Courtesy: Sri.Mayavaram Guru
தேனம்பாக்கம் பிரும்மபுரீஸ்வரர் ஆலயத்தில் பூஜை செய்யும் விசுவநாத சிவாச்சாரியாருக்கு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பூஜை முறை உண்டு. தேனம்பாக்கத்தில் தங்கியிருந்த பெரியவா ஒரு நாள், ஏகாம்பரேஸ்வரர் தரிசனத்துக்கு சென்றார்கள். அன்றைக்கு விஸ்வநாத சிவாச்சாரியார் முறை.சிவாச்சாரியாருக்கு கொள்ளை சந்தோஷம். தான் பூஜை முறையில் இருக்கும்போது பெரியவா தரிசனத்துக்கு வந்திருக்கிறார்கள். தற்செயலான வருகை. முன்கூட்டி சொல்லி விட்டு வரவில்லை. ஏகம்பன் அருளால் பெரியவாளுக்கு தரிசனம் பண்ணி வைக்கும் மகத்தான பேறு கிடைத்திருக்கிறது. உள்ளம் நெகிழ்ந்தார், சிவாசாரியார். "பெரியவா உள்ளே வந்து தரிசனம் பண்ணிக்கலாம்." "அது கர்ப்ப க்ருஹம். ஆகம சாஸ்திரப்படி சிவாச்சாரியார்கள் தான் கர்பக்ருஹத்துக்குள் போகலாம்... சில கோவில்களில் கர்பக்ருஹத்துக்குள் போவதற்கு எங்களுக்கு உரிமை இருக்கு. ரொம்ப காலமாக. இந்த கோவிலில் அந்த உரிமை இல்லை. இங்கிருந்தே ஆனந்தமாக தரிசனம் கிடைக்கிறது. " |
No comments:
Post a Comment