Monday, July 1, 2013

Ramayana in one stanza

Courtesy: Sri.Mannargudi Sitaraman Srinivasan

அன்றொரு நாள் ராமன் வனம் சென்றதுவும்
ஆங்கவன் பொன்மானைக் கொன்றதுவும்
இலக்குமி வடிவாம் சீதை மறைந்ததுவும்
ஈடிலா ஜடாயு உயிர் பிரிந்ததுவும்
உம்பியொருவனை ராமன் பெற்றதுவும்
ஊறுசெய் வாலிதனை அழித்ததுவும்
எம்பிரார்க்காய் அனுமன் கடல் கடந்ததுவும்
ஏற்றமிகு லங்கை தீப்பட்டதுவும்
ஐயமின்றி அரக்கர் படை அழிந்ததுவும்
ஒப்பாரின்றி இப்பாரை ஆண்டதுவும்
ஓதுதற்கு ஏற்ற நூல் ஆனதுவும்
ஔடதம் போல் உள்ளம் உவப்பதுவும்
அஃதன்றே ஒரு பாடல் ராமகதை…!

இந்த உலகத்தை ஆனந்தமாகவும், அமைதியாகவும் வைத்திருக்க ஆசி தாருங்கள்'
என்றே வேண்டிக்கொள்ளத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment