இடைக்காட்டுச் சித்தர் என்று ஒருவர் இருந்தார். ஸித்தர்கள் விநோதமான காரியங்கள் பண்ணுவார்கள்;புதிராகப் பேசுவார்கள். இடைக்காட்டுச் சித்தர் ஆடு மேய்த்தார்!அவர், 'காணாமல் கோணாமற் கண்டு கொடு!ஆடுகாண் போகுது பார் போகுது பார்!என்று சொல்லி இருக்கிறார்.
"காணாமல்"என்றால் சூரியனைக் காண்பதற்கு முன்பு என்பது அர்த்தம். அதாவது சூரியோதையத்திற்கு முன் காலை அர்க்கியம்கொடுக்க வேண்டும். "கோணாமல்"என்பதற்கு சூரியன் தலைக்கு நேரே இருக்கும் பொழுது என்பது அர்த்தம். அதாவது சூரியன் மேற்காக சாய்வதற்கு முன் உச்சிக்காலத்தில் மாத்யான்னிக அர்க்கியம் கொடுக்க வேண்டும். "கண்டு"என்பதற்கு சூரியன் இருக்கும் போது என்று அர்த்தம். சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு மலை வாயிலில் இருக்கும்பொழுதே ஸாயங்கால அர்க்கியம் கொடுக்க வேண்டும்.
இந்த விஷயங்களைத்தான் அந்த ஸித்தர் லேசாகச் சொல்லியிருக்கிறார். "ஆடு" என்றால் "நீராடு!" அதாவது "கங்கையில் ஸ்நானம் பண்ணு" என்பது அர்த்தம். "காண்" என்றால் "ஸேது தரிசனம் பண்ணு" என்பது அர்த்தம். "போகுது பார்" என்றால் த்ரிகால ஸந்தியாவந்தனத்தாலும் கங்கா ஸ்நானத்தாலும் ஸேது தரிசனத்தாலும் நம் பாபம் தொலைந்து போகிறதைப் பார்!" என்று அர்த்தம்.

No comments:
Post a Comment