Thursday, January 11, 2018

Story of Putradaa Ekadashi

வருகின்ற 29/12/2017
அன்று வரக்கூடிய ஏகாதஶீ புத்ரதா என பெயர் கொண்டது..
இதன் மாஹாத்ம்யத்தையும் கதையையும் பார்ப்போம்.
ஒரு சமயம் பத்ராவதீ என்கின்ற நாட்டில் ஸுகேதுமான் என்கின்ற அரசன் இருந்தான். அவனுக்கு ஶைவ்யா என்கின்ற பத்நீ மிகவும் தர்மவதியாக இருந்தாள்.அந்த தம்பதிகளுக்கு பல நாட்களாக ஸந்ததி இல்லாமல் இருந்தது. ராஜாவும் மிக வேதனைக்கு உள்ளாகி காலத்தை கழிக்க துவங்கினான்.
தனக்கு பிறகு பித்ருகர்மாக்கள் செய்வதற்கு புத்ரனில்லையே என  மிகவும் வேதனையுற்றான்..தினமும் தன் பத்நியிடம் கூறி மிகவும் வருந்தினான்.." குழந்தையற்றவனுக்கு இந்த லோகத்திலும் சரி பர லோகத்திலும் சரி ஹிதம் இல்லை" என கூறி புலம்பியபடி வாழ்நாளை கழித்தான்..
ஒரு சமயம் அந்த ராஜாவானவன் வேட்டையின் பொருட்டு கானகத்தை நோக்கி சென்றான்.
அங்கு பலவிதமான மரங்கள் பக்ஷிகள் மற்றும் ம்ருகங்கள் எல்லாவற்றையும் கண்டு ஆஶ்சர்யப்பட்டான்.
மத்யாஹ்னகாலம் வந்தது!!
நல்ல பசி மற்றும் தாஹத்தினால் அவஸ்தை பட ஆரம்பித்தான் அரசன்.
ஆஹா இதென்ன இப்படி நாம் வருத்தத்திற்குள்ளானோம் என குமுறியவாறு, இன்னும் கானகத்தின் உள்ளுக்கு சென்றான்..
அங்கு ஓர் அருமையான குளத்தைக்கண்டான்..
அதைக்கண்ட அரசன் உற்று நோக்குகையில் அங்கு பல மஹர்ஷிகள்  கூடாரங்குளுடன் 
தங்கி இருப்பதைக்கண்டு ஆனந்தமடைந்து குதிரையில் இருந்து இறங்கி ஒவ்வொரு மஹர்ஷிகளையும் தனித்தனியே வணங்கினான்.
வணங்கி குஶலமும் விசாரித்தான்.
தாங்கள் இங்கு விஜயம் செய்ததன் காரணம் அறிய ஆசைப்படுவதாகவும் கூறினான்.
நமஸ்கரித்த அரசனைக்கண்ட மஹர்ஷிகள் அனுக்ரஹித்தனர்..
மேலும் கூறினர் 
 "  நாங்கள் விஶ்வேதேவர் என்கின்ற மஹர்ஷிகள்.இன்றிலிருந்து ஐந்தாவது நாள், மாகமாஸாரம்பமாக உள்ளது . இன்றைய தினம் ஏகாதஶீயாகும்..இந்த ஏகாதஶீக்கு புத்ரதா என பெயர் ஆகும். இன்றைய தினம் எவன் ஒருவன் ஏகாதஶீ வ்ரதத்தை அனுஷ்டிக்கின்றானோ அவனுக்கு நல்ல ஸத்புத்ரன் பிறப்பான்.." 
இதை கேட்ட அரசன் தனக்கும் ஸந்ததி இல்லாமையை சொல்லி வருந்தி அவர்களிடம் ப்ரார்த்தித்தான்.
உடனே மஹர்ஷிகளும் " ஓ அரசனே இந்த வ்ரதத்தை நீயும் எங்களுடன் அனுஷ்டிப்பாயாக!!! எங்களின் ஆஶீர்வாதத்தாலும் இந்த ஏகாதஶீ வ்ரத அனுஷ்டானத்தாலும் அவஶ்யம் உனக்கு ஸத்புத்ரன் பிறப்பான் "
என்றனர்.. உடனே அரசனும் இந்த புத்ரதா ஏகாதஶீ வ்ரதத்தை அனுஷ்டித்து மறுநாள் அங்கேயே த்வாதஶீ பாரணையும் செய்து 
மஹர்ஷிகளை வணங்கி நாட்டிற்கு வந்தான்.. ஶைவ்யாவும் கர்பவதியாகி தேஜஸ்வியான ஓர் புத்ரனை பெற்றாள்.. அப்புதல்வனும் நல்ல கர்மாக்களை செய்து க்‌ஷேமமாக இருந்தான்..
இந்த கதையை ஸ்ரீ க்ருஷ்ணபகவான் தர்மபுத்ரரான யுதிஷ்டிரருக்கு சொல்கின்றார்.

श्री भगवानुवाच 
शृणु राजन् प्रवक्ष्यामि शुक्ला पौषस्य या भवेत् ।
तस्यां विधिं महाराज लोकानां च हिताय वै।।
पूर्वेण विधिवद्राजन् कर्तव्यैषाप्रयत्नतः।
पुत्रदेति च नाम्नासौ सर्वपापहरा परा ।।
विद्यावन्तं यशस्वन्तं करोति तं नरं हरिः ।
यः करोति पुत्रदाया व्रतं कल्याण कारकम् ।।

சாந்த்ரமானப்படி பௌஷ ஶுக்ல பக்‌ஷத்தில் வரும் ஏகாதஶியானது  புத்ரதா என பெயர்கொண்டது. எல்லாவிதமான பாபத்தையும் போக்க வல்லது. இந்த வ்ரதத்தை அவஶ்யம் விதிவத்தாக கடைப்பிடிக்க வேண்டும். இதை அனுஷ்டிப்பவர்களுக்கு  நல்ல வித்யை புகழ் மற்றும் பல விதமான மங்களங்களை அளிக்க கூடியது..

एतद्व्रतं तु ये मर्त्याः कुर्वन्ति पुत्रदाzभिधम् ।
तेषां चैव भवेत्पुत्रोह्यवश्यं मोक्षगामिनाम् ।।
पठनाच्छ्रवणाद्राजन्नश्वमेध फलं लभेत् ।
इह लोके सुखं प्राप्य परलोके महीयते।।
இந்த வ்ரதத்தை எந்த மனிதர்கள் செய்கின்றனரோ அவர்களுக்கு அவஶ்யம் ஸத்புத்ரன் பிறப்பான் மோக்ஷத்தையும் அளிக்கவல்லது..
இந்த கதையானது படித்தாலோ கேட்டாலோ அஶ்வமேத யாக பலனை
கொடுக்க வல்லது.. இவ்வுலகில் எல்லா சுகத்தையும் கொடுத்து மேலும் மோக்ஷத்தையும் அளிக்க வல்லது.. 
இந்த கதையானது பவிஷ்யோத்தர புராணத்தில் க்ருஷ்ணார்ஜுன ஸம்வாதத்தில் உள்ளது..

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி எல்லோரும் பலன் அடைவோம்..

इत्थं 
ஸ்ரீநாத கனபாடீ Nallicheri
திருப்பதி

No comments:

Post a Comment