Wednesday, November 21, 2012

Gopucha yati

Courtesy: S.Sundararajan
இந்தச் linkஐ பார்க்கவும் http://www.kamakoti.org/tamil/3dk279.htm

சம்ஸ்கிருத்தில் மட்டுமில்லாமல் எல்லா மொழி இலக்கியத்திலும் இது காணப்படும்.

கவயாமி வயாமி யாமி என்பது கோபுச்ச யதி.

கோபுச்சயதி என்பது பசுவின் லைப்போலஆரம்பத்தில்அகலமாகவும்பின்குறுகிக்கொண்டேபோகும்சாகித்தியஅமைப்புஆகும்.
எடுத்துக்காட்டு :- "தியாகராஜா"
(ஆனந்த பைரவி - ஆதி - முத்துசுவாமி தீஷிதர்)
தியாகராஜ யோக வைபவம்
யாகராஜ யோக வைபவம்
ராஜ யோக வைபவம்
யோக வைபவம்
வைபவம்
பவம்
வம்
இதற்கு வேறானது சுரோத்தவாகயதி. அது ஆற்றைப் போல தொடக்கத்தில் குறுகியும் பின் விரிந்து கொண்டே போகும் சாகித்திய அமைப்பு ஆகும். எடுத்துக்காட்டுக்கள் :- "தியாகராஜா"
(ஆனந்த பைரவி - ஆதி - முத்துஸ்வாமி தீஷிதர்)
சம்
பிரகாசம்
சுவரூப பிரகாசம்
சகல சுவரூப பிரகாசம்
சகல தத்வ சுவரூப பிரகாசம்
சிவசக்தி ஆதி சகல தத்வ சுவரூப பிரகாசம்
"அடுத்தானை" எனத் தொடங்கும் தேவாரப் பாடலில் கீழ்க் கண்டவாறு உள்ளது.
கொடுத்தானை
பதம் கொடுத்தானை
பாசுபதம் கொடுத்தானை
அர்ச்சுனர்க்கு பாசுபதம் கொடுத்தானை.

'தெய்வத்திருமலைச்செங்கோட்டில்வாழுஞ்செழுஞ்சுடரே
வைவைத்தவேற்படைவானவனேமறவேன்'என்ற கந்தர் அலங்காரப்பட்டலை
செழுஞ்சுடரே
வாழுஞ்செழுஞ்சுடரே
செங்கோட்டில்வாழுஞ்செழுஞ்சுடரே
திருமலைச்செங்கோட்டில்வாழுஞ்செழுஞ்சுடரே
தெய்வத்திருமலைச்செங்கோட்டில்வாழுஞ்செழுஞ்சுடரே
என்று பாடும்பொழுது பாட்டின் பொருளும் அழகும் போட்டி
போட்டுக்கொண்டு மின்னும்

No comments:

Post a Comment