Courtesy: Sri.Mayavaram Guru
கலியுகத்தில் மக்களை யார் காப்பார்கள்? என்ற கேள்வி துவாபரயுகத்தில் எழுப்பப்படுகிறது. அக் கேள்விக்கு,

சிவ பெருமானின்
திருப்பாதங்களைக் கழுவிய புனித நீரும் அவரது திருச் சின்னங்களைத் தரித்தலும் பஞ்சாட்சர மந்திரங்களை ஒதுதலுமே கலியுகத்தில் மக்களைக் காக்கும்
என்ற விடையும்
அதே துவாபர யுகத்திலேயே தரப்படுகிறது.
சிவ பெருமானின் திருச் சின்னங்களில் ஒன்று ருத்ராட்சமாகும்.
இந்தக் கலியுகத்தில் , சிவபெருமானின் கண்களில் இருந்து தோன்றிய ருத்ராட்ச மணிகள், அவரின் கருணைப் பார்வையைப் போலவே , நம் துன்பங்களைப் போக்குகின்றன. ஆனந்தமான வாழ்வைத் தருகின்றன, என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவோம்.
தெய்வங்களில் சிறந்தவர் - சிவ பெருமான்
புருஷர்களில் சிறந்தவர் - மகா விஷ்ணு
கிரகங்களில் சிறந்தது - சூரியன்
முனிவர்களில் சிறந்தவர் - காசிபர்
பசுக்களில் சிறந்தது - காமதேனு
குதிரையில் சிறந்தது - உச்சிரவம்
யானைகளில் சிறந்தது - ஐராவதம்
புற்களில் சிறந்தது - அருகம் புல்
வேதங்களில் சிறந்தது - ரிக் வேதம்
மந்திரங்களில் சிறந்தது - காயத்ரி
ஒளடதங்களில் சிறந்தது - அமிர்தம்
உலோகங்களில் சிறந்தது - தங்கம்
நவ ரத்தினங்களில் சிறந்தது - வைரம்
அணியும் மணிகளில் சிறந்தது - ருத்ராட்ச மணியே ஆகும்.
இவ்வாறு ஸ்ரீமத் தேவி பாகவதம் உரைக்கிறது.
ருத்ராட்சம் வெளிப்படையாகவும், சூட்சுமமாகவும் அற்புதமான பலன்களை அளிக்கவல்ல மணியாகும். ருத்ராட்சம் என்று கூறிய வுடனே அது ஆன்மீக வாதிகளுக்கு மட்டுமே உரித்தானது என்று பலரும் கருதுகிறார்கள். அது தவறான கருத்தாகும்.
ஆன்மீக வாதிகள் மட்டுமின்றி, மற்ற கலைஞர்கள் , இல்லத்தரசிகள், மாணவ மாணவியர், தொழிலதிபர்கள், யாவரும் அணிந்து பலன் பெற வேண்டிய மணி ருத்ராட்சம் என்றால் அது மிகையல்ல.
உலகியல் வாழ்வில் ஏற்படும் துன்பத்தைப் போக்க உதவும் அருள் பார்வையின் பொருளாக உள்ளதுதான் ருத்திராட்சமாகும்.
நாராயணனுக்கு உகந்த செபமாலை துளசி மாலையாகும். சிவனுக்கு உகந்த செபமாலை ருத்திராட்ச மணி மாலையாகும்.
ஒரு ருத்திராட்ச மணி ஒரு சிவலிங்கத்திற்கு ஒப்பானது.
சிவபுண்ணியம் தேடுவோர் சிவபூஜையின் போதும், சிவபுராணம் ஓதும் போதும், சிவநிட்டையில் திருமறை ஓதும் போதும் ருத்திராட்ச மாலை அவசியம் அணிதல் வேண்டும்.
சிவனுக்குப் பிடித்த ருத்திராட்சமில்லாத பூஜை, மிக பலனற்ற பூஜையாகுமென சைவ நெறி கூறுகிறது.
ருத்திராட்சத்தில் மூன்று தெய்வங்களும்
குடிகொண்டுள்ளதாக வேதங்கள் கூறுகின்றன.
ருத்திராட்சத்தின் மூலம் பிரம்மாவையும், மத்தியில் செல்லும் துவாரம் சிவனையும், அடிப்பாகம் விஷ்ணுவையும் குறிக்கும்.
ருத்திராட்சத்தின் மீது பட்டுவிழும் தண்ணீர் கங்கை நீரை ஒத்த புனிதத் தன்மையுள்ளது.
பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா? கூடாதா?
அதற்க்கு எதேனும் ஆதாரம் உள்ளதா என்பது குறித்த விளக்கத்தை அடுத்த மின்னஞ்சலில் பார்க்கலாம்.திருப்பாதங்களைக் கழுவிய புனித நீரும் அவரது திருச் சின்னங்களைத் தரித்தலும் பஞ்சாட்சர மந்திரங்களை ஒதுதலுமே கலியுகத்தில் மக்களைக் காக்கும்
என்ற விடையும்
அதே துவாபர யுகத்திலேயே தரப்படுகிறது.
சிவ பெருமானின் திருச் சின்னங்களில் ஒன்று ருத்ராட்சமாகும்.
இந்தக் கலியுகத்தில் , சிவபெருமானின் கண்களில் இருந்து தோன்றிய ருத்ராட்ச மணிகள், அவரின் கருணைப் பார்வையைப் போலவே , நம் துன்பங்களைப் போக்குகின்றன. ஆனந்தமான வாழ்வைத் தருகின்றன, என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவோம்.
தெய்வங்களில் சிறந்தவர் - சிவ பெருமான்
புருஷர்களில் சிறந்தவர் - மகா விஷ்ணு
கிரகங்களில் சிறந்தது - சூரியன்
முனிவர்களில் சிறந்தவர் - காசிபர்
பசுக்களில் சிறந்தது - காமதேனு
குதிரையில் சிறந்தது - உச்சிரவம்
யானைகளில் சிறந்தது - ஐராவதம்
புற்களில் சிறந்தது - அருகம் புல்
வேதங்களில் சிறந்தது - ரிக் வேதம்
மந்திரங்களில் சிறந்தது - காயத்ரி
ஒளடதங்களில் சிறந்தது - அமிர்தம்
உலோகங்களில் சிறந்தது - தங்கம்
நவ ரத்தினங்களில் சிறந்தது - வைரம்
அணியும் மணிகளில் சிறந்தது - ருத்ராட்ச மணியே ஆகும்.
இவ்வாறு ஸ்ரீமத் தேவி பாகவதம் உரைக்கிறது.
ருத்ராட்சம் வெளிப்படையாகவும், சூட்சுமமாகவும் அற்புதமான பலன்களை அளிக்கவல்ல மணியாகும். ருத்ராட்சம் என்று கூறிய வுடனே அது ஆன்மீக வாதிகளுக்கு மட்டுமே உரித்தானது என்று பலரும் கருதுகிறார்கள். அது தவறான கருத்தாகும்.
ஆன்மீக வாதிகள் மட்டுமின்றி, மற்ற கலைஞர்கள் , இல்லத்தரசிகள், மாணவ மாணவியர், தொழிலதிபர்கள், யாவரும் அணிந்து பலன் பெற வேண்டிய மணி ருத்ராட்சம் என்றால் அது மிகையல்ல.
உலகியல் வாழ்வில் ஏற்படும் துன்பத்தைப் போக்க உதவும் அருள் பார்வையின் பொருளாக உள்ளதுதான் ருத்திராட்சமாகும்.
நாராயணனுக்கு உகந்த செபமாலை துளசி மாலையாகும். சிவனுக்கு உகந்த செபமாலை ருத்திராட்ச மணி மாலையாகும்.
ஒரு ருத்திராட்ச மணி ஒரு சிவலிங்கத்திற்கு ஒப்பானது.
சிவபுண்ணியம் தேடுவோர் சிவபூஜையின் போதும், சிவபுராணம் ஓதும் போதும், சிவநிட்டையில் திருமறை ஓதும் போதும் ருத்திராட்ச மாலை அவசியம் அணிதல் வேண்டும்.
சிவனுக்குப் பிடித்த ருத்திராட்சமில்லாத பூஜை, மிக பலனற்ற பூஜையாகுமென சைவ நெறி கூறுகிறது.
ருத்திராட்சத்தில் மூன்று தெய்வங்களும்
குடிகொண்டுள்ளதாக வேதங்கள் கூறுகின்றன.
ருத்திராட்சத்தின் மூலம் பிரம்மாவையும், மத்தியில் செல்லும் துவாரம் சிவனையும், அடிப்பாகம் விஷ்ணுவையும் குறிக்கும்.
ருத்திராட்சத்தின் மீது பட்டுவிழும் தண்ணீர் கங்கை நீரை ஒத்த புனிதத் தன்மையுள்ளது.
பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா? கூடாதா?
No comments:
Post a Comment