Thursday, February 28, 2013

அனைத்து கஷ்டங்களும் ஒரு சுகமான அனுபவமே!!!

Courtesy: Sri.Mayavaram Guru


அனைத்து கஷ்டங்களும் ஒரு சுகமான அனுபவமே!!!
-------------------------------------------------------------------------

எல்லாக் கஷ்டத்தையும் , மனுஷங்க மேல இறக்கி வைக்க முடியாது. அது நம்ம குடும்பமா இருந்தாலும் சரி , இல்லை நெருங்கிய நண்பர்களா இருந்தாலும் சரி. ஆனா, ஒருத்தர் மேல நீங்க தைரியமா இறக்கி வைக்கலாம் . அந்த நம்பிக்கைக்கு உரியவன் ஆண்டவனே. பாரம் இறங்கினால் சுமை குறையும். சுமை குறைந்தால் மனம் லேசாகும். மனம் லேசானால் வாழ்வின் ருசி வளரும். எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்போம். அவற்றின் மீது அன்பு செய்வதே உண்மையான பக்தி வழிபாடு.
உலகம் முழுவதும் கடவுள் இல்லை என்று சொன்னாலும், எனக்குக் கடவுள் என்றும் உண்டு' என்றார் மகாத்மா காந்தி. 

திருமுருக கிருபானந்த வாரியார் , இறைவன் தனக்கு உதவியதை நிரூபித்து உலகுக்கே எடுத்து சொன்னவர். 

வாரியார் சுவாமிகளின் சிறு வயதில் ஒரு காலில் கண்ணாடி குத்தி பெருத்த சேதத்தை உண்டு பண்ணி விட்டது. புண் பழுத்துப் போய் காலையே எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆனார். மருத்துவர், காலை எடுத்து விட ரூ 500 கேட்டார். 

வாரியார் சுவாமிகள், " ஒரு காலை எடுப்பதற்கு இந்த மருத்துவருக்கே இவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால் , இரண்டு கால்களை தந்த முருகனுக்கு நான் எவ்வளவு கொடுக்க வேண்டும் " என்று யோசிக்கலானார். காலை , மாலை என்று இருவேளைகளில் 41 நாட்கள் சிந்தாரிப்பேட்டை முருகன் கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்தார். 
புண் இருந்த அடையாளமே காலில் இல்லாமல் போனது. 

இது உண்மையில் நடந்த சம்பவம். ஒரு அளவுக்குத் தான் நமக்கு வர்ற கஷ்டங்களை சமாளிக்க முடியும் கையை மீறி விஷயங்கள் நடக்கும்போது , ஆண்டவான்னு அவரை சரணடைபவர்களை , அவர் கை விடுவதில்லை . நம் ஒவ்வொருவருக்குமே இதைப் போன்ற அனுபவங்கள் அடிக்கடி நிகழும் . ஆனால் பிரச்னை முடிந்தவுடனே , நாம் அவனது கருணையை நினைத்துக்கூட பார்ப்பதில்லை - திரும்ப ஒரு பூதாகரமான பிரச்னை வரும்வரை...! 

ஒரு சிறிய நிகழ்வு::::::::
---------------------------------

ஒரு தெருவின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர், அந்த குப்பையைக் கிளறி அவருக்குத் தேவையான சில பொருட்களை எடுத்துச் சென்றார்.பின் சிறிது நேரம் கழித்து மற்றொரு பழைய பொருள் சேகரிப்பவர் வந்து அப்படியே செய்தார். அது போல் அந்த ஒரு மணி நேரத்தில் ஆறு நபர்கள் வந்து, அந்த குப்பைத் தொட்டியைக் கிளறி தேவையானது கிடைக்க, நம்பிக்கையோடு அடுத்த இடம் சென்றனர். 

வாழ்க்கையில் மிகவும் தோல்விகளைச் சந்தித்து எதிர்காலம் கேள்விக்குறி என்ற நிலையில் அப்போது இருந்தேன். ஆனால் ஒரே ஒரு குப்பைத் தொட்டியில் ஆறு பேருக்குப் பலன் கிடைக்கும் போது, இந்த பரந்த உலகில் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ நேர்மையான, நிலையானஒளிமயமான வாய்ப்புகள் உண்டு எல்லொருக்கும்.
 

No comments:

Post a Comment