Courtesy: Sri.Mayavaram Guru
| ஞானமின்றி செய்தாலும் அம்பாள் ஏற்கிறாள் என்பது விசித்திரமாக படலாம். இங்கு ஞானம் என்று சொல்வது மூல நூலின் சொற்பொருளை அறிந்திருப்பதையே குறிக்கும் எனலாம். வேறொரு சந்தர்ப்பத்திலும் ஸ்ரீ காஞ்சி பெரியவர்கள் கூறியது இங்கு மிகவும் பொருந்தும். 'வேத மந்திரங்களுக்கு அர்த்தம் தெரிந்து சொன்னாலே பூரண பலன் உண்டு என்கிறார்கள். எனக்கென்னவோ அர்த்தம் தெரியாமல் சொன்னால் கூட அதே பலன், ஒருகால் அதிக பலன் கூட உண்டு என்றே தோன்றுகிறது. பக்தி சிரத்தை, நம்பிக்கை தான் முக்கியம். 'ரிஷிகள் கொடுத்த மந்திரம் இது, இதை சொன்னாலே போதும், பரமாத்மா அனுக்கிரகம் பண்ணிவிடுவார்' என்ற நம்பிக்கை இருந்து விட்டால் போதும். அர்த்தமே தெரியாமல் சொன்னால் கூட பரமாத்மா அனுக்கிரகம் பண்ணிவிடுவார். கலெக்டரிடம் ஒரு எழுத படிக்க தெரியாத விவசாயிக்கு மனு கொடுக்க வேண்டியிருக்கிறது. அவனுக்காக யாரோ படித்தவர்கள் எழுதி தந்திருக்கிறார்கள். அவர்கள் நமக்கு நல்லதை தான் செய்திருப்பார்கள் என்று பூரணமாக நம்பி விவசாயி அதை துரையிடம் கொடுக்கிறான். இவனுடைய எளிமையையும், விநயத்தையும் பார்த்த கலெக்டருக்கு இவனிடம் ரொம்பவும் பரிவு உண்டாகி காரியத்தை முடித்து தந்து விடுகிறார். தாங்களாகவே மனு எழுதி வந்து 'தாட்பூட்' என்று பேசுகிறவர்களை விட இந்த எழுத படிக்க தெரியாத விவசாயிக்கே துரை, அதிக சலுகை கொடுத்தாலும் கொடுப்பார்' என்பார் ஸ்ரீ பெரியவர்கள். ஒரு சாகரமே இதன் உட்பொருளாக உள்ளது. |
No comments:
Post a Comment