Courtesy: Sri.Mayavaram Guru
சிவம் என்ற சொல்லுக்கு செம்மை
பூரணத்துவம்
மங்களமானது
என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக முழுமையாக, தான் மங்களகரமாகவும், தன்னைச் சார்ந்தவர்களை மங்களகர மாக்குபவரும் ஆன இனிய இறைவனைச்சிவபெருமான் என்று அழைக்கின்றோம்.
சிவபெருமான் என்றும் உள்ளவர்
எங்கும் நிறைந்தவர்
எல்லாம் அறிபவர்
எல்லாம் வல்லவர்
தூயவர்
அழிவிலா இன்பம் உடையவர்
பிறர்க்கு ஆட்படாதவர்.
சிவபெருமானைத் தொழுவதால் சிவபெருமானுக்கு எந்தப் பயனும் இல்லை.
ஆனால்அழிவில்லாதவரும், இன்ப மயமானவருமான சிவபெருமான், தம்மைத் தொழுபவர்களுக்கு அந்த அழிவில்லாத இன்பத்தை அடைய அருள் புரிவார்.
உலகியலில் தோன்றும் இன்பங்கள் நிலையானவைகள் அல்ல, ஆனால் சிவபெருமான் அருளும் இன்பத்தைப் பெற்றவர்கள் என்றென்றும் இன்பத்தைப் பெற்று மகிழ்ந்திருப்பர்.
இந்த உடல் எடுத்ததின் பயனே முற்றிலும் இன்ப மயமான சிவபெருமானை வணங்கி அவர் திருவருளால் கிடைக்கும் முடிவே இல்லாத அளவில்லாத இன்பத்தை அடைவது தான்.
அதனால் சிவ வழிபாடு செய்யாமல் இருப்பது உடலை வீணே வளர்த்துக் காக்கைக்கும் மண்ணிற்கும் பலியாக்குவதற்கே ஆகும்.
சிவனடியில் முழுமையாகச் சரணடைந்து விட்டால், அமைதியும், ஆன்மிக உணர்வும், கிடைக்கும். அந்நிலையில், நம் குறைகளைப் பற்றி முறையிடும் எண்ணம் தோன்றாது. முழுமையான பக்தியின் இயல்பு இது தான்..
இறைவன் காப்பாற்றுவான், என்ற எண்ணத்தில் உறுதி இருந்தால், மனம் தெளிவடையும். அப்போது தவறு செய்ய இடம் உண்டாகாது.கடவுளிடம் சரணடைந்து விட்டேன்,என வெறும் வார்த்தையை மட்டும் உதிர்த்து பயனில்லை. உளப்பூர்வமாக அவரிடம் சரணடைய வேண்டும்.
இந்த உடல் எடுத்ததின் பயன் சிவ வழிபாடு செய்து அந்தப் பேரின்பத்தை அடைவதே.
சிவ வழிபாடு செய்து பேரின்பத்தை அடைய வேண்டும்


No comments:
Post a Comment