Thursday, March 15, 2012

KARMAMA ELLAI POOJAIYA

Courtesy: Sri.Ramasubramanian
கர்மமா..... பூஜையா?
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2011,00:00 IST

கர்மம் செய்கிறவனிடம் பகவான் பிரீதி அடைவானா?

பூஜை செய்கிறவனிடம் பிரீதி அடைவானா? 


ஒரு பிரபுவிடம் இரண்டு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். ஒருவன் வேலை எதுவும் செய்யாமல் அந்தப் பிரபுவை ஸ்தோத்திரம் செய்து கொண்டே இருக்கிறான். இன்னொருவன் வெகு நேர்த்தியாக வேலை செய்கிறான்.


என்றாலும் அந்தப் பிரபுவிடம் துளிக்கூட அன்போ பாசமோ காட்டாமல் வேலையை மட்டும் கவனிக்கிறான்.


சாதாரணமாகப் பார்ப்பவர்களுக்கு அருகில் நின்று ஸ்தோத்திரம் பண்ணுகிறவன்தான் பிரபுவின் பிரீதிக்குப் பாத்திரமாக முடியும் என்று தோன்றும்.


பிரபு அசடாக இருந்தால் இப்படியே நடப்பான். ஆனால், அவன் புத்திசாலியாக இருந்தால் கண்ணில் படாமல் வேலை செய்கிறவனிடமே அதிகப் பிரியத்துடன் இருப்பான்.


ஈசுவரன் அசட்டுப் பிரபு இல்லை. தன்னை ஸ்தோத்திரம் பூஜை செய்கிறான் என்பதால் மட்டும் ஒருவனுக்கு அவன் அநுக்கிரகம் செய்துவிட மாட்டான். தான் வித்தித்த கர்மங்களைச் செய்கிறவர்களிடமே அதிகப் பிரீதி கொள்வான்.


ஆனாலும், அந்தக் கர்ம மார்க்கக்காரன் மனஸில் அன்பே இல்லாம், "வெட்டு, வெட்டு' என்று வேலை மட்டும் செய்தால் அவன் பகவத் பிரீதியின் ஆனந்தத்தைப் பூரணமாக அநுபவிக்க முடியாது.


இது பகவான் செய்த லோகம். சர்வலோக ராஜாவான பகவானின் குடிமக்களே ஜனங்கள் அத்தனை பேரும். நாமும் அவனுடைய பிரஜை.


எனவே இவர்களெல்லாம் நம்மைச் சார்ந்தவர்கள். நம் சகோதரர்கள். ராஜாவாக இருக்கிறதோடு அவனே நம் அம்மையும் அப்பனும். நாம் அத்தனை பேரும் அவனுடைய குழந்தைகள்.


ஆதலினால் ஒருத்தருக்கொருத்தர் சகோதரர்கள். இத்தனை குழந்தைகளும் இருக்கிற ஜன சமூகக் குடும்பம் ஒற்றுமையாக, சௌஜன்யமாக வாழ வேண்டுமென்றே நமக்கு வேத தர்மம் வெவ்வேறு காரியங்களைப் பிரித்துக் கொடுத்திருக்கிறது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
 

__._,_.___
 
.

__,_._,___

No comments:

Post a Comment