை.
26.   நான் மரங்களில் அரச மரம், தேவ ரிஷிகளில் நாரதர், கந்தர்வர்களில் சித்ராதன், சித்தர்களில் கபில முனிவர்.
27.  நான் குதிரைகளில் பாற்கடலிருந்து தோன்றிய உச்சைசிரவசம். யானைகளில் ஐராவதம், மனிதர்களில் அரசன்.
28.  நான் ஆயுதங்களில் வஜ்ராயுதம், பசுக்களில் காமதேனு. நான் உயிர்களைப் பிறப்பிக்கின்ற மன்மதனாக இருக்கிறேன். சர்ப்பங்களில் வாசுகியாக இருக்கிறேன்.
29.  நாகங்களில் நான் அனந்தனாக இருக்கிறேன். ஜலதேவதைகளில் வருணன் நான். முன்னோர்களில் அரியமானாக இருக்கிறேன். ஒடுக்குபவர்களில் எமன் நான்.
30.  நான் அசுரர்களில் பிரகலாதன், கணிப்பவர்களில் காலம், மிருகங்களில் சிங்கம், பறவைகளில் கருடன்.
31.  நான் சஞ்சரிப்பவற்றுள் காற்று, ஆயுதம் தாங்கியவர்களில் ராமன், மீன்களில் மகர மீன், நதிகளில் கங்கை.
32.  அர்ஜுனா! படைப்பிற்கு ஆரம்பமும் முடிவும் நடுவும் நானே. வித்யைகளில் ஆத்ம வித்யை நான். வாதிடுபவர்களின் வாதம் நான்.
33.  நான் எழுத்துக்களில் அகரம், கூட்டுச்சொற்களில் இருசொற் கூட்டு. முடிவற்ற காலம் நானே. எங்கும் முகமுள்ளவனாக இருந்துகொண்டு நான் அனைவருடைய கர்ம பலனைப் பகிர்ந்தளிக்கின்றேன்.
34.  அனைத்தையும் அழிக்கின்ற மரணம் நான். செல்வந்தர்களின் செல்வம் நான். பெண்களில் சுய கௌரவம், அக அழகு, இனிய பேச்சு, துல்லிய நினைவு, கூரிய அறிவு, உறுதிப்பாடு, பொறுமை ஆகிய பண்புகளாக இருக்கிறேன்.
35.  நான் ஸாமங்களில் பிருஹத் ஸாமம், சந்தஸ்களில் காயத்ரீ, மாதங்களில் மார்கழி, பருவங்களில் வசந்த காலம்.
36.  நான் வஞ்சகர்களில் சூதாட்டம், தேஜஸ்விகளின் தேஜஸ். வெற்றியாக, முயற்சியாக இருப்பவன் நான். சாத்வீகர்களின் சத்வ குணம் நானே.
37.  நான் விருஷ்ணிகளில் வாசுதேவன், பாண்டவர்களில் அர்ஜுனன், முனிவர்களில் வியாசர், கவிஞர்களில் சுக்கிராச்சாரியார்.
38.  தண்டிப்பவர்களிடம் நான் தண்டனையாக இருக்கிறேன், வெற்றியை விரும்புபவர்களிடம் நீதியாக இருக்கிறேன். நான் ரகசியங்களில் மௌனம். ஞானிகளின் ஞானமாக இருப்பது நானே.
39.  அர்ஜுனா! எல்லா உயிர்களுக்கும் எது விதையாகிறதோ அது நான். அசைவதும் அசையாததுமான பொருள் எது இருக்கிறதோ அது என்னைத் தவிர வேறில்லை.
40.  எதிரிகளை வாட்டுபவனே! எனது தெய்வீக மகிமைகளுக்கு முடிவு இல்லை. கோடிகாட்டுவதுபோல் இதுவரை சிலவற்றைச் சொன்னேன்.
41.  மிகமேலான மகிமையுடனும் ஐசுவரியத்துடனும் சோர்வற்ற முயற்சியுடனும் எவையெல்லாம் உள்ளனவோ அவையெல்லாம் எனது தேஜஸின் ஒரு பகுதியால் உண்டானது என்று அறிந்துகொள்.
 
42.  அர்ஜுனா! இவ்வாறு பலவற்றை அறிந்துகொள்வதால் உனக்கு ஆவதென்ன? எனது ஒரு அம்சத்தால் இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் தாங்குகிறேன்.

   இவ்வாறு விபூதி யோகத்தைப் பற்றி கிருஷ்ண பகவான் அருச்சுனனுக்குத் தெரிவிப்பதுபோல் நமக்கு வழிகாட்டுகிறார்--  

No comments:

Post a Comment